← Back

Ivargal Indiyargal Song Lyrics

Singers : Malaysia Vasudevan and B. S. Sasirekha Music by : Manoj Gyan Male : Ivargal indiayargal Female : Ivargal indiayargal Male : India mannin panpukkum anbukkum Ilakkanamaga iruppavarkal Female : Nalla ilakkiyamaga nilappavargal Both : Ivargal indiayargal Male : Than maganaayinum thavarugal purinthaal Nan magan alla ena ninaiththaai Intha nallavan pillaiyin uyir pariththaar Vaaikku rushiyaai oottiya kaiyaal Vaaikkarisi alli pottuvittaar Vaaikku rushiyaai oottiya kaiyaal Vaaikkarisi alli pottuvittaar Female : Paarinil dharmam vazhnthida vendi Paasaththai mannil pudhaiththuvittaar Both : Ivargal indiayargal Ivargal indiayargal Male : Nandri naranthavan nadaipinamendru Ingoru thanthai vidhi seithaar Magan irunthum avanukku thithi seithaar Female : Vilakkin adiyil iruttirunthaalum Velichcham kodukkum anaivarukkum Vilakkin adiyil iruttirunthaalum Velichcham kodukkum anaivarukkum Male : Aduththavar kanneer thudaippavar vaazhvum Adhupol ingae amainthirukkum Both : Ivargal indiayargal Ivargal indiayargal Male : Koottu kudumbaththin paaraththai ellaam Yaettru kondaan intha sumaithaangi Antha imai pola kaaththaan thuyil neengi Female : Than kai pattri thaali anintha Nangaiyai kooda thodavillai Than kai pattri thaali anintha Nangaiyai kooda thodavillai Male : Naayagan polae naayagi amainthaal Bhoomiyil ivarkkor inaiyillai Male : Ivargal indiayargal Female : Ivargal indiayargal Male : India mannin panpukkum anbukkum Ilakkanamaga iruppavarkal Female : Nalla ilakkiyamaga nilappavargal Both : Ivargal indiayargal Ivargal indiayargal
பாடகர்கள் : மலேசியா வாசுதேவன் மற்றும் பி. எஸ். சசிரேஹா இசையமைப்பாளர் : மனோஜ் ஞான் ஆண் : இவர்கள் இந்தியர்கள் பெண் : இவர்கள் இந்தியர்கள் ஆண் : இந்திய மண்ணின் பண்புக்கும் அன்புக்கும் இலக்கணமாக இருப்பவர்கள் பெண் : நல்ல இலக்கியமாக நிலைப்பவர்கள் இருவர் : இவர்கள் இந்தியர்கள் ஆண் : தன் மகனாயினும் தவறுகள் புரிந்தால் நன் மகன் அல்ல என நினைத்தார் இந்த நல்லவன் பிள்ளையின் உயிர் பறித்தார் வாய்க்கு ருசியாய் ஊட்டிய கையால் வாய்க்கரிசி அள்ளிப் போட்டுவிட்டார் வாய்க்கு ருசியாய் ஊட்டிய கையால் வாய்க்கரிசி அள்ளிப் போட்டுவிட்டார் பெண் : பாரினில் தர்மம் வாழ்ந்திட வேண்டி பாசத்தை மண்ணில் புதைத்துவிட்டார் இருவர் : இவர்கள் இந்தியர்கள்….. இவர்கள் இந்தியர்கள்…… ஆண் : நன்றி மறந்தவன் நடைப்பிணமென்று இங்கொரு தந்தை விதி செய்தார் மகன் இருந்தும் அவனுக்கு திதி செய்தார் பெண் : விளக்கின் அடியில் இருட்டிருந்தாலும் வெளிச்சம் கொடுக்கும் அனைவருக்கும் விளக்கின் அடியில் இருட்டிருந்தாலும் வெளிச்சம் கொடுக்கும் அனைவருக்கும் ஆண் : அடுத்தவர் கண்ணீர் துடைப்பவர் வாழ்வும் அதுபோல் இங்கே அமைந்திருக்கும் இருவர் : இவர்கள் இந்தியர்கள் இவர்கள் இந்தியர்கள்…… ஆண் : கூட்டுக் குடும்பத்தின் பாரத்தை எல்லாம் ஏற்றுக் கொண்டான் இந்த சுமைதாங்கி அதை இமை போல் காத்தான் துயில் நீங்கி பெண் : தன் கைப் பற்றி தாலி அணிந்த நங்கையை கூட தொடவில்லை தன் கைப் பற்றி தாலி அணிந்த நங்கையை கூட தொடவில்லை ஆண் : நாயகன் போலே நாயகி அமைந்தாள் பூமியில் இவர்க்கோர் இணையில்லை ஆண் : இவர்கள் இந்தியர்கள் பெண் : இவர்கள் இந்தியர்கள் ஆண் : இந்திய மண்ணின் பண்புக்கும் அன்புக்கும் இலக்கணமாக இருப்பவர்கள் பெண் : நல்ல இலக்கியமாக நிலைப்பவர்கள் இருவர் : இவர்கள் இந்தியர்கள் இவர்கள் இந்தியர்கள்