← Back

Mazhaikaala Veiyilaaga Song Lyrics

Singers : Sathya Prakash and Devu Mathew Music by : Deepan Chakravarthy Lyrics by : Uma Devi Male : Paayum oliyinai pola En manasellaam Minnal pooka seidhaal.. Male : Kaadhal oviyam theeta En vaazhvodu Vannam kondu vandhaal.. Male : Adhu enna mayamo? Aval vizhi paarthathum Idhayamae koochamaagi ponen Male : Iru nizhal oviyam Asai vadhai paarkiren Avalidam ennai thottru ponen… Male : Mazhaikaala veiyilaaga… Kaadhal ondrae thunaiyaaga.. Nee arugil irundhaal Aagayam mattum alla Adhai thaandi pogum Aatral peruvenae pennae.. Mazhaikaala veiyilaaga… Male : Por munaiyil Oru vaazh vandhu Enai ingu saithittu ponaalum Irappen meduvaai un ninaivalae Male : Nool ilayil Indha uyir mella pizhaithidum Vaaipinai adainthaalum Varuven meendum un thayavalae… Male : Oh! kaatril serum puyalum kooda Kaadhal kondaal thendral than.. Naatkal oodi oyindha pinnum Unnai vendi kaadhal kaakum Mazhaikaala veiyilaga… Female : Paayum oliyinai pola Un manasellaam Minnal pooka seidhen.. Female : Kaadhal oviyam theeta Un vaazhvodu Vannam konjam thandhen.. Female : Adhu enna mayamo? Un mugam paarthathum Idhayamae koochamaagi ponen Female : Iru nizhal oviyam Asai vadhai paarthadhum Unnidam ennai thottru ponen… Female : Mazhaikaala veiyilaa nee… Unnul naanae pudhaindhenae Un arugil irundhaal Aagayam mattum alla Adhai thaandi pogum Aatral peruvenae anbae Mazhaikaala veiyilaa nee… Veyilodu karaindhenae
பாடகர்கள் : சத்ய பிரகாஷ் மற்றும் தேவு மாத்தியூ இசை அமைப்பாளர் : தீபன் சக்ரவத்தி பாடல் ஆசிரியர் : உமாதேவி ஆண் : பாயும் ஒளியினை போல என் மனசெல்லாம் மின்னல் பூக்க செய்தாள்.. ஆண் : காதல் ஓவியம் தீட்ட என் வாழ்வோடு வண்ணம் கொண்டு வந்தாள் ஆண் : அது என்ன மாயமோ? அவள் விழி பார்த்ததும் இதயமே கூச்சமாகி போனேன் ஆண் : இரு நிழல் ஓவியம் அசைவதை பார்க்கிறேன் அவளிடம் என்னை தோற்று போனேன்… ஆண் : மழைக்கால வெயிலாக… காதல் ஒன்றே துணையாக.. நீ அருகில் இருந்தால் ஆகாயம் மட்டும் அல்ல அதை தாண்டி போகும் ஆற்றல் பெறுவேனே பெண்ணே.. மழைக்கால வெயிலாக… ஆண் : போர் முனையில் ஒரு வாழ் வந்து எனை இங்கு சாய்த்திட்டு போனாலும் இறப்பேன் மெதுவாய் உன் நினைவாலே ஆண் : நூல் இலையில் இந்த உயிர் மெல்ல பிழைத்திடும் வாய்ப்பினையும் அடைந்தாலும் வருவேன் மீண்டும் உன் தயவாலே… ஆண் : ஓ! காற்றில் சேரும் புயலும் கூட காதல் கொண்டால் தென்றல் தான்.. நாட்கள் ஓடி ஓய்ந்த பின்னும் உன்னை வேண்டி காதல் காக்கும் மழைக்கால வெயிலாக… பெண் : பாயும் ஒளியினை போல உன் மனசெல்லாம் மின்னல் பூக்க செய்தேன்.. பெண் : காதல் ஓவியம் தீட்ட உன் வாழ்வோடு வண்ணம் கொஞ்சம் தந்தேன் பெண் : அது என்ன மாயமோ? உன் முகம் பார்த்ததும் இதயமே கூச்சமாகி போனேன் பெண் : இரு நிழல் ஓவியம் அசைவதை பார்த்ததும் உன்னிடம் என்னை தோற்று போனேன்… பெண் : மழைக்கால வெயிலா நீ … உன்னுள் நானே புதைந்தேனே உன் அருகில் இருந்தால் ஆகாயம் மட்டும் அல்ல அதை தாண்டி போகும் ஆற்றல் பெறுவேனே அன்பே .. மழைக்கால வெயிலா நீ … வெயிலோடு கரைந்தேனே