← Back

Vazhkkai Ennum Odam Song Lyrics

Singer : K. B. Sundarambal Music by : R. Sudharsanam Female : Oruvanukku oruthi endra Uyir moochai ulladakki… Aran ena pattadhae il vaazhkkai… Adhuvum… Piran pazhippadhillaayin nandru yenum… Thirukkuralai maravaadhae… Thirukkuralai maravaadhae… Dhisai thavari pogaadhae… Ae… ae… ae… ae… ae… Female : Vaazhkkai enum odam Vazhangugindra paadam Maanidarin manadhinilae Marakka onnaa vaedham Female : Vaazhkkai enum odam Vazhangugindra paadam Maanidarin manadhinilae Marakka onnaa vaedham Vaazhkkai enum odam… Female : {Vaalibam enbadhu Kalaigindra vaedam adhil Vandhadhu varattum Enbavan muzhu moodan} (2) Female : Varum mun kaappavan Thaan arivaali Puyal varum mun kaappavan thaan Arivaali Adhu vandha pinnae thavippavan Thaan yaemaali Female : Vaazhkkai enum odam Vazhangugindra paadam Maanidarin manadhinilae Marakka onnaa vaedham Vaazhkkai enum odam… Female : Thuduppugal illaa padagu Alaigal azhaikkindra dhisai ellaam pogum Theemaiyai thaduppavar illaa vaazhvum Andha padagin nilai polae aagum Andha padagin nilai polae aagum Female : Vaazhkkai enum odam Vazhangugindra paadam Maanidarin manadhinilae Marakka onnaa vaedham Vaazhkkai enum odam…
பாடகி : கே. பி. சுந்தராம்பாள் இசை அமைப்பாளர் : ஆர். சுதர்சனம் பெண் : ஒருவனுக்கு ஒருத்தி என்ற உயிர் மூச்சை உள்ளடக்கி… அறன் எனப் பட்டதே இல் வாழ்க்கை… அதுவும்… பிறன் பழிப்பதில்லாயின் நன்று எனும்… திருக்குறளை மறவாதே… திருக்குறளை மறவாதே… திசை தவறிப் போகாதே… ஏ… ஏ… ஏ… ஏ… ஏ… பெண் : வாழ்க்கை எனும் ஓடம் வழங்குகின்ற பாடம் மானிடரின் மனதினிலே மறக்க ஒண்ணா வேதம் பெண் : வாழ்க்கை எனும் ஓடம் வழங்குகின்ற பாடம் மானிடரின் மனதினிலே மறக்க ஒண்ணா வேதம் வாழ்க்கை எனும் ஓடம்… பெண் : வாலிபம் என்பது கலைகின்ற வேடம் அதில் வந்தது வரட்டும் என்பவன் முழு மூடன் வாலிபம் என்பது கலைகின்ற வேடம் அதில் வந்தது வரட்டும் என்பவன் முழு மூடன் வரும் முன் காப்பவன் தான் அறிவாளி புயல் வரும் முன் காப்பவன் தான் அறிவாளி அது வந்த பின்னே தவிப்பவன் தான் ஏமாளி பெண் : வாழ்க்கை எனும் ஓடம் வழங்குகின்ற பாடம் மானிடரின் மனதினிலே மறக்க ஒண்ணா வேதம் வாழ்க்கை எனும் ஓடம்… பெண் : துடுப்புகள் இல்லா படகு அலைகள் அழைக்கின்ற திசை எல்லாம் போகும் தீமையை தடுப்பவர் இல்லா வாழ்வும் அந்த படகின் நிலை போலே ஆகும் அந்த படகின் நிலை போலே ஆகும் பெண் : வாழ்க்கை எனும் ஓடம் வழங்குகின்ற பாடம் மானிடரின் மனதினிலே மறக்க ஒண்ணா வேதம் வாழ்க்கை எனும் ஓடம்…