← Back

Kaatu Vazhi Song Lyrics

Singer : Ilayaraja Music by : Ilayaraja Male : Kaatu vazhi kaal nadaiya Pora thambi Kaatu vazhi kaal nadaiya Pora thambi Pozhuthaagum munnae pora idam Serndhuvidu Male : Kaalayilae ila veiyulu kadumai illa Un kaal adiyil karuthu vecha kavalai illa Male : Pogum vazhi mela Pudhu pudhusa paadam varum Gavanam irundhaalae Ethirkaalam kai koodum Manasonnuthaan manushannukku Thunai irukkum Male : Kaatu vazhi kaal nadaiya Pora thambi Pozhuthaagum munnae pora idam Serndhuvidu Male : Vathaadha jeeva nadhi Vaazhkai ada Nambikkai thaan Iru pakkamum karaigalada Nikkama odatummae Odavidu Vazhi adacha thengividum Tharandhu vidu Male : Nadhi pol vegathilae Andha naalum oduthada Oru nimidam ponaalum Thirumbaadhu therunjikkada Indha ilavayasil Muzhuchikitta vazhi irukku Male : Kanavinilae oruthi angae Vandhaala Nalla kanivodu oru pechu Sonnaala Kaalam ellam thunai irupen Endraala Ada kan muzhicha kai vilagi Ponaala Male : Nenaivum kanavaaga Inga nejama nadandhiduma Dhenamum andha nenaipil Un vaazhvum thodarndhiduma Vaazhkai kanavilla nenaivillai Unmaiadaa…. Male : Kaatu vazhi kaal nadaiya Pora thambi Pozhuthaagum munnae pora idam Serndhuvidu Chorus : La la la la…. La la la la…. La la la la…. La la la la….
பாடகர் : இளையராஜா இசையமைப்பாளர் : இளையராஜா ஆண் : காட்டு வழி கால் நடையா போற தம்பி காட்டு வழி கால் நடையா போற தம்பி பொழுதாகும் முன்னே போற இடம் சேர்ந்துவிடு ஆண் : காலையிலே இள வெயிலு கடுமை இல்ல உன் கால் அடியில் கருத்து வெச்சா கவலை இல்ல ஆண் : போகும் வழி மேல புது புதுசா பாடம் வரும் கவனம் இருந்தாலே எதிர்காலம் கை கூடும் மனசொன்னுதான் மனுஷனுக்கு துணை இருக்கும் ஆண் : காட்டு வழி கால் நடையா போற தம்பி பொழுதாகும் முன்னே போற இடம் சேர்ந்துவிடு ஆண் : வத்தாத ஜீவ நதி வாழ்க்கை அட நம்பிக்கை தான் இரு பக்கமும் கரைகளடா நிக்காம ஓடட்டுமே ஓடவிடு வழி அடச்சா தேங்கிவிடும் திறந்து விடு ஆண் : நதி போல் வேகத்திலே அந்த நாளும் ஓடுதடா ஒரு நிமிடம் போனாலும் திரும்பாது தெரிஞ்சுக்கடா இந்த இளவயசில் முழுச்சிகிட்டா வழி இருக்கு ஆண் : கனவினிலே ஒருத்தி அங்கே வந்தாளா நல்ல கனிவோடு ஒரு பேச்சு சொன்னாளா காலம் எல்லாம் துணை இருப்பேன் என்றாளா அட கண் முழிச்சா கை விலகி போனாளா ஆண் : நினைவும் கனவாக இங்க நிஜமா நடந்திடுமா தெனமும் அந்த நினைப்பில் உன் வாழ்வும் தொடர்ந்திடுமா வாழ்க்கை கனவில்ல நினைவில்லை உண்மையடா ஆண் : காட்டு வழி கால் நடையா போற தம்பி பொழுதாகும் முன்னே போற இடம் சேர்ந்துவிடு குழு : ல ல ல ல ல ல ல ல ல ல ல ல ல ல ல ல