← Back

Sempoove Poove Song Lyrics

Singers : M.G. Sreekumar and K.S. Chithra Music by : Ilayaraja Male : Sempoove poove un megam naan Vandhaal oru vazhi undo Female : Saayandhadum sangil thuli pattaalum Muthaagidum muthundaee… Male : Padai kondu nadakkum manmadha silayo ohoo.. Female : Mannavan viralgal pallavan uliyo ohoo. Male : Imaigal udhadugal aagumo oh.. Female : Vetkathin vidumurai aayulin varai dhaano Male : Sempoove poove un megam naan Vandhaal oru vazhi undo Female : Saayandhadum sangil thuli pattaalum Muthaagidum muthundaee… Male : Andhi chooriyanum kundril saaya Megham vandhu kachchai aagha Kaaman thanghum mogha poovil Muththa gumaalam Female : Thanga thingal netri pottum ittu Vennilaavin kannam thottu Nenjil aadum swasa chootil Kaadhal kutralam Male : Thaen thelikkum thendralaai Ninnarugil vandhu naan Selai nadhi oramaai neendhi vilayadaava Female : Naalum minnal konjum Thaazhampoovai cholli Male : Aasai kenikkullae Aadum meengal thulli Female : Kattilum kaalvali kollaadho Kaivalai kaigalai keeriyadho Male : Sempoove poove un megam naan Vandhaal oru vazhi undo Female : Saayandhadum sangil thuli pattaalum Muthaagidum muthundaee… Female : Indha thaamarai poo theeyil indru Kaathirukku ullam nondhu Kangal ennum thoondil Thumbhi paadi chellaadho Male : Andha kaaman ambu ennai chuttu Paavai nenjin naanam chuttu Megalayin nool arukkum selai pon poove Female : Vimmiyadhu thaamarai Vandhu thodum naalilaa Paavai mayil saayudhae Mannanan mani maarbilo Male : Muthathalae pennae Selai neiven kannae Female : Naanathaal orr aadai Soodi kolven naanae Male : Paayagum madi solladhae Panjanai pudhayal ragasiyamae Female : Saayandhadum sangil thuli pattaalum Muthaagidum muthundaee… Male : Sempoove poove un megam naan Vandhaal oru vazhi undo Female : Saayandhadum sangil thuli pattaalum Muthaagidum muthundaee…
பாடகி : கே.எஸ். சித்ரா பாடகர் : எம்.ஜி. ஸ்ரீகுமார் இசையமைப்பாளர் : இளையராஜா ஆண் : செம்பூவே பூவே உன் மேகம் நான் வந்தால் ஒரு வழியுண்டோ பெண் : சாய்ந்தாடும் சங்கில் துளி பட்டாலும் முத்தாகிடும் முத்துண்டே ஆண் : படைகொண்டு நடக்கும் மன்மதச் சிலையோ ஓஹோ பெண் : மன்னவன் விரல்கள் பல்லவன் உளியோ ஓஹோ ஆண் : இமைகள் உதடுகள் ஆகுமோ ஓ பெண் : வெட்கத்தின் விடுமுறை ஆயுளின் வரைதானோ ஆண் : செம்பூவே பூவே உன் மேகம் நான் வந்தால் ஒரு வழியுண்டோ பெண் : சாய்ந்தாடும் சங்கில் துளி பட்டாலும் முத்தாகிடும் முத்துண்டே ஆண் : அந்திச் சூரியனும் குன்றில் சாய மேகம் வந்து கச்சை ஆக காமன் தங்கும் மோகப் பூவில் முத்தக் கும்மாளம் பெண் : தங்கத் திங்கள் நெற்றிப் பொட்டும் இட்டு வெண்ணிலாவின் கன்னம் தொட்டு நெஞ்சிலாடும் சுவாச சூட்டில் காதல் குற்றாலம் ஆண் : தேன்தெளிக்கும் தென்றலாய் நின்னருகில் வந்துநான் சேலை நதியோரமாய் நீந்தி விளையாடவா பெண் : நாளும் மின்னல் கொஞ்சும் தாழம்பூவைச் சொல்லி ஆண் : ஆசைக் கேணிக்குள்ளே ஆடும் மீன்கள் துள்ளி பெண் : கட்டிலும் கால்வலி கொள்ளாதோ கைவளை கைகளை கீறியதோ ஆண் : செம்பூவே பூவே உன் மேகம் நான் வந்தால் ஒரு வழியுண்டோ பெண் : சாய்ந்தாடும் சங்கில் துளி பட்டாலும் முத்தாகிடும் முத்துண்டே பெண் : இந்தத் தாமரைப்பூ தீயில் இன்று காத்திருக்கு உள்ளம் நொந்து கண்கள் என்னும் தூண்டில் தும்பி பாடிச் செல்லாதோ ஆண் : அந்தக் காமன் அம்பு என்னைச் சுட்டு பாவை நெஞ்சின் நாணம் சுட்டு மேகலையின் நூலறுக்கும் சேலைப் பொன் பூவே பெண் : விம்மியது தாமரை வந்து தொடும் நாளிலா பாவை மயில் சாயுதே மன்னவனின் மார்பிலோ ஆண் : முத்தத்தாலே பெண்ணே சேலை நெய்வேன் கண்ணே பெண் : நாணத்தால் ஓர் ஆடை சூடிக்கொள்வேன் நானே ஆண் : பாயாகும் மடி சொல்லாதே பஞ்சணை புதையல் ரகசியமே பெண் : சாய்ந்தாடும் சங்கில் துளி பட்டாலும் முத்தாகிடும் முத்துண்டே ஆண் : செம்பூவே பூவே உன் மேகம் நான் வந்தால் ஒரு வழியுண்டோ பெண் : சாய்ந்தாடும் சங்கில் துளி பட்டாலும் முத்தாகிடும் முத்துண்டே