← Back

Ethanai Iniya Kudumbam Song Lyrics

Singers : S. P. Balasubrahmanyam, P. Susheela, Vani Jairam and M. S. Viswanathan Music by : M. S. Viswanathan Male : Ethanai iniya kudumbam Muthamizh kavidhai arangam Thottadhu thulangum karangal Nalladhai ninaikkum manangal Male : Ethanai iniya kudumbam Muthamizh kavidhai arangam Thottadhu thulangum karangal Nalladhai ninaikkum manangal Idhu veedalla naadellaam kondaadum Koyil aagaadho Female : Ini naalellaam aanandham Thaen sindhum paadal kaetkaadho Female : En dheivam neeyae Oli dheepam neeyae Innaalai polae ennaalum vaazhga All : Ethanai iniya kudumbam Muthamizh kavidhai arangam Thottadhu thulangum karangal Nalladhai ninaikkum manangal Male : Pillaigalae pudhu yugam ezhundhadhu Oli mazhai pozhindhadhu nanaivom indru Paadungalaen ini varum thalaimurai Anaivarum oru nilai adaivom endru Female : Anbu selvangalae kodiyil aadum mullaigalae Ungal ullangalae endrum engal selvangalae Un sondham thaedi en jenmam kodi Pon maalai soodi varum vaanampaadi All : Ethanai iniya kudumbam Muthamizh kavidhai arangam Thottadhu thulangum karangal Nalladhai ninaikkum manangal Female : Yaadhum oorae ilakkiyam sonnadhu Ilakkanam aanadhu naeril kanden Yaarum ingae uravenum ninaivilae Anbenum nadhiyilae aada kanden Male : Naalum ingae panathilae midhandhavan Iruttilae irundhavan ulagai kanden Naanum indrae thalaivanin madiyilae Kuzhandhaiyaai valargiren uruvai kanden Female : Ullam ondraanadhu Anbin vellam undaanadhu Endrum maaraadhadhu Adhilae inbam nooraanadhu Male : En pillai neeyae kodi mullai neeyae Female : Un paasam thaanae naan unnum thaenae All : Ethanai iniya kudumbam Muthamizh kavidhai arangam Thottadhu thulangum karangal Nalladhai ninaikkum manangal
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம், பி. சுசீலா, வாணி ஜெயராம் மற்றும் எம். எஸ். விஸ்வநாதன் இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் ஆண் : எத்தனை இனிய குடும்பம் முத்தமிழ் கவிதை அரங்கம் தொட்டது துலங்கும் கரங்கள் நல்லதை நினைக்கும் மனங்கள் ஆண் : எத்தனை இனிய குடும்பம் முத்தமிழ் கவிதை அரங்கம் தொட்டது துலங்கும் கரங்கள் நல்லதை நினைக்கும் மனங்கள் இது வீடல்ல நாடெல்லாம் கொண்டாடும் கோயில் ஆகாதோ பெண் : இனி நாளெல்லாம் ஆனந்தம் தேன் சிந்தும் பாடல் கேட்காதோ பெண் : என் தெய்வம் நீயே ஒளி தீபம் நீயே இந்நாளைப் போலே எந்நாளும் வாழ்க அனைவரும் : எத்தனை இனிய குடும்பம் முத்தமிழ் கவிதை அரங்கம் தொட்டது துலங்கும் கரங்கள் நல்லதை நினைக்கும் மனங்கள் ஆண் : பிள்ளைகளே புது யுகம் எழுந்தது ஒளி மழை பொழிந்தது நனைவோம் இன்று பாடுங்களேன் இனி வரும் தலைமுறை அனைவரும் ஒருநிலை அடைவோம் என்று பெண் : அன்புச் செல்வங்களே கொடியில் ஆடும் முல்லைகளே உங்கள் உள்ளங்களே என்றும் எங்கள் செல்வங்களே உன் சொந்தம் தேடி என் ஜென்மம் கோடி பொன் மாலை சூடி வரும் வானம்பாடி அனைவரும் : எத்தனை இனிய குடும்பம் முத்தமிழ் கவிதை அரங்கம் தொட்டது துலங்கும் கரங்கள் நல்லதை நினைக்கும் மனங்கள் பெண் : யாதும் ஊரே இலக்கியம் சொன்னது இலக்கணம் ஆனது நேரில் கண்டேன் யாரும் இங்கே உறவெனும் நினைவிலே அன்பெனும் நதியிலே ஆடக் கண்டேன் ஆண் : நாளும் இங்கே பணத்திலே மிதந்தவன் இருட்டிலே இருந்தவன் உலகைக் கண்டேன் நானும் இன்றே தலைவனின் மடியிலே குழந்தையாய் வளர்கிறேன் குருவைக் கண்டேன் பெண் : உள்ளம் ஒன்றானது அன்பின் வெள்ளம் உண்டானது என்றும் மாறாதது அதிலே இன்பம் நூறானது ஆண் : என் பிள்ளை நீயே கொடி முல்லை நீயே பெண் : உன் பாசம் தானே நான் உண்ணும் தேனே அனைவரும் : எத்தனை இனிய குடும்பம் முத்தமிழ் கவிதை அரங்கம் தொட்டது துலங்கும் கரங்கள் நல்லதை நினைக்கும் மனங்கள்