← Back

Thaai Kaatha Pillai Song Lyrics

Singer : P. Susheela Music by : K. V. Mahadevan Lyrics by : Kannadasan Female : Thaai kaatha pillai ennai Vel kakkavillai endru Thaai kaatha pillai ennai Vel kakkavillai endru Naal paarthu vittadhaiyaa kandhaiyaa Ennai nee kaakkavillaiyendraal Yaar kakka koodumaiyaa Paal vaarkkum naalidhuvoo sollaiyoo Female : Thaai kaatha pillai ennai Vel kakkavillai endru Naal paarthu vittadhaiyaa kandhaiyaa Ennai nee kaakkavillaiyendraal Yaar kakka koodumaiyaa Paal vaarkkum naalidhuvoo sollaiyoo Enakku paal vaarkkum naalidhuvoo sollaiyoo Female : Ettaandum ettavillai ettadha vaan ulagai Ettumpadikku vaithaai yen aiyaa Ettaandum ettavillai ettadha vaan ulagai Ettumpadikku vaithaai yen aiyaa Annai sottum kanneerai andha kuttraala aruviyendroo Kotti kulikka veithaai velaiyaa Female : Thaai kaatha pillai ennai Vel kakkavillai endru Naal paarthu vittadhaiyaa kandhaiyaa Ennai nee kaakkavillaiyendraal Yaar kakka koodumaiyaa Paal vaarkkum naalidhuvoo sollaiyoo Enakku paal vaarkkum naalidhuvoo sollaiyoo Female : Thaaiyum adimai endhan thandhai adimai Nitham naanum adimai vadivelaiyaaa Thaaiyum adimai endhan thandhai adimai Nitham naanum adimai vadivelaiyaaa Nee saeiyum koduthu ema noyum koduthu Oru paayum virithu vaithaai yen aiyaa Female : Kandamani oli kaathu nirkaadho karunai en maeni Kanneer nadhiyinai adaithu vidaayoo thandaayudhapaani Nambiya perai kaapaai endraan androor tamil gyaani Aiyoo veladhu poiyaa enakkarul purivaaya nee Idhu koyil maniyo illai kaalan maniyoo Solvaai muruga varuvaai muruga Muruga muruga muruga muruga
பாடகி : பி. சுஷீலா இசை அமைப்பாளர் : கே. வி. மஹாதேவன் பாடல் ஆசிரியர் : கண்ணதாசன் பெண் : தாய் காத்த பிள்ளை என்னை வேல் காக்கவில்லை என்று தாய் காத்த பிள்ளை என்னை வேல் காக்கவில்லை என்று நாள் பார்த்து விட்டதைய்யா கந்தைய்யா என்னை நீ காக்கவில்லையென்றால் யார் காக்க கூடுமய்யா பால் வார்க்கும் நாளிதுவோ சொல்லய்யா பெண் : தாய் காத்த பிள்ளை என்னை வேல் காக்கவில்லை என்று நாள் பார்த்து விட்டதைய்யா கந்தைய்யா என்னை நீ காக்கவில்லையென்றால் யார் காக்க கூடுமய்யா பால் வார்க்கும் நாளிதுவோ சொல்லய்யா பெண் : எட்டாண்டும் எட்டவில்லை எட்டாத வானுலகை எட்டும்படிக்கு வைத்தாய் ஏனய்யா எட்டாண்டும் எட்டவில்லை எட்டாத வானுலகை எட்டும்படிக்கு வைத்தாய் ஏனய்யா அன்னை சொட்டும் கண்ணீரை அந்த குற்றால அருவியென்று கொட்டி குளிக்க வைத்தாய் வேலய்யா.. பெண் : தாய் காத்த பிள்ளை என்னை வேல் காக்கவில்லை என்று நாள் பார்த்து விட்டதைய்யா கந்தைய்யா என்னை நீ காக்கவில்லையென்றால் யார் காக்க கூடுமய்யா பால் வார்க்கும் நாளிதுவோ சொல்லய்யா பெண் : தாயும் அடிமை எந்தன் தந்தை அடிமை நித்தம் நானும் அடிமை வடிவேலைய்யா…..ஆ….ஆ…… தாயும் அடிமை எந்தன் தந்தை அடிமை நித்தம் நானும் அடிமை வடிவேலைய்யா….. நீ சேயும் கொடுத்து எம நோயும் கொடுத்து ஒரு பாயும் விரித்து வைத்தாய் ஏனய்யா…… பெண் : கண்டாமணி ஒலி காத்து நிற்காதோ கருணை என் மேனி கண்ணீர் நதியினை அடைத்து விடாயோ தண்டாயுதபாணி நம்பிய பேரை காப்பாய் என்றான் அன்றோர் ஞானி அய்யா வேலது பொய்யா எனக்கருள் புரிவாயா நீ இது கோயில் மணியோ இல்லை காலன் மணியோ சொல்வாய் முருகா வருவாய் முருகா முருகா……..முருகா…….முருகா……….முருகா……