← Back

Maatram Song Lyrics

Singer : Inno Genga Music by : Yuvan Shankar Raja Lyrics by : Pa. Vijay Male : Kaalangal maarum Kanavellaam maarum Sollaamal irudhayangal Idam maarum Male : Nettrai pol endrum Indru irukkaathu Naalaigal naalum Niram maaridum Male : Sila kaalam saaralum Sila kaalam veiyilum Kadigaaram oda oda Kaalam maarudhu Male : Maatrangal ondru dhaan Maaraadhu vaazhvilae Vannangal maari maari Vaanam neeludhu Male : Adada nam vaazhkkai enbathu Adhil nooru maattram kondathu Irundhaalum ella maatramum Artham ullathu oo Male : Pagalenna iravin maattramae Iravenna pagalin maattramae Maatrangal thaanae vaazhvilae Maayam seiyuthu oo Male : Uravae unnai pirivenbadha Pirivae unnai uravenbadha Irandum serum vali enbadhae Sugam enbadha Male : Ninaivae unnai kanvenbadha Kanavae unnai ninaivenbadha Idhu dhaan vaazhvin azhagenbadha Adada enbadha Male : Indru pookkum pookkal Naalaikku vaadum Idhu dhaan nesamae Maru naalil meendum poo pookkum Adhu dhaan vaazhvin arthamae Male : Irukaraigal illai endraalae Nadhi payanam poguma Maatrangal illai endraalae Manam thannai unaruma Male : Vaigarai megam Vidigindra neram Iravennum paadal Niram maarum Male : Veiyilin naatkal Vidumurai ketkkum Mazhai vandhu bhoomi Mugam maarum Male : Manam oru vaanilai Mazhai veiyil polavae Ellaamum serndhu vandhu Vaazhkkai maarudhae Male : Maatrangal ondru thaan Maaraadhu vaazhvilae Vannangal maari maari Vaanam neeludhu Male : Nimidathil naatkal maaridum Nodivondril vaazhvae maaridum Maatrangal thaanae nenjilae Artham serthidum oo Male : Pookkal thaan sarugaai maaridum Sarugellaam poovaai maaridum Maatrangal thaanae vaazhvilae Maayam seithidum oo
பாடகர் : இன்னோ கெங்கா இசை அமைப்பாளர் : யுவன் ஷங்கர் ராஜா பாடல் ஆசிரியர் : பா. விஜய் ஆண் : காலங்கள் மாறும் கனவெல்லாம் மாறும் சொல்லாமல் இருதயங்கள் இடம் மாறும் ஆண் : நேற்றை போல் என்றும் இன்றே இருக்காது நாளைகள் நாளும் நிறம் மாறிடும் ஆண் : சில காலம் சாரலும் சில காலம் வெயிலும் கடிகாரம் ஓட ஓட காலம் மாறுது ஆண் : மாற்றங்கள் ஒன்று தான் மாறாது வாழ்விலே வண்ணங்கள் மாறி மாறி வானம் நீளுது ஆண் : அடடா நம் வாழ்க்கை என்பது அதில் நூறு மாற்றம் கொண்டது இருந்தாலும் எல்லா மாற்றமும் அர்த்தம் உள்ளது ஓஓஓ ஆண் : பகலென்ன இரவின் மாற்றமே இரவென்ன பகலின் மாற்றமே மாற்றங்கள் தானே வாழ்விலே மாயம் செய்யுது ஓ ஆண் : உறவே உன்னை பிரிவென்பதா பிரிவே உன்னை உறவென்பதா இரண்டும் சேரும் வலி என்பதே சுகம் என்பதா ஆண் : நினைவே உன்னை கனவென்பதா கனவே உன்னை நினைவென்பதா இது தான் வாழ்வின் அழகென்பதா அடடா என்பதா ஆண் : இன்று பூக்கும் பூக்கள் நாளைக்கு வாடும் இது தான் நேசமே மறு நாளில் மீண்டும் பூ பூக்கும் அது தான் வாழ்வின் அர்த்தமே ஆண் : இருகரைகள் இல்லை என்றாலே நதி பயணம் போகுமா மாற்றங்கள் இல்லை என்றாலே மனம் தன்னை உணருமா ஆண் : வைகறை மேகம் விடிகின்ற நேரம் இரவென்னும் பாடல் நிறம் மாறும் ஆண் : வெயிலின் நாட்கள் விடுமுறை கேட்கும் மழை வந்து பூமி முகம் மாறும் ஆண் : மனம் ஒரு வானிலை மழை வெயில் போலவே எல்லாமும் சேர்ந்து வந்து வாழ்க்கை மாறுதே ஆண் : மாற்றங்கள் ஒன்று தான் மாறாது வாழ்விலே வண்ணங்கள் மாறி மாறி வானம் நீளுது ஆண் : நிமிடத்தில் நாட்கள் மாறிடும் நொடிவொன்றில் வாழ்வே மாறிடும் மாற்றங்கள் தானே நெஞ்சிலே அர்த்தம் சேர்த்திடும் ஓஓ ஆண் : பூக்கள் தான் சருகாய் மாறிடும் சருகெல்லாம் பூவாய் மாறிடும் மாற்றங்கள் தானே வாழ்விலே மாயம் செய்திடும் ஓஓ