← Back

Ponal Pogattum Poda Song Lyrics

Singer : T.M. Soundararajan Music by : Viswanathan Ramamoorthy Male : ………………….. Male : { Ponaal pogatum poda } (2) Indha boomiyil nilaiyaai Vaazhnthavar yaaradaa Male : Ponaal pogatum poda Indha boomiyil nilaiyaai Vaazhnthavar yaaradaa Male : Ponaal pogatum poda Male : …………………… Male : Vanthadhu Theriyum povathu engae Vaasal namakae theriyaadhu Male : Vanthavarellam Thangi vittal indha Mannil namakae idamethu Male : Vaazhkai Enbathu viyabaram Varum jananam Enbathu varavaagum Adhil maranam enbathu selavaagum Male : { Ponaal pogatum poda } (4) Male : Iraval thanthavan Ketkindran adhai Illaiyendral avan viduvana Male : Uravai solli Azhuvathanaalae uyirai Meendum tharuvana Male : Kookuralaalae Kidaikaathu idhu Courtuku ponaal Jeikaathu andha Kottaiyil nuzhainthaal Thirumbaathu Male : { Ponaal pogatum poda } (2) Indha boomiyil nilaiyaai Vaazhnthavar yaaradaa Male : Ponaal pogatum poda Male : ……………… Male : Elumbukum Sathaikum maruthuvam Kanden idharkoru Marunthai kandena Male : Irunthaal Avalai thannanthaniyae Eriyum nerupil viduvena Male : Namakum Melae oruvanada Avan naalum therintha Thalaivanada dhinam Naadagam aadum kalaignanada Male : { Ponaal pogatum poda } (2) Indha boomiyil nilaiyaai Vaazhnthavar yaaradaa Male : { Ponaal pogatum poda } (3) Male : …………………………
பாடகர் : டி.எம். சௌந்தரராஜன் இசையமைப்பாளர் : விஸ்வநாதன் ராமமூர்த்தி ஆண் : ……………………….. ஆண் : { போனால் போகட்டும் போடா } (2) இந்த பூமியில் நிலையாய் வாழ்ந்தவர் யாரடா ஆண் : போனால் போகட்டும் போடா இந்த பூமியில் நிலையாய் வாழ்ந்தவர் யாரடா ஆண் : போனால் போகட்டும் போடா ஆண் : ……………………….. ஆண் : வந்தது தெரியும் போவது எங்கே வாசல் நமக்கே தெரியாது ஆண் : வந்தவரெல்லாம் தங்கிவிட்டால் இந்த மண்ணில் நமக்கே இடமேது ஆண் : வாழ்க்கை என்பது வியாபாரம் வரும் ஜனனம் என்பது வரவாகும் அதில் மரணம் என்பது செலவாகும் ஆண் : { போனால் போகட்டும் போடா } (4) ஆண் : இரவல் தந்தவன் கேட்கின்றான் அதை இல்லை என்றால் அவன் விடுவானா ஆண் : உறவைச் சொல்லி அழுவதனாலே உயிரை மீண்டும் தருவானா ஆண் : கூக்குரலாலே கிடைக்காது இது கோர்ட்டுக்கு போனால் ஜெய்க்காது அந்தக் கோட்டையில் நுழைந்தால் திரும்பாது ஆண் : { போனால் போகட்டும் போடா } (2) இந்த பூமியில் நிலையாய் வாழ்ந்தவர் யாரடா ஆண் : போனால் போகட்டும் போடா ஆண் : ……………………….. ஆண் : எலும்புக்கும் சதைக்கும் மருத்துவம் கண்டேன் இதற்கொரு மருந்தைக் கண்டேனா ஆண் : இருந்தால் அவளைத் தன்னந்தனியே எரியும் நெருப்பில் விடுவேனா ஆண் : நமக்கும் மேலே ஒருவனடா அவன் நாலும் தெரிந்த தலைவனடா தினம் நாடகமாடும் கலைஞனடா ஆண் : { போனால் போகட்டும் போடா } (2) இந்த பூமியில் நிலையாய் வாழ்ந்தவர் யாரடா ஆண் : { போனால் போகட்டும் போடா } (3) ஆண் : ………………………..