← Back

Ore Vaanam Ore Bhoomi Song Lyrics

Singers : B. S Sasirekha and T. K. Kala Music by : M. S. Viswanathan Lyrics by : Kannadasan Female : Orae vaanam orae bhoomi orae saamithaan Naam orae kulam orae inam orae jaathithaan Orae vaanam orae bhoomi orae saamithaan Naam orae kulam orae inam orae jaathithaan Orae raththamthaan orae uyirumthaan Female : Orae vaanam orae bhoomi orae saamithaan Female : Therkku vadakku verupaadu Dhisaiyil irukkalaam Therkku vadakku verupaadu Dhisaiyil irukkalaam Oru dhesa makkal verupattaal Amaithi nilaikkumaa Female : Andru inaveri madha veriyai Maranthu sendreerae Adhae maranthathaalae sudhanthiraththai Vaangi kondeerae Female : Indru ungalukkul jaadhi petha Sandai varuvatho Rama raajiyaththil raththa gangai Pongi paaivatho Pongi paaivatho…oo…. Pongi paarvatho….oo….. Female : Medaiyilae jaathigalai Ozhippaen enbaargal Thangal peyarin pinnae Jaathi perai pottukolvathaen Female : Aadhiyilae vanthuvitta Pazhakkamthaanaiyyaa Arinthu kondu thirunthi Vaazhnthaal petham yaedhaiyyaa Female : Palliyilae kuzhanthaigalai Padikka saerkkaiyilae Angu jaathi perum ennavendru ketkiraargalae Female : Idhai aatchiyilae ullavargal Unarnthu kondaalae Agilamellaam jaathi pedham ozhiyum thannaalae Female : Oru thaayin vayittrinilae Udhiththa pillaigal Neegal ottrumaiyaai vaazhvatharkku Valarntha mullaigal Female : Ondrupattaal undu vaazhvu Kettu kollungal Idhai unarnthu kondu maraavarkku Eduththu sollungal…. Female : Kaattu moongil koottam pola Saernthu vaazhuvom Chorus : Saernthu vaazhuvom Female : Kaakkai kuruvi jaathi pola Pagirnthu unnuvom Chorus : Pagirnthu unnuvom Female : Ulagamellaam samaththuvaththai Oonga seiguvom Chorus : Oonga seiguvom Female : Orumaippaadu enum kodiyai Ulagil yaettruvom Chorus : Ulagil yaettruvom
பாடகர்கள் : பி. எஸ். சசிரேகா மற்றும் டி. கே. கலா இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் பாடலாசிரியர் : கண்ணதாசன் பெண் : ஒரே வானம் ஒரே பூமி ஒரே சாமிதான் நாம் ஒரே குலம் ஒரே இனம் ஒரே ஜாதிதான் ஒரே வானம் ஒரே பூமி ஒரே சாமிதான் நாம் ஒரே குலம் ஒரே இனம் ஒரே ஜாதிதான் ஒரே ரத்தம்தான் ஒரே உயிரும்தான் பெண் : ஒரே வானம் ஒரே பூமி ஒரே சாமிதான்… பெண் : தெற்கு வடக்கு வேறுபாடு திசையில் இருக்கலாம் தெற்கு வடக்கு வேறுபாடு திசையில் இருக்கலாம் ஒரு தேச மக்கள் வேறுபட்டால் அமைதி நிலைக்குமா பெண் : அன்று இனவெறி மத வெறியை மறந்து சென்றீரே அதை மறந்ததாலே சுதந்திரத்தை வாங்கி கொண்டீரே பெண் : இன்று உங்களுக்குள் ஜாதி பேத சண்டை வருவதோ ராம ராஜ்ஜியத்தில் ரத்த கங்கை பொங்கி பாய்வதோ பொங்கி பாய்வதோ…..ஓ….. பொங்கி பாய்வதோ…..ஓ…. பெண் : மேடையிலே ஜாதிகளை ஒழிப்பேன் என்பவர்கள் தங்கள் பெயரின் பின்னே ஜாதிப் பேரை போட்டுக்கொள்வதேன் பெண் : ஆதியிலே வந்துவிட்ட பழக்கம் தானய்யா அறிந்துக் கொண்டு திருந்தி வாழ்ந்தால் பேதம் ஏதய்யா பெண் : பள்ளியிலே குழந்தைகளை படிக்கச் சேர்க்கையிலே அங்கு ஜாதிப் பேரும் என்னவென்று கேட்கிறார்களே பெண் : இதை ஆட்சியிலே உள்ளவர்கள் உணர்ந்து கொண்டாலே அகிலமெல்லாம் ஜாதி பேதம் ஒழியும் தன்னாலே பெண் : ஒரு தாயின் வயிற்றினிலே உதித்த பிள்ளைகள் நீங்கள் ஒற்றுமையாய் வாழ்வதற்கு வளர்ந்த முல்லைகள் பெண் : ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு கேட்டுக் கொள்ளுங்கள் இதை உணர்ந்து கொண்டு மற்றவர்க்கு எடுத்து சொல்லுங்கள்.. பெண் : ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு கேட்டுக் கொள்ளுங்கள் இதை உணர்ந்து கொண்டு மற்றவர்க்கு எடுத்து சொல்லுங்கள்.. பெண் : காட்டு மூங்கில் கூட்டம் போல சேர்ந்து வாழுவோம் குழு : சேர்ந்து வாழுவோம் பெண் : காக்கை குருவி ஜாதி போல பகிர்ந்து உண்ணுவோம் குழு : பகிர்ந்து உண்ணுவோம் பெண் : உலகமெல்லாம் சமத்துவத்தை ஓங்கச் செய்குவோம் குழு : ஓங்கச் செய்குவோம் பெண் : ஒருமைப்பாடு எனும் கொடியை உலகில் ஏற்றுவோம்… குழு : உலகில் ஏற்றுவோம்…..