← Back

Vinnukku Meladai Song Lyrics

Vinnukku Meladai Song Lyrics is a track from Naanal Tamil Film– 1965, Starring R. Muthuraman, Major Sundararajan, Srikanth, C. K. Nagesh, K. Vijayan, K. R. Vijaya and Sowkar Janaki. This song was sung by T. M. Soundarajan and P. Susheela and the music was composed by V. Kumar. Lyrics works are penned by Suradha. Singers : T. M. Soundarajan and P. Susheela Music Director : V. Kumar Lyricist : Suradha Male : Vinnukku melaadai paruva mazhai megam Veenaikku mel aadai narambugalin koottam Female : Kannukku mel aadai kakkum iru imaigal Kanavukku mel aadai thodarndhu varum thookkam Male : Vinnukku melaadai paruva mazhai megam Female : Mannukku mel aadai Male : Mmmm.. mannukku mel aadai ra ra ra Mannukku mel aadai marathin nizhal aagum Female : Haiyae Mannukku mel aadai vanna mai iruttu Manadhirkku mel aadai Male : Valarndhu varum ninaivu Male : Pathukku mel aadai Female : Pathukku mel aadai… aa…aa…aa… Male : Ahaa Female : Aa..aa..aa..aa Male : Niruthu..raagam paadatha Bathilai sollu Female : Pathukku mel aadai Male : Theriyalaiya Mmm sollattumaa Pathukku melaadai pathinondraeyaagum Pakkathil nee irundhaal Pala kadhai uruvaagum Male : Vinnukku melaadai paruva mazhai megam Veenaikku mel aadai narambugalin koottam Female : Kaalathin adaiyaalam paruvangalaeyaagum Kaadhalargal nadathuvadhu kann serdhal aagum Kaadhalargal nadathuvadhu kann serdhal aagum Male : Idhu varaiyil pudhu ulagam Naam kandathillai Edhu varaiyil sendraalum Ellai idharkkillai Both : Vinnukku melaadai paruva mazhai megam Veenaikku mel aadai narambugalin koottam Hmmm mmm mmm mmm hmm mm mmm mm
பாடகர்கள் : டி. எம். சௌந்தராஜன் மற்றும் பி. சுஷீலா இசை அமைப்பாளர் : வி. குமார் பாடல் ஆசிரியர் : சுரதா ஆண் : விண்ணுக்கு மேலாடை பருவ மழை மேகம் வீணைக்கு மேலாடை நரம்புகளின் கூட்டம் பெண் : கண்ணுக்கு மேலாடை காக்கும் இரு இமைகள் கனவுக்கு மேலாடை தொடர்ந்து வரும் தூக்கம் ஆண் : விண்ணுக்கு மேலாடை பருவ மழை மேகம் பெண் : மண்ணுக்கு மேலாடை ஆண் : ம் ம் ம் ..மண்ணுக்கு மேலாடை ரா ரா ரா மண்ணுக்கு மேலாடை மரத்தின் நிழலாகும் பெண் : ஹையே மண்ணுக்கு மேலாடை வண்ண மையிருட்டு மனதிற்கு மேலாடை ஆண் : வளர்ந்து வரும் நினைவு ஆண் : பத்துக்கு மேலாடை பெண் : பத்துக்கு மேலாடை..ஆ ஆ ஆ ஆ ஆ ஆண் : ஆஹா பெண் : ஆ ஆ ஆ ஆ ஆண் : நிறுத்து..ராகம் பாடாதே.. பதிலைச் சொல்லு பெண் : பத்துக்கு மேலாடை ஆண் : தெரியலையா? ம் சொல்லட்டுமா? பத்துக்கு மேலாடை பதினொன்றேயாகும் பக்கத்தில் நீ இருந்தால் பல கதை உருவாகும் ஆண் : விண்ணுக்கு மேலாடை பருவ மழை மேகம் வீணைக்கு மேலாடை நரம்புகளின் கூட்டம் பெண் : காலத்தின் அடையாளம் பருவங்களேயாகும் காதலர்கள் நடத்துவது கண் சேர்தல் ஆகும் காதலர்கள் நடத்துவது கண் சேர்தல் ஆகும் ஆண் : இது வரையில் புது உலகம் நாம் கண்டதுமில்லை எது வரையில் சென்றாலும் எல்லை இதற்கில்லை இருவர் : விண்ணுக்கு மேலாடை பருவ மழை மேகம் வீணைக்கு மேலாடை நரம்புகளின் கூட்டம் ஹ்ம்ம் ம்ம் ம்ம் ம்ம் ஹ்ம்ம் ம்ம் ம்ம்