← Back

Nilave Nilave Song Lyrics

Singers : Vijay and Anuradha Sriram Music by : Vidyasagar Male : Nilavae nilavae nilavae nilavae Nillu nillu thiruvaai mozhigal Sollu…sollu Male : Malarae malarae malarae malarae Sollu sollu manadhai thamizhil Sollu….sollu Male : Kangal solgindra baashai ellaam Kandu theligindra gnyanam illai Thangach chevvaayin thaazh thirandhu Sollu sollu sollu….sollu Female : Kodi konda arumbu malarvadharkku Kodiyodu manukkal koduppadhillai Pazhangal pazhuthadhum paravaikkellaam Marangal thandhi ondrum adippadhillai Female : Mounathai pol pennin manam uraikka Manidharin baashaikku valimai illai Mozhiyae po po po… Azhage vaa vaa vaa Mozhiyae po po po… Azhage vaa vaa vaa Male : Radhiyae radhiyae radhiyae radhiyae Kaadhal ennum kanivaai mozhiyil Sonnaal…sonnaal Male : Valarum piraiyae piraiyae piraiyae Vaanam etti thodavum mudiyum Ennaal….ennaal Male : Vaayil varaindha oru vaarthai sonnaal Kaatrai kadan vaangi parandhu poven Kaala veliyodu karaindhu poven Sollu sollu sollu…sollu Female : Vandugal oliseidhu kettadhundu Malargal sathamittu paarthadhundaa Nadhigal sorpozhivu seivadhundu Karaigalin mounam endrum kalaippadhundaa Female : Solgira mozhigal theerndhu vidum Sollaadha kaadhal theervadhundaa Mozhiyae po po po… Azhage vaa vaa vaa Mozhiyae po po po… Azhage vaa vaa vaa Male : Nenjae nenjae nenjae nenjae Kenja kenja innum mounam Enna….enna Male : Kanavae kanavae kanavae kanavae Kanneer vatri kannil jeevan Minna….minna Male : Vaarthai un vaarthai nindru ponaal Vaazhkkai en vaazhkkai nindru pogum Udalai en jeevan udhari pogum Sollu sollu sollu…sollu Female : Ullangal pesum mozhi arindhaal Un jeevan tholaikka thevai illai Iru kangal pesum baashaigalai Irunooru mozhigal solvadhillai Female : Thaan konda kaadhal mozhivadharku Thamizh naattup pengal thunivadhillai Mozhiyae po po po… Azhage vaa vaa vaa Mozhiyae po po po… Azhage vaa vaa vaa
பாடகர்கள் : விஜய் மற்றும் அனுராதா ஸ்ரீராம் இசை அமைப்பாளர் : வித்யாசாகர் ஆண் : நிலவே நிலவே நிலவே நிலவே நில்லு நில்லு திருவாய் மொழிகள் சொல்லு…சொல்லு ஆண் : மலரே மலரே மலரே மலரே சொல்லு சொல்லு மனதை தமிழில் சொல்லு…சொல்லு ஆண் : கண்கள் சொல்கின்ற பாஷை எல்லாம் கண்டு தெளிகின்ற ஞானம் இல்லை தங்கச் செவ்வாயின் தாழ் திறந்து சொல்லு சொல்லு சொல்லு சொல்லு பெண் : கொடி கொண்ட அரும்பு மலர்வதற்கு கொடியோடு மனுக்கள் கொடுப்பதில்லை பழங்கள் பழுத்தும் பறவைக்கெல்லாம் மரங்கள் தந்தி ஒன்றும் அடிப்பதில்லை பெண் : மௌனத்தைப் போல் பெண்ணின் மனம் உரைக்க மனிதரின் பாஷைக்கு வலிமை இல்லை மொழியே போ போ போ அழகே வா வா வா மொழியே போ போ போ அழகே வா வா வா ஆண் : ரதியே ரதியே ரதியே ரதியே காதல் எண்ணம் கனிவாய் மொழியில் சொன்னால் சொன்னால் ஆண் : வளரும் பிறையே பிறையே பிறையே வானம் எட்டி தொடவும் முடியும் என்னால் என்னால் ஆண் : வாயில் வரைந்த ஒரு வார்த்தை சொன்னால் காற்றை கடன் வாங்கி பறந்து போவேன் கால வெளியோடு கரைந்து போவேன் சொல்லு சொல்லு சொல்லு சொல்லு பெண் : வண்டுகள் ஒலி செய்து கேட்டதுண்டு மலர்கள் சத்தமிட்டு பார்த்ததுண்டா நதிகள் சொற்பொழிவு செய்வதுண்டு கரைகளின் மௌனம் என்றும் கலைந்ததுண்டா பெண் : சொல்கிற மொழிகள் தீர்ந்து விடும் சொல்லாத காதல் தீர்வதுண்டா மொழியே போ போ போ அழகே வா வா வா மொழியே போ போ போ அழகே வா வா வா ஆண் : நெஞ்சே நெஞ்சே நெஞ்சே நெஞ்சே கெஞ்ச கெஞ்ச இன்னும் மௌனம் என்ன என்ன ஆண் : கனவே கனவே கனவே கனவே கண்ணீர் வற்றி கண்ணில் ஜீவன் மின்ன மின்ன ஆண் : வார்த்தை உன் வார்த்தை நின்று போனால் வாழ்க்கை என் வாழ்க்கை நின்று போகும் உடலை என் ஜீவன் உதறிப் போகும் சொல்லு சொல்லு சொல்லு சொல்லு பெண் : உள்ளங்கள் பேசும் மொழி அறிந்தால் உன் ஜீவன் தொலைக்க தேவை இல்லை இரு கண்கள் பேசும் பாஷைகளை இரு நூறு மொழிகள் சொல்வதில்லை பெண் : தான் கொண்ட காதல் மொழிவதற்கு தமிழ் நாட்டுப் பெண்கள் துணிவதில்லை மொழியே போ போ போ அழகே வா வா வா மொழியே போ போ போ அழகே வா வா வா