← Back

Thondru Nigazhndha Song Lyrics

Singer : M. S. Viswanathan Music by : M. S. Viswanathan Lyrics by : Mahakavi Subramanya Baharathiyaar Male : Engal thaai…..engal thaai……engal thaai Male : Thondru nigazhnth thanaiththum unarnthidu Soozhkalai vaanargalum Ival endru piranthaval endrunaraatha Iyalbinalaam engal thaai…. Engal thaai…..engal thaai…… Male : Nallaram naadiya mannarai vaazhththi Nayam purivaal engal thaai Avar allavaraayin avarai vizhungi pin Anantha kooththiduvaal…. Anantha kooththiduvaal…. Male : Engal thaai…..engal thaai……engal thaai Male : Bhomiyinum porai mikkudaiyaal Perum punniya nenjinal thaai Enil thomizhai paar mun nindridung kaarkodunth Dhurkkai yanaiyaval thaai… Dhurkkai yanaiyaval thaai…
பாடகர் : எம். எஸ். விஸ்வநாதன் இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் பாடலாசிரியர் : மகாகவி சுப்ரமணிய பாரதியார் ஆண் : எங்கள் தாய்…….எங்கள் தாய்……எங்கள் தாய் ஆண் : தொன்று நிகழ்ந்த தனைத்தும் உணர்ந்திடு சூழ்கலை வாணர்களும் இவள் என்று பிறந்தவள் என்றுணராத இயல்பினளாம் எங்கள் தாய்…… எங்கள் தாய்…….எங்கள் தாய்…… ஆண் : நல்லறம் நாடிய மன்னரை வாழ்த்தி நயம் புரிவாள் எங்கள் தாய் அவர் அல்லவராயின் அவரை விழுங்கிப் பின் ஆனந்தக் கூத்திடுவாள்…… ஆனந்தக் கூத்திடுவாள்…… ஆண் : எங்கள் தாய்…….எங்கள் தாய்……எங்கள் தாய் ஆண் : பூமியினும் பொறை மிக்குடையாள் பெரும் புண்ணிய நெஞ்சினள் தாய் எனில் தோமிழைப் பார்முன் நின்றிடுங் காற்கொடுந் துர்க்கை யனையவள் தாய்….. துர்க்கை யனையவள் தாய்…..