← Back

Kodaiyila Song Lyrics

Singers : Vaikom Vijayalakshmi, Kalyani Nair and Pradeep Kumar Music by : Santhosh Narayanan Female : Kodaiyila mazhai pola Enn uyirae ne irukka Vaadailum analaga Varuven unkooda Kaalai ilan kathiragaa Kannarugae ne irukka Maalai varum nilavagi Thoduven kaathoda Female : {Pona senmathula Senja thavam ithuvoo Innum kodi senmam Koodavarum uravoo} (2) Female : Kaariyam nooru seidhu Maanil vaazhvathu peridhu illai Unthan kaaladi thadam arinthu Sellum paathaigal mudivathillai Female : Aalayam thedi sendru Seiyum pusaigal thevai illai Unthan kaiviral thodum pozhudhu Thunbam tholaivilum varuvathillai Male : Uravethu vadivethuvo Konda uravugal unarnthu thoda Irul ethu oli yethuvo Rendu irudhayam kalanthu vida Female : Maridum yaavum indru Sollum vaarthaiyil nesamum illai Unmai kaadhalai poruthamattil Entha maatramum nigazhvathillai Female : Asaigal theerum mattum Kollum anbinil azhagu illai Venthu pogira velaiylum Anbu thee endrum anaivathillai Male : Uravethu vadivethuvo Konda uravugal unarnthu thoda Irul ethu oli yethuvo Rendu irudhayam kalanthu vida Female : Kodaiyila mazhai pola Enn uyirae ne irukka Vaadailum analaga Varuven unkooda Kaalai ilan kathiragaa Kannarugae ne irukka Maalai varum nilavagi Thoduven kaathoda Female : {Pona senmathula Senja thavam ithuvoo Innum kodi senmam Koodavarum uravoo} (2)
பாடகிகள் : வைக்கோம் விஜயலக்ஷ்மி, கல்யாணி நாயர் பாடகா் : பிரதீப் குமார் இசையமைப்பாளா் : சந்தோஷ் நாராயணன் பெண் : கோடையில மழை போல என் உயிரே நீ இருக்க வாடையிலும் அனலாக வருவேன் உன் கூட காலை இளங்கதிராக கண்ணருகே நீ இருக்க மாலைவரும் நிலவாகி தொடுவேன் காத்தோட பெண் : { போன சென்மத்துல செஞ்ச தவம் இதுவோ இன்னும் கோடி சென்மம் கூட வரும் உறவோ } (2) பெண் : காரியம் நூறு செய்து மண்ணில் வாழ்வது பெரிது இல்லை உந்தன் காலடி தடம் அறிந்து செல்லும் பாதைகள் முடிவதில்லை பெண் : ஆலயம் தேடி சென்று செய்யும் பூசைகள் தேவை இல்லை உந்தன் கைவிரல் தொடும் பொழுது துன்பம் தொலைவிலும் வருவதில்லை ஆண் : உறவெது வடிவெதுவோ கொண்ட உறவுகள் உணர்ந்து தொட இருள் எது ஒளி எதுவோ ரெண்டு இருதயம் கலந்து விட பெண் : மாறிடும் யாவும் இன்று சொல்லும் வார்த்தையில் நெசமும் இல்லை உண்மை காதலை பொருத்தமட்டில் எந்த மாற்றமும் நிகழ்வதில்லை பெண் : ஆசைகள் தீரும் மட்டும் கொள்ளும் அன்பினில் அழகு இல்லை வெந்து போகிற வேலையிலும் அன்பு தீ என்றும் அணைவதில்லை ஆண் : உறவெது வடிவெதுவோ கொண்ட உறவுகள் உணர்ந்து தொட இருள் எது ஒளி எதுவோ ரெண்டு இருதயம் கலந்து விட பெண் : கோடையில மழை போல என் உயிரே நீ இருக்க வாடையிலும் அனலாக வருவேன் உன் கூட காலை இளங்கதிராக கண்ணருகே நீ இருக்க மாலைவரும் நிலவாகி தொடுவேன் காத்தோட பெண் : { போன சென்மத்துல செஞ்ச தவம் இதுவோ இன்னும் கோடி சென்மம் கூட வரும் உறவோ } (2)