← Back

Thavamindri Kidaitha Varame Song Lyrics

Singers : Hariharan and Sadhana Sargam Music by : Vidya Sagar Female : Thavamindri kidaitha varamae Ini vaazhvil ellaam sugamae Thavamindri kidaitha varamae …aeae Ini vaazhvil ellaam sugamae Male : Nee sooriyan naan vennila Un oliyal thaanae vaazhgiren Female : Nee sooriyan naan thamarai Nee vandhaal thaanae malargiren Male : Nee sooriyan naan vaan mughil Nee nadandhidum paadhaiyaagiren Female : Nee sooriyan naan aazh kadal En madiyil unnai yendhinen Male : Thavamindri kidaitha varamae … hoooo ooo Female : Ini vaazhvil ellaam sugamae Male : Hooo … kadivaalam illaadha kaatraga naan maara Vendaamaa … vendaamaa Female : Gadigaaram illaadha oor paarthu kudiyera Vendaamaa … vendaamaa Male : Kai korkkum podhellaam Kai reghai theyattum Muthathin ennikkai Mudivindri poghattum Female : Pagalellaam iravaagi ponaal enna Iravellaam vidiyaamal neendaal enna Male : Nam uyir rendum udal ondril Vaazhndhaal enna…aaa Female : Thavamindri kidaitha varamae Ini vaazhvil ellaam sugamae Male : Soodana idam vendum sugamaagavum vendum Tharuvaaya … tharuvaaya Female : Kan endra porvaikkul kanavendra methaikkul Varuvaayaa … varuvaayaa Male : Vizhundhaalum un kannil Kanavaagha naan vizhuven Yezhundhaalum un nenjil Ninaivaagha naan yezhuven Female : Madindhaalum un moochin soottaal madiven Pirandhaalum unaiyae thaan meendum serven Male : Ini un moochai kadan vaangi Naan vaazhuven Female : Thavamindri kidaitha varamae Ini vaazhvil ellaam sugamae Male : Nee sooriyan naan vennila Un oliyaal thaanae vaazhgiren Female : Nee sooriyan naan thamarai Nee vandhaal thaanae malargiren Male : Nee sooriyan naan vaan mughil Nee nadandhidum paadhaiyaagiren Female : Nee sooriyan naan aazh kadal En madiyil unnai yendhinen Male : Thavamindri kidaitha varamae …. hoooo ooo Female : Ini vaazhvil ellaam sugamae…
பாடகி : சாதனா சர்கம் பாடகா் : ஹரிஹரன் இசையமைப்பாளா் : வித்யாசாகர் பெண் : தவமின்றி கிடைத்த வரமே இனி வாழ்வில் எல்லாம் சுகமே தவமின்றி கிடைத்த வரமே இனி வாழ்வில் எல்லாம் சுகமே ஆண் : நீ சூரியன் நான் வெண்ணிலா உன் ஒளியால் தானே வாழ்கிறேன் பெண் : நீ சூரியன் நான் தாமரை நீ வந்தால் தானே மலர்கிறேன் ஆண் : நீ சூரியன் நான் வான்முகில் நீ நடந்திடும் பாதையாகிறேன் பெண் : நீ சூரியன் நான் ஆழ்கடல் என் மடியில் உன்னை ஏந்தினேன் ஆண் : தவமின்றி கிடைத்த வரமே ஹோ ஓ … பெண் : இனி வாழ்வில் எல்லாம் சுகமே ஆண் : ஹோ கடிவாளம் இல்லாத காற்றாக நான் மாற வேண்டாமா வேண்டாமா பெண் : கடிகாரம் இல்லாத ஊர் பார்த்து குடியேற வேண்டாமா வேண்டாமா ஆண் : கை கோர்க்கும் போதெல்லாம் கை ரேகை தேயட்டும் முத்தத்தின் எண்ணிக்கை முடிவின்றி போகட்டும் பெண் : பகலெல்லாம் இரவாகி போனாலென்ன இரவெல்லாம் விடியாமல் நீண்டாலென்ன ஆண் : நம் உயிர் ரெண்டும் உடல் ஒன்றில் வாழ்ந்தால் என்ன பெண் : தவமின்றி கிடைத்த வரமே இனி வாழ்வில் எல்லாம் சுகமே ஆண் : சூடான இடம் வேண்டும் சுகமாகவும் வேண்டும் தருவாயா தருவாயா பெண் : கண் என்ற போர்வைக்குள் கனவென்ற மெத்தைக்குள் வருவாயா வருவாயா ஆண் : விழுந்தாழும் உன் கண்ணில் கனவாக நான் விழுவேன் எழுந்தாலும் உன் நெஞ்சில் நினைவாக நான் எழுவேன் பெண் : மடிந்தாலும் உன் மூச்சின் சூட்டால் மடிவேன் பிறந்தாலும் உனையே தான் மீண்டும் சேர்வேன் ஆண் : இனி உன் மூச்சை கடன் வாங்கி நான் வாழுவேன் பெண் : தவமின்றி கிடைத்த வரமே இனி வாழ்வில் எல்லாம் சுகமே ஆண் : நீ சூரியன் நான் வெண்ணிலா உன் ஒளியால் தானே வாழ்கிறேன் பெண் : நீ சூரியன் நான் தாமரை நீ வந்தால் தானே மலர்கிறேன் ஆண் : நீ சூரியன் நான் வான்முகில் நீ நடந்திடும் பாதையாகிறேன் பெண் : நீ சூரியன் நான் ஆழ்கடல் என் மடியில் உன்னை ஏந்தினேன் ஆண் : தவமின்றி கிடைத்த வரமே ஹோ ஓ … பெண் : இனி வாழ்வில் எல்லாம் சுகமே