← Back

Thedi Thedi Song Lyrics

Singer : Thiruvudaiyan Music by : Bharadwaj Lyrics by : Vairamuthu Male : Thedi thedi paakkuraen Avan odi odi oliyuraan Thedi thedi paakkuraen Avan odi odi oliyuraan Male : Ottaipaanai odambukkulla Usuraiyum ooththi vachchavanae Male : Thedi thedi paakkuraen Avan odi odi oliyuraan Male : Vantha vazhi sollaama Pora vazhi illaama Kanna katti aanum ponna Kaattu vazhi vittavanae Male : Thedi thedi paakkuraen Avan odi odi oliyuraan Male : Oruththanukku oruththunaa Adhuvum ingae kaaviyam Anju perukku oruththinaa Adhuvum ingae kaaviyam Male : Karpu needhi idhiyaathu Kaalam seiyum kaariyam Kaalam pogum pokka paaththu Maaruthaiyaa jeevitham Male : Kaalam potta road-tu vazhi Manushan koottam pogala Manushan potta road-tu vazhi Kaalam vanthu serala Male : Kaalaththoda manushanaiyum Manusanoda kaalaththaiyum Mutta vittu mutta vittu Etti ninni sirippavana Male : Thedi thedi paakkuraen Avan odi odi oliyuraan Male : Innaarukku innaaruyinnu Ezhuthi onnum vaikkala Ezhuthi vachu paaththaalum Ellaamae nikkala Male : Saththiyaththil vaazhnthavanum Sattapadi thokkuraan Sattam meeri poravanum Saththiyaththai jeyikkiraan Male : Savak kuzhikku pona silar Seththa pinnum irakkuraan Saalaiyilae pogum palar Vaazhnthu kondae marikkiraan Male : Aalukkoru vidukathaiyai Pottu vittu ponavana Naalukkoru vidaiya mattum Maaththi maaththi sonnavana Male : Thedi thedi paakkuraen Avan odi odi oliyuraan Avan odi odi oliyuraan
பாடகர் : திருவுடையான் இசையமைப்பாளர் : பரத்வாஜ் பாடலாசிரியர் : வைரமுத்து ஆண் : தேடி தேடி பாக்குறேன் அவன் ஓடி ஓடி ஒளியுறான் தேடி தேடி பாக்குறேன் அவன் ஓடி ஓடி ஒளியுறான் ஆண் : ஒட்டைபானை ஒடம்புக்குள்ள உசுரையும் ஊத்தி வச்சவனே ஆண் : தேடி தேடி பாக்குறேன் அவன் ஓடி ஓடி ஒளியுறான் ஆண் : வந்த வழி சொல்லாம போற வழி இல்லாம கண்ண கட்டி ஆணும் பொண்ண காட்டு வழி விட்டவனே ஆண் : தேடி தேடி பாக்குறேன் அவன் ஓடி ஓடி ஒளியுறான் ஆண் : ஒருத்தனுக்கு ஒருத்தினா அதுவும் இங்கே காவியம் அஞ்சு பேருக்கு ஒருத்தினா அதுவும் இங்கே காவியம் ஆண் : கற்பு நீதி இதியாதி காலம் செய்யும் காரியம் காலம் போகும் போக்க பாத்து மாறுதையா ஜீவிதம் ஆண் : காலம் போட்ட ரோட்டு வழி மனுஷன் கூட்டம் போகல மனுஷன் போட்ட ரோட்டு வழி காலம் வந்து சேரல ஆண் : காலத்தோட மனுஷனையும் மனுசனோட காலத்தையும் முட்ட விட்டு முட்ட விட்டு எட்டி நின்னு சிரிப்பவன ஆண் : தேடி தேடி பாக்குறேன் அவன் ஓடி ஓடி ஒளியுறான் ஆண் : இன்னாருக்கு இன்னாருயின்னு எழுதி ஒன்னும் வைக்கல எழுதி வச்சு பாத்தாலும் எல்லாமே நிக்கல ஆண் : சத்தியத்தில் வாழ்ந்தவனும் சட்டப்படி தோக்குறான் சட்டம் மீறி போறவனும் சத்தியத்தை ஜெயிக்கிறான் ஆண் : சவக் குழிக்கு போன சிலர் செத்த பின்னும் இறக்குறான் சாலையிலே போகும் பலர் வாழ்ந்து கொண்டே மறிக்கிறான் ஆண் : ஆளுக்கொரு விடுகதையை போட்டு விட்டு போனவன நாளுக்கொரு விடைய மட்டும் மாத்தி மாத்தி சொன்னவன ஆண் : தேடி தேடி பாக்குறேன் அவன் ஓடி ஓடி ஒளியுறான் அவன் ஓடி ஓடி ஒளியுறான்