← Back

Adhikalaiyil Kuyil Koovudhu Song Lyrics

Singers : Mano and K. S. Chitra Music by : Manoj – Gyan Lyrics by : Vaali Female : Adhikaalayil kuyil koovuthu Adhai ketuththaan thuyil neengudhu Male : Panivaadaiyum nadai poduthu Pasuncholail vilayaaduthu Female : Thullugindra thullalum enna Chinanchiru pookkalae Male : Sollugindra sangathi enna Ennudaya kaadhilae Female : Thendral ula varum neram Female : Adhikaalayil kuyil koovuthu Adhai ketuththaan thuyil neengudhu Female : Neerodayil alaigalil ezhum keerthanam Naan ketkayil enakadhu oru moganam Male : Aagaayam bhoomi aanandha kolam Yaegaathamaana ilavenirkaalam Female : Orraayiram unarchigal tharum vaalibam Oyaamale ninaivinil pala naadagam Male : Ponaana thegam poopola verkka Keezhvaanil mella poobaalam ketka Female : kukukukukoo kukukukukoo Kukukukukoo…. Female : Oo….adhikaalayil kuyil koovuthu Adhai ketuththaan thuyil neengudhu Male : Thoongaamalae vizhiththathu pala raathiri Thirumeniyum kothithathu anal mathiri Female : Devaathi devan thunai sera vendum Kaanatha katchi kannodu thondrum Male : Thaangaamalae thavithathu siru poongkodi Senthooram pol sivanthadhu iru maan vizhi Female : Viragangal polae naragangal yaedhu Melaadai kooda sumaiyaagum pothu Male : Kukukukukoo kukukukukoo Kukukukukoo…. Female : Aa….adhikaalayil kuyil koovuthu Adhai ketuththaan thuyil neengudhu Male : Panivaadaiyum nadai poduthu Pasuncholaiyil vilayaaduthu Female : Thullugindra thullalum enna Chinanchiru pookkalae Male : Sollugindra sangathi enna Ennudaya kaadhilae Female : Thendral ula varum neram Both : Adhikaalayil kuyil koovuthu Adhai ketuththaan thuyil neengudhu
பாடகர்கள் : மனோ மற்றும் கே. எஸ். சித்ரா இசையமைப்பாளர் : மனோஜ் – ஞான் பாடலாசிரியர் : வாலி பெண் : அதிகாலையில் குயில் கூவுது அதைக் கேட்டுத்தான் துயில் நீங்குது ஆண் : பனிவாடையும் நடை போடுது பசுஞ்சோலையில் விளையாடுது பெண் : துள்ளுகின்ற துள்ளலும் என்ன சின்னஞ்சிறு பூக்களே ஆண் : சொல்லுகின்ற சங்கதி என்ன என்னுடைய காதிலே பெண் : தென்றல் உலா வரும் நேரம் பெண் : அதிகாலையில் குயில் கூவுது அதைக் கேட்டுத்தான் துயில் நீங்குது பெண் : நீரோடையில் அலைகளில் எழும் கீர்த்தனம் நான் கேட்கையில் எனக்கது ஒரு மோகனம் ஆண் : ஆகாயம் பூமி ஆனந்த கோலம் ஏகாந்தமான இளவேனிற்காலம் பெண் : ஓராயிரம் உணர்ச்சிகள் தரும் வாலிபம் ஓயாமலே நினைவினில் பல நாடகம் ஆண் : பொன்னான தேகம் பூப்போல வேர்க்க கீழ்வானில் மெல்ல பூபாளம் கேட்க பெண் : குக்குக்குக்கூ குக்குக்குக்கூ குக்குக்குக்கூ…… பெண் : ஓஒ….அதிகாலையில் குயில் கூவுது அதைக் கேட்டுத்தான் துயில் நீங்குது ஆண் : தூங்காமலே விழித்தது பல ராத்திரி திருமேனியும் கொதித்தது அனல் மாதிரி பெண் : தேவாதிதேவன் துணை சேர வேண்டும் காணாத காட்சி கண்ணோடு தோன்றும் ஆண் : தாங்காமலே தவித்தது சிறு பூங்கொடி செந்தூரம் போல் சிவந்தது இரு மான் விழி பெண் : விரகங்கள் போலே நரகங்கள் ஏது மேலாடை கூட சுமையாகும் போது ஆண் : குக்குக்குக்கூ குக்குக்குக்கூ குக்குக்குக்கூ……. ஆண் : ஆ…..அதிகாலையில் குயில் கூவுது அதைக் கேட்டுத்தான் துயில் நீங்குது பெண் : பனிவாடையும் நடை போடுது பசுஞ்சோலையில் விளையாடுது ஆண் : துள்ளுகின்ற துள்ளலும் என்ன சின்னஞ்சிறு பூக்களே பெண் : சொல்லுகின்ற சங்கதி என்ன என்னுடைய காதிலே ஆண் : தென்றல் உலா வரும் நேரம் இருவர் : அதிகாலையில் குயில் கூவுது அதைக் கேட்டுத்தான் துயில் நீங்குது….