← Back

Oru Then Kinnam Song Lyrics

Singers : T. M. Soundarajan and P. Susheela Music by : V. Kumar Lyrics by : Kannadasan Male : Thaen kinnam ketten Aval naan endru vandhaal Suvai paal vannam ketten Aval poonginnam thandhaal Oru thaen kinnam ketten Female : Koduthaal koduthaal Kollamal koduthaal Sindhaamal avan eduthaan Mudithaan endru ninaithaal mella Mupaalum padithu vittaan Male : Oru thaen kinnam ketten Female : Aval naan endru vandhaal Female : Enna thudippo ammadi podhum Naalai meendum endraan Male : Idhuvum vendum Inondrum vendam Ippodhae thevai endraal Female : Kaadhal endraal kalyaanam alla Kaalam varattum endraan Male : Kanavil vandhaal kalyaana kolam Kannodu kalandhendraal Female : Koduthaal manakkum Parithaal thudikkum Male : Anaithaal adangum Ninaithaal nadakkum Male : Oru then kinnam ketten Female : Aval naan endru vandhaal Male : Suvai paal vannam ketten Female : Aval poonginnam thandhaal Male : Saelai maraikkum thenpaangu silaiyae Aadu nadanam endraan Female : Sirikkum pookkal sindhaamal avalum Singaara nadanamittaal Male : Kaalai varaikkum kannara kandu Kaiyil anaithirundhaan Female : Kannam konda kaayangal ellam Kannadi paarthirundhaal Male : Manandhaal unaiyae manappen endraan Female : Marandhaal ulagai marappen endraal Male : Oru then kinnam ketten Female : Aval naan endru vandhaal Male : Suvai paal vannam ketten Female : Aval poonginnam thandhaal
பாடகர்கள் : டி. எம் . சௌந்தராஜன் மற்றும் பி. சுஷீலா இசை அமைப்பாளர் : வி. குமார் பாடல் ஆசிரியர் : கண்ணதாசன் ஆண் : ஒரு தேன் கிண்ணம் கேட்டேன் அவள் நான் என்று வந்தாள் சுவை பால் வண்ணம் கேட்டேன் அவள் பூங்கன்னம் தந்தாள்……….. ஒரு தேன் கிண்ணம் கேட்டேன் பெண் : கொடுத்தாள் கொடுத்தாள் கொள்ளாமல் கொடுத்தாள் சிந்தாமல் அவன் எடுத்தான் முடித்தான் என்று நினைத்தாள் மெல்ல முப்பாலும் படித்து விட்டான் ஆண் : ஒரு தேன் கிண்ணம் கேட்டேன் பெண் : அவள் நான் என்று வந்தாள் – பெண் : என்ன துடிப்போ அம்மாடி போதும் நாளை மீண்டும் என்றான் ஆண் : இதுவும் வேண்டும் இன்னொன்றும் வேண்டும் இப்போதே தேவை என்றாள் பெண் : காதல் என்றால் கல்யாணம் அல்ல காலம் வரட்டும் என்றான் ஆண் : கனவில் வந்த கல்யாண கோலம் கண்ணோடு கலந்ததென்றான்…. பெண் : கொடுத்தால் மணக்கும் பறித்தால் துடிக்கும் ஆண் : அணைத்தால் அடங்கும் நினைத்தால் நடக்கும் ஆண் : ஒரு தேன் கிண்ணம் கேட்டேன் பெண் : அவள் நான் என்று வந்தாள் ஆண் : சுவை பால் வண்ணம் கேட்டேன் பெண் : அவள் பூங்கன்னம் தந்தாள் ஆண் : சேலை மறைக்கும் தென்பாங்கு சிலையே ஆடு நடனம் என்றான் பெண் : சிரிக்கும் பூக்கள் சிந்தாமல் அவளும் சிங்கார நடனமிட்டாள் ஆண் : காலை வரைக்கும் கண்ணாரக் கண்டு கையில் அணைத்திருந்தான் பெண் : கன்னம் கொண்ட காயங்கள் எல்லாம் கண்ணாடி பார்த்திருந்தாள் ஆண் : மணந்தால் உனையேமணப்பேன் என்றான் பெண் : மறந்தால் உலகை மறப்பேன் என்றாள் ஆண் : ஒரு தேன் கிண்ணம் கேட்டேன் பெண் : அவள் நான் என்று வந்தாள் ஆண் : சுவை பால் வண்ணம் கேட்டேன் பெண் : அவள் பூங்கன்னம் தந்தாள்