← Back

Pazhagu Sentamizh Song Lyrics

Singer : Seerkazhi Govindarajan Music by : K. V. Mahadevan Lyrics by : Kannadasan Male : Pazhagu senthamil azhagu mangai un Paruvam katta vendum… kannae Paruvam katta vendum Pazhagu senthamil azhagu mangai un Paruvam katta vendum… kannae Paruvam katta vendum Male : Vizhiyum maeniyum vialikkum kaaviya Virundhu vaikka vendum …kannae Virundhu vaikka vendum Vizhiyum maeniyum vialikkum kaaviya Virundhu vaikka vendum …kannae Virundhu vaikka vendum Male : Palingu pola mugam pavala vaayidhazh Paruga ennum bodhu Naan paruga ennum bodhu Palingu pola mugam pavala vaayidhazh Paruga ennum bodhu Naan paruga ennum bodhu Male : Telingu nattilam silaigal pol vandhu Nalangu paada vendum…. Telingu nattilam silaigal pol vandhu Nalangu paada vendum…. kannae Nalangu paada vendum Male : Kannathodu en kannam vaithu naan Kalvanaagum podhu Kaadhal kalvanaagum podhu Kannathodu en kannam vaithu naan Kalvanaagum podhu Kaadhal kalvanaagum podhu Male : Kannadam tharum Kanni pol vandhu Kalandhu kolla vendum Kannadam tharum Kanni pol vandhu Kalandhu kolla vendum ..kannae Kalandhu kolla vendum Male : Velli paavaiyin thullum nenjai naan Kollai kollum podhu Naan kollai kollum podhu Valla kerala pillaipol vandhu Mazhalai pesa vendum Valla kerala pillaipol vandhu Mazhalai pesa vendum… kannae Mazhalai pesa vendum Male : Pazhagu senthamil azhagu mangai un Paruvam katta vendum… kannae Paruvam katta vendum
பாடகர் : சீர்காழி கோவிந்தராஜன் இசை அமைப்பாளர் : கே. வி. மஹாதேவன் பாடல் ஆசிரியர் : கண்ணதாசன் ஆண் : பழகு செந்தமிழ் அழகு மங்கை உன் பருவம் காட்ட வேண்டும்… கண்ணே பருவம் காட்ட வேண்டும்…… பழகு செந்தமிழ் அழகு மங்கை உன் பருவம் காட்ட வேண்டும்… கண்ணே பருவம் காட்ட வேண்டும்…… ஆண் : விழியும் மேனியும் விளைக்கும் காவிய விருந்து வைக்க வேண்டும் ..கண்ணே விருந்து வைக்க வேண்டும் விழியும் மேனியும் விளைக்கும் காவிய விருந்து வைக்க வேண்டும் ..கண்ணே விருந்து வைக்க வேண்டும் ஆண் : பளிங்கு போல முகம் பவள வாயிதழ் பருக எண்ணும்போது நான் பருக எண்ணும்போது பளிங்கு போல முகம் பவள வாயிதழ் பருக எண்ணும்போது நான் பருக எண்ணும்போது ஆண் : தெலுங்கு நாட்டிளம் சிலைகள் போல் வந்து நலங்கு பாட வேண்டும்… தெலுங்கு நாட்டிளம் சிலைகள் போல் வந்து நலங்கு பாட வேண்டும்… கண்ணே நலங்கு பாட வேண்டும் ஆண் : கன்னத்தோடு என் கன்னம் வைத்து நான் கள்வனாகும்போது காதல் கள்வனாகும்போது கன்னத்தோடு என் கன்னம் வைத்து நான் கள்வனாகும்போது காதல் கள்வனாகும்போது ஆண் : கன்னடம் தரும் கன்னிபோல் வந்து கலந்து கொள்ள வேண்டும்… கன்னடம் தரும் கன்னிபோல் வந்து கலந்து கொள்ள வேண்டும்… கண்ணே கலந்து கொள்ள வேண்டும் ஆண் : வெள்ளிப் பாவையின் துள்ளும் நெஞ்சை நான் கொள்ளை கொள்ளும்போது நான் கொள்ளை கொள்ளும்போது வள்ளக் கேரளப் பிள்ளைப்போல் வந்து மழலை பேச வேண்டும்… வள்ளக் கேரளப் பிள்ளைப்போல் வந்து மழலை பேச வேண்டும்.. கண்ணே மழலை பேச வேண்டும்………….. ஆண் : பழகு செந்தமிழ் அழகு மங்கை உன் பருவம் காட்ட வேண்டும்… கண்ணே பருவம் காட்ட வேண்டும்……