← Back

Kannanin Sannathiyil I Song Lyrics

Singer : K. J. Yesudas Music by : M. S. Viswanathan Lyrics by : Vaali Male : Alangaara oviyam anbu enum kaaviyam Annanin thangai angae Nalam paadum nenjame naalellaam Kondavan thangaiyin annan ingae Male : Kannanin sannathiyil Enthan kanmani punnagaiyil Inimel kaalangal ullavarai Enthan ponmanikenna kurai Male : Kannanin sannathiyil Enthan kanmani punnagaiyil Inimel kaalangal ullavarai Enthan ponmanikenna kurai Male : Anbu sonna vedham Naan andru konda paasam Engu nindra pothum En ennam unnai vaazhththum Male : Annamitta kaigal Naan annai endru sollum Gangai pola pongum En thangai konda ullam Male : Karpanai oru kodi Enthan kan vazhi uruvaagi Indru soppanam kaanuthammaa Engo sinthanai oduthammaa Male : Kannanin sannathiyil Enthan kanmani punnagaiyil Inimel kaalangal ullavarai Enthan ponmanikenna kurai Male : Maalai soodikondu En manjal vaazhai kandru Naanam ponga nindru Naan kaana vendum endru Male : Annan seitha yaavum Nee arinthathillai indru Kaalam solla koodum En ullam ennavendru Male : Kattilil orr uravu pinnaal Thottilil orr uravu Ithupol aayiram uravu varum Engae annanin ninaivu varum Male : Kannanin sannathiyil Enthan kanmani punnagaiyil Inimel kaalangal ullavarai Enthan ponmanikenna kurai
பாடகர் : கே. ஜே. யேசுதாஸ் இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் பாடலாசிரியர் : வாலி ஆண் : அலங்கார ஓவியம் அன்பு எனும் காவியம் அண்ணனின் தங்கை அங்கே நலம் பாடும் நெஞ்சமே நாளெல்லாம் கொண்டவன் தங்கையின் அண்ணன் இங்கே ஆண் : கண்ணனின் சன்னதியில் எந்தன் கண்மணி புன்னகையில் இனிமேல் காலங்கள் உள்ளவரை எந்தன் பொன்மணிக்கென்ன குறை ஆண் : கண்ணனின் சன்னதியில் எந்தன் கண்மணி புன்னகையில் இனிமேல் காலங்கள் உள்ளவரை எந்தன் பொன்மணிக்கென்ன குறை ஆண் : அன்பு சொன்ன வேதம் நான் அன்று கொண்ட பாசம் எங்கு நின்ற போதும் என் எண்ணம் உன்னை வாழ்த்தும் ஆண் : அன்னமிட்ட கைகள் நான் அன்னை என்று சொல்லும் கங்கை போல பொங்கும் என் தங்கை கொண்ட உள்ளம் ஆண் : கற்பனை ஒரு கோடி எந்தன் கண் வழி உருவாகி இன்று சொப்பனம் காணுதம்மா எங்கோ சிந்தனை ஓடுதம்மா… ஆண் : கண்ணனின் சன்னதியில் எந்தன் கண்மணி புன்னகையில் இனிமேல் காலங்கள் உள்ளவரை எந்தன் பொன்மணிக்கென்ன குறை ஆண் : மாலை சூடி கொண்டு என் மஞ்சள் வாழை கன்று நாணம் பொங்க நின்று நான் காண வேண்டும் என்று ஆண் : அண்ணன் செய்த யாவும் நீ அறிந்ததில்லை இன்று காலம் சொல்ல கூடும் என் உள்ளம் என்னவென்று ஆண் : கட்டிலில் ஓர் உறவு பின்னால் தொட்டிலில் ஓர் உறவு இது போல் ஆயிரம் உறவு வரும் எங்கே அண்ணனின் நினைவு வரும் ஆண் : கண்ணனின் சன்னதியில் எந்தன் கண்மணி புன்னகையில் இனிமேல் காலங்கள் உள்ளவரை எந்தன் பொன்மணிக்கென்ன குறை..