← Back

Merkae Merkae Merkae Thaan Song Lyrics

Merkey Merkey Song Lyrics From Kanda Naal Mudhal Tamil Film Singers : Shankar Mahadevan and Sadhana Sargham Music by : Yuvan Shankar Raja Male : Lailai lailai lailailee laahilaahi lailaileee Merkae merkae merkae thaan sooriyangal udhithidumae Female : Sudum veyil kodaikaalam Kadum pani vaadai kaalam Irandukkum naduvae yedhum kaalam ulladha Female : Ilaiyudhir kaalam theernthu Ezhunthidum mannin vaasam Mudhal mazhaikkaalam endre nenjam solluthae Male : Oh minnalum minnalum netru varai pirinthathu yeno Pinnalaai pinnalaai indrudan pinainthida thaano Lailai lailai lailailee laahilaahi lailaileee Merkae merkae merkae thaan sooriyangal udhithidumae Male : Oh..kobam kollum neram Vaanam ellaam megam Kaanaamalae pogum ore nila Oh..kobam theerum neram Megam illaa vaanam Pournamiyaai thondrum adhae nilaa Female : Ini edhirigal endre evarum illai Pookkalai virumbaa vergal illai Nadhiyai veezhthum naanal illaiyaae Idhu neerin thozhil kaippodum Oru chinnath theeyin kadhai aagum Thiraigal inimel thevai illaiyae Male : Merkae merkae merkae thaan sooriyangal udhithidumae Lailai lailai lailailee laahilaahi lailaileee Male : Vaasal kadhavai yaaro thattum osai kettaal Neethaan endru paarthen adi sagi Pengal koottam vandhaal engae neeyum endrae Ippothellaam thedum endhan vizhi Female : Ini kavidhaiyil kaigal nanainthidumo Kaatrae siragaai virinthidumo Nilavin mudhugai theendum vegamo Ada thevaigal ilai endraalum Vaai udhavigal kettu mandraadum Maatten ena nee sonnaal thaangumo Male : Merkae merkae merkae thaan sooriyangal udhithidumae Lailai lailai lailailee sooriyangal udhithidumae Minnalum minnalum netru varai pirinthathu yeno Pinnalaai pinnalaai indrudan pinainthida thaano
பாடகி : சாதனா சர்கம் பாடகா் : சங்கர் மகாதேவன் இசையமைப்பாளா் : யுவன் சங்கர் ராஜா ஆண் : லைலை லைலை லைலைலே லாஹி லாஹி லைலைலே மேற்கே மேற்கே மேற்கே தான் சூரியன்கள் உதித்திடுமே பெண் : சுடும் வெயில் கோடைக்காலம் கடும் பனி வாடைக்காலம் இரண்டுக்கும் நடுவே ஏதும் காலம் உள்ளதா பெண் : இலையுதிர் காலம் தீர்ந்து எழுந்திடும் மண்ணின் வாசம் முதல் மழைக்காலம் என்றே நெஞ்சம் சொல்லுதே ஆண் : ஓ மின்னலும் மின்னலும் நேற்று வரை பிரிந்தது ஏனோ பின்னலாய் பின்னலாய் இன்றுடன் பிணைந்திடத் தானோ லைலை லைலை லைலைலே லாஹி லாஹி லைலைலே மேற்கே மேற்கே மேற்கே தான் சூரியன்கள் உதித்திடுமே ஆண் : ஓ கோபம் கொள்ளும் நேரம் வானம் எல்லாம் மேகம் காணாமலே போகும் ஒரே நிலா ஓ கோபம் தீரும் நேரம் மேகம் இல்லா வானம் பெளர்ணமியாய் தோன்றும் அதே நிலா பெண் : இனி எதிரிகள் என்றே எவருமில்லை பூக்களை விரும்பா வேர்களில்லை நதியை வீழ்த்தும் நாணல் இல்லையே இது நீரின் தோளில் கைபோடும் ஒரு சின்னத் தீயின் கதையாகும் திரைகள் இனிமேல் தேவையில்லையே ஆண் : மேற்கே மேற்கே மேற்கே தான் சூரியன்கள் உதித்திடுமே லைலை லைலை லைலைலே லாஹி லாஹி லைலைலே ஆண் : வாசல் கதவை யாரோ தட்டும் ஓசை கேட்டால் நீதான் என்று பார்த்தேன் அடி சகி பெண்கள் கூட்டம் வந்தால் எங்கே நீயும் என்றே இப்போதெல்லாம் தேடும் எந்தன் விழி பெண் : இனி கவிதையில் கைகள் நனைந்திடுமோ காற்றே சிறகாய் விரிந்திடுமோ நிலவின் முதுகைத் தீண்டும் வேகமோ அட தேவைகள் இல்லை என்றாலும் வாய் உதவிகள் கேட்டு மன்றாடும் மாட்டேன் என நீ சொன்னால் தாங்குமோ ஆண் : மேற்கே மேற்கே மேற்கே தான் சூரியன்கள் உதித்திடுமே லைலை லைலை லைலைலே சூரியன்கள் உதித்திடுமே மின்னலும் மின்னலும் நேற்று வரை பிரிந்தது ஏனோ பின்னலாய் பின்னலாய் இன்றுடன் பிணைந்திடத் தானோ