← Back

Megangal Ennai Thottu Song Lyrics

Singer : S.P. Balasubrahmaniyam Music by : Bharathwaj Male : { Megangal ennai thottu ponadhundu Sila minnalgal ennai urasi ponadhundu } (2) Male : Dhegangal ondrirandu kadandhadhundu Manam sillendru sila podhu silirthadhundu Moganamae unnai polae ennai yaarum Moochuvarai kollaiyitu ponadhillai Male : Aagamotham en nenjil unnai polae eri Amilathai veesiyavar evarumillai iiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiii Male : Megangal ennai thottu ponadhundu Sila minnalgal ennai urasi ponadhundu Male : Pirivondru nerumendru theriyum pennae En piriyathai adhanaal kuraika maten Eriyum udalendru theriyum pennae En ilamaiku theeyitu erika maten … nnnnn Male : Megangal ennai thottu ponadhundu Sila minnalgal ennai urasi ponadhundu Male : Kannimaiyum saamarangal veesum kaatril En kaadhal manam thundu thundaai udaiya kanden Thundu thundaai udaindha mana thoolgalaiyellam Adi thooyavalae unakul tholaithu vitten Male : Megangal ennai thottu ponadhundu Sila minnalgal ennai urasi ponadhundu Male : Sevvaayil jeevaraasi undaa endrae adi Dhinandhorum vingnyaanam thedal kollum Un sevvaayil ulladhadi enadhu jeevan Adhu theriyamal vingnyaanam edhanai vellum Male : Evvaaru kannirendil kalandhu ponen Adi evvaaru madiyodu tholaindhu ponen Ivvaaru thanimaiyil pesikonden En iravinai kavidhaiyaai mozhi peyarthen………….. Male : Megangal ennai thottu ponadhundu Sila minnalgal ennai urasi ponadhundu Male : Moodi moodi vaithaalum vidhaigal ellam Mannai mutti mutti mulaipadhu uyirin saatchi Odi odi pogaadhae oomai pennae Naam uyirodu vaazhvadharku kaadhal saatchi Male : { Megangal ennai thottu ponadhundu Sila minnalgal ennai urasi ponadhundu } (2) Male : Dhegangal ondrirandu kadandhadhundu Manam sillendru sila podhu silirthadhundu Moganamae unnai polae ennai yaarum Moochuvarai kollaiyitu ponadhillai Male : Aagamotham en nenjil unnai polae eri Amilathai veesiyavar evarumillai iiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiii
பாடகர் : எஸ்.பி. பாலசுப்ரமணியம் இசையமைப்பாளர் : பரத்வாஜ் ஆண் : { மேகங்கள் என்னைத் தொட்டுப் போனதுண்டு சில மின்னல்கள் என்னை உரசிப் போனதுண்டு } (2) ஆண் : தேகங்கள் ஒன்றிரண்டு கடந்ததுண்டு மனம் சில்லென்று சில போது சிலிர்த்ததுண்டு மோகனமே உன்னைப் போல என்னை யாரும் மூச்சுவரை கொள்ளையிட்டுப் போனதில்லை ஆண் : ஆகமொத்தம் என் நெஞ்சில் உன்னைப் போல எரி அமிலத்தை வீசியவர் எவருமில்லை ஆண் : மேகங்கள் என்னைத் தொட்டுப் போனதுண்டு சில மின்னல்கள் என்னை உரசிப் போனதுண்டு ஆண் : பிரிவொன்று நேருமென்று தெரியும் பெண்ணே என் பிரியத்தை அதனால் குறைக்க மாட்டேன் எரியும் உடலென்று தெரியும் பெண்ணே என் இளமைக்கு தீயிட்டு எரிக்க மாட்டேன் ஆண் : மேகங்கள் என்னைத் தொட்டுப் போனதுண்டு சில மின்னல்கள் என்னை உரசிப் போனதுண்டு ஆண் : கண்ணிமையும் சாமரங்கள் வீசும் காற்றில் என் காதல் மனம் துண்டுத் துண்டாய் உடையக் கண்டேன் துண்டு துண்டாய் உடைந்த மனத் தூள்களையெல்லாம் அடி தூயவளே உனக்குள் தொலைத்து விட்டேன் ஆண் : மேகங்கள் என்னைத் தொட்டுப் போனதுண்டு சில மின்னல்கள் என்னை உரசிப் போனதுண்டு ஆண் : செவ்வாயில் ஜீவராசி உண்டா என்றே அடி தினந்தோறும் விஞ்ஞானம் தேடல் கொள்ளும் உன் செவ்வாயில் உள்ளதடி எனது ஜீவன் அது தெரியாமல் விஞ்ஞானம் எதனை வெல்லும் ஆண் : எவ்வாறு கண்ணிரெண்டில் கலந்து போனேன் அடி எவ்வாறு மடியோடு தொலைந்து போனேன் இவ்வாறு தனிமையில் பேசிக்கொண்டேன் என் இரவினைக் கவிதையாய் மொழிபெயர்த்தேன் ஆண் : மேகங்கள் என்னைத் தொட்டுப் போனதுண்டு சில மின்னல்கள் என்னை உரசிப் போனதுண்டு ஆண் : மூடி மூடி வைத்தாலும் விதைகளெல்லாம் மண்ணை முட்டி முட்டி முளைப்பது உயிரின் சாட்சி ஓடி ஓடிப் போகாதே ஊமை பெண்ணே நாம் உயிரோடு வாழ்வதற்குக் காதல் சாட்சி ஆண் : { மேகங்கள் என்னைத் தொட்டுப் போனதுண்டு சில மின்னல்கள் என்னை உரசிப் போனதுண்டு } (2) ஆண் : தேகங்கள் ஒன்றிரண்டு கடந்ததுண்டு மனம் சில்லென்று சில போது சிலிர்த்ததுண்டு மோகனமே உன்னைப் போல என்னை யாரும் மூச்சுவரை கொள்ளையிட்டுப் போனதில்லை ஆண் : ஆகமொத்தம் என் நெஞ்சில் உன்னைப் போல எரி அமிலத்தை வீசியவர் எவருமில்லை