← Back

Kaattiloru Singakuttiyam Song Lyrics

Singers : S. P. Balasubrahmanyam and Chorus Music by : Ilayaraja Chorus : Vevevee Veveveveveveve…. Veve veve ve veve veve ve Veveveveveveveveveve…..vevevee Male : Kaatiloru singakuttiyaam Chorus : Vevevee vevevee veveveeveee Male : Vilayatil athu romba suttiyaam Chorus : Vevevee vevevee veveveeveee Male : Peththa amma appava Athu vittu pirinju Ada thananthaniya Thaththi thaavi thirinju Athu kaadu malai medugala Thaandi vanthudicham Male : Kaatiloru singakuttiyaam Chorus : Vevevee vevevee veveveeveee Male : Kulla nari kootathilae Kutti singam sendhukichaam Koodatha gunatha ellaam Thaanum kathukichaam Male : Kulla nari kootathilae Kutti singam sendhukichaam Koodatha gunatha ellaam Thaanum kathukichaam Male : Kona vazhi kurukku vazhi Poga ennikichaam Poi purattu kola thiruttu Naalum pannidichaam Male : Palavarusham poiyiduchaam Male : Singam perisu aayiduchaam Male : Atha vedar ellaam thedarappo Odi vanthuducham hoi Male : Kaatiloru singakuttiyaam Chorus : Vevevee vevevee veveveeveee Male : Vantha idam nalla idam Vanna maan vaazhum idam Maan thola pothikittu Singam vandhudichaam Male : Vantha idam nalla idam Vanna maan vaazhum idam Maan thola pothikittu Singam vandhudichaam Male : Appavi maangal ellam Anbu pannidichaam Atha kandu singathukku Kaneer vandhudichaam Male : Athan kodumai ponathada Anbukadimai aanathada Athu maangalukku raapagalaa Kaaval ninndrathada hoi Male : Kaatiloru singakuttiyaam Chorus : Vevevee vevevee veveveeveee Male : Kaaval nindra singathukku Kaalam seitha sodhanai pol Kutti maan kooda oru Thaayum vanthiduchaam Male : Kaaval nindra singathukku Kaalam seitha sodhanai pol Kutti maan kooda oru Thaayum vanthiduchaam Male : Kaadhal maan thannai ingae Kaana vanthudicham Antha maan jodiyai thaan Singam konnudichaam Male : Thappai maraikka vazhi illa Thappi nadakka mudiyala Mana ulaichalilae alaichalilae Singam urumichaam hoi Roarrrrrrrrrrrrrr……….
பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமணியம் இசையமைப்பாளர் : இளையராஜா குழு : வெவேவீவீ வெவே வெவே வே வேவேவேவேவீ வெவே வெவே வே வெவே வெவேவீ ஆண் : காட்டில் ஒரு சிங்கக்குட்டியாம் குழு : வேவேவேவீ வேவேவேவீ ஆண் : விளையாட்டில் அது ரொம்ப சுட்டியாம் குழு : வேவேவேவீ வேவேவேவீ ஆண் : பெத்த அம்மா அப்பாவை அது விட்டுப் பிரிஞ்சு அட தன்னந்தனியா தத்தித் தாவித் திரிஞ்சு அது காடு மலை மேடுகள தாண்டி வந்திடுச்சாம் ஆண் : காட்டில் ஒரு சிங்கக்குட்டியாம் குழு : வேவேவேவீ வேவேவேவீ ஆண் : குள்ள நரி கூட்டத்திலே குட்டி சிங்கம் சேர்ந்துகிச்சாம் கூடாத குணத்தை எல்லாம் தானும் கத்துக்கிச்சாம் ஆண் : குள்ள நரி கூட்டத்திலே குட்டி சிங்கம் சேர்ந்துகிச்சாம் கூடாத குணத்தை எல்லாம் தானும் கத்துக்கிச்சாம் ஆண் : கோண வழி குறுக்கு வழி போக எண்ணிக்கிச்சாம் பொய் புரட்டு கொலை திருட்டு நாலும் பண்ணிடுச்சாம் பல வருஷம் போயிடுச்சாம் சிங்கம் பெரிசு ஆயிடுச்சாம் அத வேடரெல்லாம் தேடறப்போ ஓடி வந்துடுச்சாம் ஹோய் ஆண் : காட்டில் ஒரு சிங்கக்குட்டியாம் குழு : வேவேவேவீ வேவேவேவீ ஆண் : வந்த இடம் நல்ல இடம் வண்ண மான் வாழும் இடம் மான் தோலைப் போத்திக்கிட்டு சிங்கம் வந்திடுச்சாம் ஆண் : வந்த இடம் நல்ல இடம் வண்ண மான் வாழும் இடம் மான் தோலைப் போத்திக்கிட்டு சிங்கம் வந்திடுச்சாம் ஆண் : அப்பாவி மான்களெல்லாம் அன்பு பண்ணிடுச்சாம் அதக் கண்டு சிங்கத்துக் கண்ணீர் வந்திடுச்சாம் அதன் கொடுமை போனதடா அன்புக்கு அடிமை ஆனதடா அது மான்களுக்கு ராப்பகலா காவல் நின்றதடா ஹோய் ஆண் : காட்டில் ஒரு சிங்கக்குட்டியாம் குழு : வேவேவேவீ வேவேவேவீ ஆண் : காவல் நின்ற சிங்கத்துக்கு காலம் செய்த சோதனைபோல் குட்டிமான் கூட ஒரு தாயும் வந்திடுச்சாம் ஆண் : காவல் நின்ற சிங்கத்துக்கு காலம் செய்த சோதனைபோல் குட்டிமான் கூட ஒரு தாயும் வந்திடுச்சாம் ஆண் : காதல் மான் தன்னை இங்கே காண வந்திடுச்சாம் அந்த மான் ஜோடியைத்தான் சிங்கம் கொன்னுடிச்சாம் தப்பை மறைக்க வழியில்லே தப்பி நடக்க முடியல்லே மன உளைச்சலிலே அலைச்சலிலே சிங்கம் உறுமிச்சாம் ஹோய்