← Back

Thiruvongu Punniya Song Lyrics

Singer : S. Janaki Music by : T. R. Pappa Lyrics by : Ramalinga Adigalar Female : Thiruvongu punniya seyalongi Anbarul thiralongu selvamonga Serivonga arivongi Niraivaana inbam thigazhnthonga Arul koduththu maruvongu Sengamala malarongu… Female : Vanamonga valar karunai mayamongi Orr varamongu thellamutha vayamongi Anantha vadivaagi yongi Nyaana uruvongum unarvinirai yoliyongi Female : Oongu mayil oornthongi Evvuyirukkum uravongu Ninpathamennulamongi Valamonga uikindra naalenthanaal Female : Tharuvuvongu chennaiyir kanthakottaththul valar Thalamongu kantha vaelae Thanmugath thuyyamani unmuga saivamani Shanmuga dheivamaniyae…..
பாடகி : எஸ். ஜானகி இசையமைப்பாளர் : டி. ஆர். பாப்பா பாடலாசிரியர் : இராமலிங்க அடிகளார் பெண் : திருவோங்கு புண்ணியச் செயலோங்கி அன்பருள் திறலோங்கு செல்வ மோங்கச் செறிவோங்க அறிவோங்கி நிறைவான இன்பம் திகழ்ந் தோங்க அருள் கொடுத்து மருவோங்கு செங்கமல மலரோங்கு….. பெண் : வணமோங்க வளர் கருணை மயமோங்கி ஓர் வரமோங்கு தெள்ளமுத வயமோங்கி ஆனந்த வடிவாகி யோங்கி ஞான உருவோங்கும் உணர்வினிறை யொளியோங்கி பெண் : ஓங்கு மயில் ஊர்ந்தோங்கி எவ்வுயிர்க்கும் உறவோங்கு நின்பதமென்னுளமோங்கி வளமோங்க உய்கின்ற நாளெந்த நாள் பெண் : தருவோங்கு சென்னையிற் கந்தகோட்டத்துள் வளர் தலமோங்கு கந்த வேளே தண்முகத் துய்யமணி உண்முகச் சைவமணி சண்முகத் தெய்வ மணியே……