← Back

Illatha Pillaikku Song Lyrics

Singer : Soolamangalam Rajalakshmi Music by : V. Kumar Lyrics by : Kannadasan Female : Piththaagi thottil ondrai Vilai koduththu vaangi vanthaen Vaiththaatta pillai illai Villaikku virkka yaarumillai Female : Illaatha pillaikku Naan enna solli thaalaatta Illaatha pillaikku Naan enna solli thaalaatta Eththanaiyo peyar irunthum Entha peyar naan sootta Female : Illaathathondrum illai Irunthum oru pillai illai Pollaatha deivangal En pulampalaiyum ketkkavillai Female : Illaatha pillaikku Naan enna solli thaalaatta Female : Karikaraikkum thengaaiyai Kaiyentha pillaiyillai Nirai kudaththu thanneerai Eeandralaiya pillaiyillai Female : Mazhai peithor vaasalilae Mann alaiya pillaiyillai Maakkolam thanai azhikka Magan ondru enakkillai Female : Illaatha pillaikku Naan enna solli thaalaatta Female : Vaazhai maram kulau thalli Vaazhntha payan thaan adaiyum…aa… Kozhiyinam petra payan Kunjugalaaithaan theriyum….aa…. Female : Paazhum maladi endra pattam pettrathandri Yaezhai naan enna pettraen Irul niraintha vaazhkkai ini Female : Illaatha pillaikku Naan enna solli thaalaatta Eththanaiyo peyar irunthum Entha peyar naan sootta Female : Illaatha pillaikku Naan enna solli thaalaatta
பாடகி : சூலமங்கலம் ராஜலட்சுமி இசையமைப்பாளர் : வி. குமார் பாடலாசிரியர் : கண்ணதாசன் பெண் : பித்தாகி தொட்டில் ஒன்றை விலை கொடுத்து வாங்கி வந்தேன் வைத்தாட்ட பிள்ளை இல்லை விலைக்கு விற்க யாருமில்லை…….. பெண் : இல்லாத பிள்ளைக்கு நான் என்ன சொல்லி தாலாட்ட இல்லாத பிள்ளைக்கு நான் என்ன சொல்லி தாலாட்ட எத்தனையோ பெயர் இருந்தும் எந்த பெயர் நான் சூட்ட பெண் : இல்லாததொன்றுமில்லை இருந்தும் ஒரு பிள்ளை இல்லை பொல்லாத தெய்வங்கள் என் புலம்பலையும் கேட்கவில்லை….. பெண் : இல்லாத பிள்ளைக்கு நான் என்ன சொல்லி தாலாட்ட பெண் : கறிகரைக்கும் தேங்காயை கையேந்த பிள்ளையில்லை நிறைக் குடத்து தண்ணீரை ஈன்றலைய பிள்ளையில்லை பெண் : மழை பெய்தோர் வாசலிலே மண் அலைய பிள்ளையில்லை மாக்கோலம் தனை அழிக்க மகன் ஒன்று எனக்கில்லை…….. பெண் : இல்லாத பிள்ளைக்கு நான் என்ன சொல்லி தாலாட்ட எத்தனையோ பெயர் இருந்தும் எந்த பெயர் நான் சூட்ட பெண் : இல்லாத பிள்ளைக்கு நான் என்ன சொல்லி தாலாட்ட பெண் : வாழை மரம் குலைத் தள்ளி வாழ்ந்த பயன் தான் அடையும்…..ஆ…. கோழியினம் பெற்ற பயன் குஞ்சுகளாய்தான் திரியும்…..ஆ….. பெண் : பாழும் மலடி என்ற பட்டம் பெற்றதன்றி ஏழை நான் என்ன பெற்றேன் இருள் நிறைந்த வாழ்க்கை இனி பெண் : இல்லாத பிள்ளைக்கு நான் என்ன சொல்லி தாலாட்ட எத்தனையோ பெயர் இருந்தும் எந்த பெயர் நான் சூட்ட பெண் : இல்லாத பிள்ளைக்கு நான் என்ன சொல்லி தாலாட்ட