← Back

Naan Ungalai Ketkindren Song Lyrics

Singer : T. M. Soundararajan Music by : T.Pugazhenthi Male : Naan ungalai ketkkindren Male : Naan ungalai ketkkindren Naan ungalai ketkkindren Ezhai urimaiyai kaakka Varumaiyai neekka Urimaiyai kaakka varumaiyai neekka Ullavar sollum bathilenna Naan ungalai ketkkindren Male : {Poiyai nambi pizhaippavan veetil Neiyum paalum manappadha Kaiyai nambi uzhaippavan veetil Kanji kalayam uruluvadha} (2) Male : Azhuvadhai maatri sirippadhai kaatta Azhuvadhai maatri sirippadhai kaatta Arindhavar sollum bathilenna Male : Naan ungalai ketkkindren Male : {Silandhi valaiyai pinni vaithu Siru siru poochiyai pidikkuthaiyaa Palarai sila per paniya vaikka Panam thaan valaiyaai udhavudhaiyaa} (2) Male : Pattini theerkkum Thittangal theetta Pattini theerkkum thittangal theetta Padithavar sollum bathilenna Male : Naan ungalai ketkkindren Male : Ethanai kaalam indha kelvi Ezhaikku yeno indha needhi Buthanum yesuvum uthaman gaandhiyum Boomiyilae pirandhadhu veen thaana Male : Puratchiyil thondrum Pudhumaiyai kaana Puratchiyil thondrum pudhumaiyai kaana Purindhavar sollum bathilenna Male : Naan ungalai ketkkindren Ezhai urimaiyai kaakka Varumaiyai neekka Ullavar sollum bathilenna Naan ungalai ketkkindren
பாடகர் : டி. எம். சௌந்தரராஜன் இசையமைப்பாளர் : டி. புகழேந்தி ஆண் : நான் உங்களை கேட்கின்றேன் ஆண் : நான் உங்களை கேட்கின்றேன் நான் உங்களை கேட்கின்றேன் ஏழை உரிமையைக் காக்க வறுமையை நீக்க உரிமையைக் காக்க வறுமையை நீக்க உள்ளவர் சொல்லும் பதிலென்ன நான் உங்களை கேட்கின்றேன்…… ஆண் : {பொய்யை நம்பிப் பிழைப்பவன் வீட்டில் நெய்யும் பாலும் மணப்பதா கையை நம்பி உழைப்பவன் வீட்டில் கஞ்சி கலயம் உருளுவதா} (2) ஆண் : அழுவதை மாற்றி சிரிப்பதைக் காட்ட அழுவதை மாற்றி சிரிப்பதைக் காட்ட அறிந்தவர் சொல்லும் பதிலென்ன ஆண் : நான் உங்களை கேட்கின்றேன் ஆண் : {சிலந்தி வலையைப் பின்னி வைத்து சிறுசிறு பூச்சியை பிடிக்குதய்யா பலரை சில பேர் பணிய வைக்க பணம்தான் வலையாய் உதவுதய்யா} (2) ஆண் : பட்டினி தீர்க்கும் திட்டங்கள் தீட்ட பட்டினி தீர்க்கும் திட்டங்கள் தீட்ட படித்தவர் சொல்லும் பதிலென்ன ஆண் : நான் உங்களை கேட்கின்றேன் ஆண் : எத்தனை காலம் இந்தக் கேள்வி ஏழைக்கு ஏனோ இந்த நீதி புத்தனும் ஏசுவும் உத்தமன் காந்தியும் பூமியிலே பிறந்தது வீண்தானா ஆண் : புரட்சியில் தோன்றும் புதுமையைக் காண புரட்சியில் தோன்றும் புதுமையைக் காண புரிந்தவர் சொல்லும் பதிலென்ன… ஆண் : நான் உங்களை கேட்கின்றேன் ஏழை உரிமையைக் காக்க வறுமையை நீக்க உள்ளவர் சொல்லும் பதிலென்ன நான் உங்களை கேட்கின்றேன்……