← Back

Thaali Seiyattuma Song Lyrics

Singers : S. P. Balasubramaniam and K. S. Chitra Music by : Sangeetharajan Male : Thaali seiyattumaa sammathamaa adiyammaa Thaali seiyattumaa sammathamaa adiyammaa Kanne enthan kannae hae Ponnae sudum ponnae Vizhiyasaivinil vidai solla vendum Ullam engum panneer vellam Siru madithanil oru idam kodu…. Male : Thaali seiyattumaa sammathamaa adiyammaa Thaali seiyattumaa sammathamaa adiyammaa Female : Hmm….vandu vanthu yaazh meettum velai Sokkivida koodaathu solai Male : Kannae unthan kangal Enthan kannai thodaatho Raththamellam unnai enni Saththam idaatho Adi iravu muzhuthum imaigal thudikkum Ada iruvarum thoda oru varam kodu Female : Saethi sollattumaa Vetkappadum intha mullai Male : Thaali seiyattumaa sammathamaa adiyammaa Male : Ooho oho ho…. Penmai idhu poovaaga vendum Thendralukku thaayaaga vendum Female : Sattam ittaal vatta nilaa kattupadaathu Nee vattamittaal vaanam mannil vanthu vidaathu Ival puriya marukkum padhiya kavithai Mugamathu vagai nagam ival nagai Male : Thaali seiyattumaa sammathamaa adiyammaa Female : Saethi sollattumaa Vetkappadum intha mullai Male : Illai badhil illai Thollai idhu thollai Female : Aahaan illai badhil illai Thollai idhu thollai…. Male : Haa haa illai badhil ilai Thollai idhu thollai
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் கே. எஸ். சித்ரா இசையமைப்பாளர் : சங்கீதராஜன் ஆண் : தாலி செய்யட்டுமா சம்மதமா அடியம்மா தாலி செய்யட்டுமா சம்மதமா அடியம்மா கண்ணே எந்தன் கண்ணே ஹே பொன்னே சுடும் பொன்னே விழியசைவினில் விடை சொல்ல வேண்டும் உள்ளம் எங்கும் பன்னீர் வெள்ளம் சிறு மடிதனில் ஒரு இடம் கொடு… ஆண் : தாலி செய்யட்டுமா சம்மதமா அடியம்மா தாலி செய்யட்டுமா சம்மதமா அடியம்மா பெண் : ஹ்ம்ம்…..வண்டு வந்து யாழ் மீட்டும் வேளை சொக்கிவிடக் கூடாது சோலை ஆண் : கண்ணே உந்தன் கண்கள் எந்தன் கண்ணை தொடாதோ ரத்தமெல்லாம் உன்னை எண்ணி சத்தம் இடாதோ அடி இரவு முழுதும் இமைகள் துடிக்கும் அட இருவரும் தொட ஒரு வரம் கொடு…. பெண் : சேதி சொல்லட்டுமா வெட்கப்படும் இந்த முல்லை ஆண் : தாலி செய்யட்டுமா சம்மதமா அடியம்மா ஆண் : ஓஹோ ஓஹோ ஹோ….. பெண்மை இது பூவாக வேண்டும் தென்றலுக்கு தாயாக வேண்டும் பெண் : சட்டம் இட்டால் வட்ட நிலா கட்டுப்படாது நீ வட்டமிட்டால் வானம் மண்ணில் வந்து விடாது இவள் புரிய மறுக்கும் புதிய கவிதை முகமது வகை நகம் இவள் நகை ஆண் : தாலி செய்யட்டுமா சம்மதமா அடியம்மா பெண் : சேதி சொல்லட்டுமா வெட்கப்படும் இந்த முல்லை ஆண் : இல்லை பதில் இல்லை தொல்லை இது தொல்லை பெண் : ஆஹான் இல்லை பதில் இல்லை தொல்லை இது தொல்லை. ஆண் : ஹா ஹா இல்லை பதில் இல்லை தொல்லை இது தொல்லை