← Back

Kannukkulle Song Lyrics – Sita Ramam

Singers : Haricharan Seshadri and Sinduri Music by : Vishal Chandrashekhar Lyrics by : Madhan Karky Female : Vinnodu minnadha vinmeen edhu Male : Adhu adhu un punnagai Female : Otrai poo pookindra dhesam edhu Male : Adhu adhu un paadhugai Female : Thudikkum erimalai edhu Male : Adhu en nenjam thaanadi Female : Inikkira thee edhu Male : Adhu undhan theendalae Female : Sudugira poi edhu Male : Adhu undhan naanamae anbae Both : Kannukkullae karaindha nilavu Enadhu iravai thirududho Uyirinai varududho Kannukkullae nuzhaintha kanavu Unadhu vadhanam varainthadho Irudhayam nirainthadho Carnatic : …………………. Female : Oosi kan kaana noolum edhu Male : Pennae un idai adhu Female : Yaarum kolla inbam kondathu yedhu Male : Nee soodum aadai adhu Female : Mayakkidum bodhaiyo edhu Male : Aduthu nee solla povadhu Female : Aadaigalai kalaintha piragum Ozhiyai anivadhu Male : Nila adhu Both : Kannukkullae karaindha nilavu Enadhu iravai thirududho Uyirinai varududho Kannukkullae nuzhaintha kanavu Unadhu vadhanam varainthadho Irudhayam nirainthadho Carnatic : …………………. Male : Kobangal illa yudham edhu Female : Meththaiyil nigazhvadhu Male : Mounam adhai vellum oar paadal edhu Female : Muththathin ozhi adhu Male : Badhil illa kelviyum edhu Female : Aduthu nee ketka povadhu Male : Iru nizhal nerungum pozhudhu Norungum porul edhu Female : Hmm mm hmm mm Both : Kannukkullae karaindha nilavu Enadhu iravai thirududho Uyirinai varududho Kannukkullae nuzhaintha kanavu Unadhu vadhanam varainthadho Irudhayam nirainthadho
பாடகர்கள் : ஹரிச்சரன் சேஷாத்திரி மற்றும் சிந்தூரி இசை அமைப்பாளர் : விஷால் சந்திரசேகர் பாடல் ஆசிரியர் : மதன் கார்க்கி ஆண் : விண்ணோடு மின்னாத விண்மீன் எது பெண் : அது அது உன் புன்னகை ஆண் : ஒற்றை பூ பூக்கின்ற தேசம் எது பெண் : அது அது உன் பாதுகை ஆண் : துடிக்கும் எரிமலை எது பெண் : அது என் நெஞ்சம் தானடி ஆண் : இனிக்கிற தீ எது பெண் : அது உந்தன் தீண்டலே ஆண் : சுடுகிற பொய் எது பெண் : அது உந்தன் நாணமே அன்பே இருவர் : கண்ணுக்குள்ளே கரைந்த நிலவு எனது இரவை திருடுதோ உயிரினை வருடுதோ கண்ணுக்குள்ளே நுழைந்த கனவு உனது வதனம் வரைந்ததோ இருதயம் நிறைந்ததோ கர்நாடிக் : …………….. பெண் : ஊசி கண் காணா நூலும் எது ஆண் : பெண்ணே உன் இடை அது பெண் : யாரும் கொள்ளா இன்பம் கொண்டது ஏது ஆண் : நீ சூடும் ஆடை அது பெண் : மயக்கிடும் போதையோ எது ஆண் : அடுத்து நீ சொல்ல போவது பெண் : ஆடைகளை களைந்த பிறகும் ஒளியை அணிவது ஆண் : நிலா அது இருவர் : கண்ணுக்குள்ளே கரைந்த நிலவு எனது இரவை திருடுதோ உயிரினை வருடுதோ கண்ணுக்குள்ளே நுழைந்த கனவு உனது வதனம் வரைந்ததோ இருதயம் நிறைந்ததோ கர்நாடிக் : ………………….. ஆண் : கோபங்கள் இல்லா யுத்தம் எது பெண் : மெத்தையில் நிகழுவது ஆண் : மௌனம் அதை வெல்லும் ஓர் பாடல் எது பெண் : முத்தத்தின் ஒலி அது ஆண் : பதில் இல்லா கேள்வியும் எது பெண் : அடுத்து நீ கேட்க போவது ஆண் : இரு நிழல் நெருங்கும் பொழுது நொறுங்கும் பொருள் எது பெண் : ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம் இருவர் : கண்ணுக்குள்ளே கரைந்த நிலவு எனது இரவை திருடுதோ உயிரினை வருடுதோ கண்ணுக்குள்ளே நுழைந்த கனவு உனது வதனம் வரைந்ததோ இருதயம் நிறைந்ததோ