← Back

En Aasai Ethiraliye Song Lyrics

Singers : Vinaitha and Vijay Yesudas Music by : Yuvan Shankar Raja Female : Aah…aaaa… En aasai ethiraliyae aei aei Enenna seivaai neeyae.. En aasai ethiraliye aei aei Enenna seivaai neeyae.. Female : Un vilaienna vilaienna Vaanguven Nee thalai thaazhthi Nindraal naan vaazhththuven Male : Hey raani neeyum solla Koonthal meethu sootti kolla Naan ondrum roja alla Po po po vilagi mella Male : Vaal veesi poovai kolla Naan ondrum kozhai alla Thimirae Woh woh woh woh… Female : En aasai ethiraliyae aei aei Enenna seivaai neeyae.. Male : Ho… ho…hoo…hooo Ho… ho…hoo…hooo Female : Aayiraththil oruvan unnai Aanavaththin madiyil vaiththu Aadaigalil thee parava seivenae Male : Pothum intha chinna kanavu Porkkalaththil illai uravu Unnai ini unnai ini Velvenae Female : Siraiyil vaiththu Unnai sithilam aakki Thinam enathu kaal adiyil Kidaththavaa Female : Udaigal moodi vaiththa Thadaigal neekki vittu Unathu aalumaiyai Adakkavaa Male : Kai thatti kooppittu paar Kaarmegam thooral tharuma Kannae nee aanai ittaal Aagaayam thariyil vizhuma Male : Kaattraadi vettuppadalaam Kattraalae kattuppaduma Adiyae Nee po po po Female : Nee enakku illai endraal Naan unakku vendaam endraal Yaaridamum sernthuvida Imsippeno..oooo.. Male : Thaen kodukkum malarum undu Oon kedukkum malarum undu Nee evalo thooyavalo Santhippen Female : Enakku vendiyathai Enakkul thoondiyathai Nigazhththa kaaththirukkum Adimai nee Female : Enathu kaithalaththai Enathu thaen kudaththai Sumakka vendi nirkkum Pathumai nee… Male : Hey pennae unnai kandu Parithaapam endrum undu Azhagaana poovukkullae Arivillai aiyyo indru Male : Aasaigal theerum andru Aattangal mudiyum ingu Silaiyae Hey hey hey hey… Female : Aaah…
பாடகி : வினைதா பாடகர் : விஜய் யேசுதாஸ் இசையமைப்பாளர் : யுவன் சங்கர் ராஜா பெண் : ஆ ஆஆ என் ஆசை எதிராளியே ஏய் ஏய் என்னென்ன செய்வாய் நீயே என் ஆசை எதிராளியே ஏய் ஏய் என்னென்ன செய்வாய் நீயே பெண் : உன் விலையென்ன விலையென்ன வாங்குவேன் நீ தலை தாழ்த்தி நின்றால் நான் வாழ்த்துவேன் ஆண் : ஹே ராணி நீயும் சொல்ல கூந்தல் மீது சூட்டி கொள்ள நான் ஒன்றும் ரோஜா அல்ல போ போ போ விலகி மெல்ல ஆண் : வால் வீசி பூவை கொல்ல நான் ஒன்றும் கோழை அல்ல திமிரே வோ வோ வோ வோ பெண் : என் ஆசை எதிராளியே ஏய் ஏய் என்னென்ன செய்வாய் நீயே ஆண் : ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ பெண் : ஆயிரத்தில் ஒருவன் உன்னை ஆணவத்தின் மடியில் வைத்து ஆடைகளில் தீ பரவ செய்வேனே ஆண் : போதும் இந்த சின்ன கனவு போர்க்களத்தில் இல்லை உறவு உன்னை இனி உன்னை இனி வெல்வேனே பெண் : சிறையில் வைத்து உன்னை சிதிலம் ஆக்கி தினம் எனது கால் அடியில் கிடைத்தவா பெண் : உடைகள் மூடி வைத்த தடைகள் நீக்கி விட்டு உனது ஆளுமையை அடக்கவா ஆண் : கை தட்டி கூப்பிட்டு பார் கார்மேகம் தூறல் தருமா கண்ணே நீ ஆணை இட்டால் ஆகாயம் தரையில் விழுமா ஆண் : காற்றாடி வெட்டுப்படலாம் காற்றாலே கட்டுப்படுமா அடியே நீ போ போ போ பெண் : நீ எனக்கு இல்லை என்றால் நான் உனக்கு வேண்டாம் என்றால் யாரிடமும் சேர்ந்து விட இம்சிப்பேனோ ஆண் : தேன் கொடுக்கும் மலரும் உண்டு ஊன் கெடுக்கும் மலரும் உண்டு நீ எவளோ தூயவளோ சந்திப்பேன் பெண் : எனக்கு வேண்டியதை எனக்குள் தூண்டியதை நிகழ்த்த காத்திருக்கும் அடிமை நீ பெண் : எனது கைத்தளத்தை எனது தேன் குடத்தை சுமக்க வேண்டி நிற்கும் பதுமை நீ ஆண் : ஹே பெண்ணே உன்னை கண்டு பரிதாபம் என்றும் உண்டு அழகான பூவுக்குள்ளே அறிவில்லை ஐயோ இன்று ஆண் : ஆசைகள் தீரும் அன்று ஆட்டங்கள் முடியும் இங்கு சிலையே ஹே ஹே ஹே ஹே பெண் : ஆ