← Back

Kaalamellam Adi Male Song Lyrics

Singer : Unni Krishnan Music by : Deva Male : Kaalamellaam adi kaalamellaam Ivan unnodu unnodu unnodu Kanmaniyae yen sogangal Un kannodu kannodu kannodu Male : Aanavam pol oru sumaiyillai Anbinai poloru azhagillai Paasamum nesamum ariyaamal Vaazhvadhil thuliyum sugamillai Male : Kannil konjam anbai veithaal Sutri sutri poonjolai Anbu kaigal thottu paarthaal Paalai kooda neeroodai Male : Kaalamellaam adi kaalamellaam Ivan unnodu unnodu unnodu Male : Pookalin azhagu oru dhinamae Poovaiyin azhagu sila dhinamae Azhiyaadha azhagu anbinilae Male : Koondhalin azhagu udhirum varai Gopura azhagu idiyum varai Anbukku azhagu irudhi varai Un manam unnaiyae dhooramaai veithathae Adhu unakkindru uravaanadhaa Male : Sangeethamum sandhosamum Anbu konda vaazhvil undu Kandupudi pon maanae Anbu konda nenjam podhum Ezhai kooda seemaanae Male : Kaalamellaam adi kaalamellaam Ivan unnodu unnodu unnodu Male : Veiyil varum munnae kudai pidithaan Verthidum munnae visiri vittaan Urangaamal kannum sivandhu vittaan Male : Unakkena thannai koduthu vittaan Sudu mozhi sonnaai poruthu vittaan Thaaiyaagi unnai jeyithu vittaan Male : Paaradi paingili kaadhalin sannidhi Adhil oru deivam ivan allava Unakkagavae ivan vaazhgiraan Edharkaaga undhan vaazhkai nee solladi Thani thani vaazhvin artham kedaiyadhadi Male : Kaalamellaam adi kaalamellaam Ivan unnodu unnodu unnodu Kanmaniyae yen sogangal Un kannodu kannodu kannodu Male : Aanavam pol oru sumaiyillai Anbinai poloru azhagillai Paasamum nesamum ariyaamal Vaazhvadhil thuliyum sugamillai Male : Kannil konjam anbai veithaal Sutri sutri poonjolai Anbu kaigal thottu paarthaal Paalai kooda neeroodai Male : Kaalamellaam adi kaalamellaam Ivan unnodu unnodu unnodu
பாடகர் : உன்னிகிருஷ்ணன் இசை அமைப்பாளர் : தேவா ஆண் : காலமெல்லாம் அடி காலமெல்லாம் இவன் உன்னோடு உன்னோடு உன்னோடு கண்மணியே ஏன் சோகங்கள் உன் கண்ணோடு கண்ணோடு கண்ணோடு ஆண் : ஆணவம் போலொரு சுமையில்லை அன்பினை போலொரு அழகில்லை பாசமும் நேசமும் அறியாமல் வாழ்வதில் துளியும் சுகமில்லை ஆண் : கண்ணில் கொஞ்சம் அன்பை வைத்தால் சுற்றி சுற்றி பூஞ்சோலை அன்புக் கைகள் தொட்டுப் பார்த்தால் பாலை கூட நீரோடை ஆண் : காலமெல்லாம் அடி காலமெல்லாம் இவன் உன்னோடு உன்னோடு உன்னோடு ஆண் : பூக்களின் அழகு ஒரு தினமே பூவையின் அழகு சில தினமே அழியாத அழகு அன்பினிலே ஆண் : கூந்தலின் அழகு உதிரும் வரை கோபுர அழகு இடியும் வரை அன்புக்கு அழகு இறுதி வரை உன் மனம் உன்னையே தூரமாய் வைத்ததே அது உனக்கின்று உறவானதா ஆண் : சங்கீதமும் சந்தோஷமும் அன்புக் கொண்ட வாழ்வில் உண்டு கண்டுபிடி பொன் மானே அன்புக் கொண்ட நெஞ்சம் போதும் ஏழை கூட சீமானே ஆண் : காலமெல்லாம் அடி காலமெல்லாம் இவன் உன்னோடு உன்னோடு உன்னோடு… ஆண் : வெய்யில் வரும் முன்னே குடைப் பிடித்தான் வேர்த்திடும் முன்னே விசிறி விட்டான் உறங்காமல் கண்ணும் சிவந்து விட்டான் ஆண் : உனக்கென தன்னை கொடுத்து விட்டான் சுடு மொழி சொன்னாய் பொறுத்து விட்டான் தாயாகி உன்னை ஜெயித்து விட்டான் ஆண் : பாரடி பைங்கிளி காதலின் சந்நிதி அதில் ஒரு தெய்வம் இவனல்லவா உனக்காகவே இவன் வாழ்கிறான் எதற்காக உந்தன் வாழ்க்கை நீ சொல்லடி தனித்தனி வாழ்வின் அர்த்தம் கிடையாதடி ஆண் : காலமெல்லாம் அடி காலமெல்லாம் இவன் உன்னோடு உன்னோடு உன்னோடு கண்மணியே ஏன் சோகங்கள் உன் கண்ணோடு கண்ணோடு கண்ணோடு ஆண் : ஆணவம் போலொரு சுமையில்லை அன்பினை போலொரு அழகில்லை பாசமும் நேசமும் அறியாமல் வாழ்வதில் துளியும் சுகமில்லை ஆண் : கண்ணில் கொஞ்சம் அன்பை வைத்தால் சுற்றி சுற்றி பூஞ்சோலை அன்புக் கைகள் தொட்டுப் பார்த்தால் பாலை கூட நீரோடை ஆண் : காலமெல்லாம் அடி காலமெல்லாம் இவன் உன்னோடு உன்னோடு உன்னோடு