← Back

Aduthavan Potta Thaalathu Song Lyrics

Singers : Dharapuram Sundarajan and L. R. Eswari Music by : M. S. Viswanathan Lyrics by : Vaali Male : Aduththavan potta thaalaththukellaam Aadaathae aadaathae aadaathae Aduththavan potta thaalaththukellaam Aadaathae aadaathae aadaathae Antha aattamum paattamum kudumba ponnukku Aagaathae aagaathae aagaathae…. Female : Eduththathukkellaam kurukkae vizhunthu Kedukkaathae kedukkaathae kedukkaathae Eduththathukkellaam kurukkae vizhunthu Kedukkaathae kedukkaathae kedukkaathae Enga paattan soththila aattam pottaal Thadukkaathae thadukkaathae thadukkaathae Male : Aduththavan potta thaalaththukellaam Aadaathae aadaathae aadaathae aadaathae Male : Veththilai pottu sivakka venum Paththini ponnu udhadu Kanda saayaththai poosi vaaya Thoranthaa panaththukku kedu Male : Koththu manjalai kozhaichchu potta Mugaththiyum paaru Adhil maavai araichchu poosiyirunthaa Sagikkala paaru….aahaa…..sagikkala paaru…. Female : Koondhalukkeththa poovai soodi Azhagu paarkkanum Nalla kudumba pennum aadal kalaiyai Pazhagi paarkkanum Female : Iduppa valaichchu aadumpothu Rasichchu paarkkanum Unakku ishtamillaatti kashtapadaama Odhungi irukkanum Male : Aduththavan potta thaalaththukellaam Aadaathae aadaathae aadaathae aadaathae Male : Mathavi potta aattaththinaalae Kovalan kettaanae Avan mangal mangai kannagi pennai Maranthu ponaanae Male : Sutta piragu puththi poranthu Sattiyai vittaanae Avan pattathukkellaam kaaranam Intha naatiyamthaanae Female : Vanna mayilgalil chinna Kuyilgalil pennum oru jaathi Aval aadi thirivathum paadi parappathum Iyarkkaiyin needhi Female : Kannukkazhagaana ponnu mugamthaan Vennilavin paathi Adhai kattuppaduththa sattam vithippathu Anthakkaala saedhi aahaahaa anthakaala saedhi Male : Aduththavan potta thaalaththukellaam Aadaathae aadaathae aadaathae Female : Eduththathukkellaam kurukkae vizhunthu Kedukkaathae kedukkaathae kedukkaathae
பாடகர்கள் : தாராபுரம் சுந்தரராஜன் மற்றும் எல். ஆர். ஈஸ்வரி இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் பாடலாசிரியர் : வாலி ஆண் : அடுத்தவன் போட்ட தாளத்துகெல்லாம் ஆடாதே ஆடாதே ஆடாதே அடுத்தவன் போட்ட தாளத்துகெல்லாம் ஆடாதே ஆடாதே ஆடாதே அந்த ஆட்டமும் பாட்டமும் குடும்ப பொண்ணுக்கு ஆகாதே ஆகாதே ஆகாதே…. பெண் : எடுத்ததுக்கெல்லாம் குறுக்கே விழுந்து கெடுக்காதே கெடுக்காதே கெடுக்காதே எடுத்ததுக்கெல்லாம் குறுக்கே விழுந்து கெடுக்காதே கெடுக்காதே கெடுக்காதே எங்க பாட்டன் சொத்தில ஆட்டம் போட்டால் தடுக்காதே தடுக்காதே தடுக்காதே….. ஆண் : அடுத்தவன் போட்ட தாளத்துகெல்லாம் ஆடாதே ஆடாதே ஆடாதே ஆடாதே ஆண் : வெத்திலை போட்டு சிவக்க வேணும் பத்தினி பொண்ணு உதடு கண்ட சாயத்தைப் பூசி வாயத் தொறந்தா பணத்துக்கு கேடு…. ஆண் : கொத்து மஞ்சளை கொழைச்சு போட்ட முகத்தையும் பாரு அதில் மாவை அரைச்சு பூசியிருந்தா…… சகிக்கல பாரு……ஆஹா……சகிக்கல பாரு….. பெண் : கூந்தலுக்கேத்த பூவைச் சூடி அழகு பார்க்கணும் நல்ல குடும்ப பெண்ணும் ஆடல் கலையை பழகிப் பார்க்கணும் பெண் : இடுப்ப வளைச்சு ஆடும்போது ரசிச்சுப் பார்க்கணும் உனக்கு இஷ்டமில்லாட்டி கஷ்டப்படாம ஒதுங்கி இருக்கணும் ஆண் : அடுத்தவன் போட்ட தாளத்துகெல்லாம் ஆடாதே ஆடாதே ஆடாதே ஆடாதே ஆண் : மாதவி போட்ட ஆட்டத்தினாலே கோவலன் கெட்டானே அவன் மங்கல மங்கை கண்ணகி பெண்ணை மறந்து போனானே ஆண் : சுட்டப் பிறகு புத்தி பொறந்து சட்டியை விட்டானே அவன் பட்டதுக்கெல்லாம் காரணம் இந்த நாட்டியம் தானே பெண் : வண்ண மயில்களில் சின்னக் குயில்களில் பெண்ணும் ஒரு ஜாதி அவள் ஆடித் திரிவதும் பாடிப் பறப்பதும் இயற்கையின் நீதி பெண் : கண்ணுக்கழகான பொண்ணு முகம்தான் வெண்ணிலவின் பாதி அதை கட்டுப்படுத்த சட்டம் விதிப்பது அந்தக்கால சேதி ஆஹாஹா அந்தக்கால சேதி ஆண் : அடுத்தவன் போட்ட தாளத்துகெல்லாம் ஆடாதே ஆடாதே ஆடாதே பெண் : எடுத்ததுக்கெல்லாம் குறுக்கே விழுந்து கெடுக்காதே கெடுக்காதே கெடுக்காதே