← Back

Ore Oru Ooril Song Lyrics

Singer : Haricharan Music by : G. V. Prakash Kumar Male : Orae oru ooril oru veedu Uravugal koodum kili koodu Indha anbai pola veredhu Vaarthaigal ellaam podhaathu Male : Endha ooril vaazhndhidum bothum Paravai sontha koottai maranthiduma Engu sendru poothidum bothum Malarai vergal vittu koduthiduma Verengum illaadha veraarum sollaadha Idhigaasam indha paasam thaan Male : Orae oru ooril oru veedu Uravugal koodum kili koodu Thaanae naanae naanae Thanae naanae naa Thaanae naanae naanae Thanae naanae naa Male : Thaerodum veedhi Adhil mann vaasam veesum Thaazhvaaram engum Dhinam devaaram thaan Male : Moodaatha vaasal Adhu virunthombal pesum Ennaalum ingae Ada santhosham thaan Male : Kanneerai kangal Endrum paarthathillaiyae Mann meedhu sorgam idhuthaan Anilaadum muttrathil Anbennum raagathil Mayilaaga thulli aadipaadu Male : Orae oru ooril oru veedu Uravugal koodum kili koodu Male : Panam kaasu illai Perum pugazh kooda illai Edhu indha mannil Ada inbam tharum Male : Sondhangal vandhu Oru siripondru thandhaal Adhu pothum endrum Intha vaazhvae varam Male : Thanthai sol vedham endru Pottrum pillaigal Varungaala vizhudhallavaa Aagaayam veezhnthaalum Bhoologam saainthaalum Anbondrae nammai thaangum naalum Male : Orae oru ooril oru veedu Uravugal koodum kili koodu Thaanae naanae naanae Thanae naanae naa Thaanae naanae naanae Thanae naanae naa
பாடகர் : ஹரிசரண் இசை அமைப்பாளர் : ஜி. வி. பிரகாஷ் குமார் ஆண் : ஒரே ஒரு ஊரில் ஒரு வீடு உறவுகள் கூடும் கிளிக்கூடு இந்த அன்பை போல வேறேது வார்த்தைகள் எல்லாம் போதாது ஆண் : எந்த ஊரில் வாழ்ந்திடும் போதும் பறவை சொந்த கூட்டை மறந்திடுமா எங்கு சென்று பூத்திடும் போதும் மலரை வேர்கள் விட்டுக் கொடுத்திடுமா வேறெங்கும் இல்லாத வேராரும் சொல்லாத இதிகாசம் இந்த பாசம் தான் ஆண் : ஒரே ஒரு ஊரில் ஒரு வீடு உறவுகள் கூடும் கிளிக்கூடு தானே நானே நானே தானே நானே நா தானே நானே நானே தானே நானே நா ஆண் : தேரோடும் வீதி அதில் மண் வாசம் வீசும் தாழ்வாரம் எங்கும் தினம் தேவாரம் தான் ஆண் : மூடாத வாசல் அது விருந்தோம்பல் பேசும் எந்நாளும் இங்கே அட சந்தோசம் தான் ஆண் : கண்ணீரை கண்கள் என்றும் பார்த்ததில்லையே மண்மீது சொர்க்கம் இது தான் அணில் ஆடும் முற்றத்தில் அன்பென்னும் ராகத்தில் மயிலாக துள்ளி ஆடிப்பாடு ஆண் : ஒரே ஒரு ஊரில் ஒரு வீடு உறவுகள் கூடும் கிளிக்கூடு ஆண் : பணம் காசு இல்லை பெரும் புகழ் கூட இல்லை எது இந்த மண்ணில் அட இன்பம் தரும் ஆண் : சொந்தங்கள் வந்து ஒரு சிரிப்பொன்று தந்தால் அது போதும் என்றும் இந்த வாழ்வே வரம் ஆண் : தந்தை சொல் வேதம் என்று போற்றும் பிள்ளைகள் வருங்கால விழுதல்லவா ஆகாயம் வீழ்ந்தாலும் பூலோகம் சாய்ந்தாலும் அன்பொன்றே நம்மை தாங்கும் நாலும் ஆண் : ஒரே ஒரு ஊரில் ஒரு வீடு உறவுகள் கூடும் கிளிக்கூடு தானே நானே நானே தானே நானே நா தானே நானே நானே தானே நானே நா