← Back

Yaaraga Irundhal Song Lyrics

Singer : P. Susheela Music by : S. M. Subbaih Naidu Lyrics by : Kannadasan Female : ……………… Female : Yaaraaga irunthaal enna Yaaraaga irunthaal enna Idhil arasanenna illai aandiyenna Aiyyaa yaaraaga irunthaal enna Yaaraaga irunthaal enna Female : Paramporul samasthaanam kondaadum pantham Aa…aa…aaa….aa….aa….. Paarpathum ketpathum ellorkkum sontham Paarpathum ketpathum ellorkkum sontham Manathilethu ninaivilaethu pirivinai Iraivan veedu tharuvathaagum uravinai Female : Ninaikka ninaikka inikkum sugangal Peruvathenna urimaiyudan ketpavargal Female : Yaaraaga irunthaal enna…. Female : Sivanukku umaiyenna aththai magalaa Sivanukku umaiyenna aththai magalaa Avan maganukku deivaanai maman magalaam Avan maganukku deivaanai maman magalaam Iraivanin veettinilor jaathiyillai Iraivanin veettinilor jaathiyillai Adhai ennidam ketka oru needhiyillaiyae Female : Vaigai aattrin karaiyil vaazhum sokkanum Malaiyarajan nangaiyaana selviyum Inainthu mudiththu anainthu suvaiththa Inimaiyathu kanavumilai kadhaiyumillai Female : Yaaraaga irunthaal enna…. Female : Kannukkor thadai kaalukkor thadai Pengalukke iduveer Male : …………. Female : Ponnukko illai pugazhukko Sugam vanthathillai ariveer Male : …………. Female : Vinnukko illai mannukko Idhu pudhumaiyillai periyeer Male : …………….. Male : Vedikkai illai vegam udane Konjam vazhi viduveer Male : ………………… Female : Yaaraaga irunthaal enna Idhil arasanenna illai aandiyenna Aiyyaa yaaraaga irunthaal enna Yaaraaga irunthaal enna
பாடகி : பி. சுஷீலா இசையமைப்பாளர் : எஸ். எம். சுப்பையா நாயுடு பாடலாசிரியர் : கண்ணதாசன் பெண் : ………………… பெண் : யாராக இருந்தால் என்ன யாராக இருந்தால் என்ன இதில் அரசனென்ன இல்லை ஆண்டியென்ன ஐயா யாராக இருந்தால் என்ன யாராக இருந்தால் என்ன பெண் : பரம்பொருள் சமஸ்தானம் கொண்டாடும் பந்தம் ஆ…ஆ….ஆஅ…ஆ….ஆ….. பார்ப்பதும் கேட்பதும் எல்லோர்க்கும் சொந்தம் பார்ப்பதும் கேட்பதும் எல்லோர்க்கும் சொந்தம் மனதிலேது நினைவிலேது பிரிவினை இறைவன் வீடு தருவதாகும் உறவினை பெண் : நினைக்க நினைக்க இனிக்கும் சுகங்கள் பெறுவதென்ன உரிமையுடன் கேட்பவர்கள் பெண் : யாராக இருந்தால் என்ன…… பெண் : சிவனுக்கு உமையென்ன அத்தை மகளா சிவனுக்கு உமையென்ன அத்தை மகளா அவன் மகனுக்கு தெய்வானை மாமன் மகளாம் அவன் மகனுக்கு தெய்வானை மாமன் மகளாம் இறைவனின் வீட்டினிலோர் ஜாதியில்லையே இறைவனின் வீட்டினிலோர் ஜாதியில்லையே அதை என்னிடம் கேட்க ஒரு நீதியில்லையே பெண் : வைகை ஆற்றின் கரையில் வாழும் சொக்கனும் மலையராஜன் நங்கையான செல்வியும் இணைந்து முடித்து அணைந்து சுவைத்த இனிமையது கனவுமில்லை கதையுமில்லை பெண் : யாராக இருந்தால் என்ன…… பெண் : கண்ணுக்கோர் தடை காலுக்கோர் தடை பெண்களுக்கே இடுவீர் ஆண் : ……………….. பெண் : பொன்னுக்கோ இல்லை புகழுக்கோ சுகம் வந்ததில்லை அறிவீர் ஆண் : …………………. பெண் : விண்ணுக்கோ இல்லை மண்ணுக்கோ இது புதுமையில்லை பெரியீர் ஆண் : ………………………. ஆண் : வேடிக்கை இல்லை வேகம் உடனே கொஞ்சம் வழி விடுவீர்….. ஆண் : …………………. பெண் : யாராக இருந்தால் என்ன இதில் அரசனென்ன இல்லை ஆண்டியென்ன ஐயா யாராக இருந்தால் என்ன யாராக இருந்தால் என்ன