← Back

Vaanum Mannum Song Lyrics

Singers : Hariharan and K.S. Chithra Music by : Bharathwaj { Male : Vaanum mannum katti kondadhae Mannil neelam otti kondadhae Female : Oru moongil kaaderiya siru pori ondru podhum Andha pori indru thondriyadhae .. ae Male : Kaadhal idam paarpadhillai adhu inam paarpadhillai Adhu posukendru poothidudhae Female : Oru neerodai meenuku karai mel aasai vandhadhu Ini yennenna nerndhidumo … ooo } (2) Male : Nyaayama idhu paavama endru solla yarum ingu illai Female : Mounamae mozhiyanadhaal ada Baasai yenbadhoru thollai Aduthondru thondravillai Male : Ah ah ah ah vennila neer aatrilae Yendru vizhundhu paarthavargal illai Female : Vennila thanga thetrilae Indru veezhndhu ponadhoru thollai ilakanam paarkavillai …ii Male : Pirakum mottugal thedhi paarpadhuvum illai Female : Ah ah ah ah uravu maaralaam undhan kaiyil adhu illai Male : Oru neerodai meenuku karai mel aasai vandhadhu Ini yennenna nerndhidumo Female : Yevvidam mazhai thoovalaam yendru Megam yosipadhu undo Jaadhagam suba yogangal kandu Kaadhal kooduvadhu undo Unarchiku paadhai undo … oo Male : Vidhiyinum kaadhal valiyadhu idhil Veru vaatham ondru undo Kaadhalin dhisai aayiram adhu kandu sonnavargal undoo Kanavuku veli undo … oo Female : Kaalam solluvadhai kaadhal ketpadhuvum illai Male : Ah ah ah ah aasai yendra nadhi anaiyil nirpadhuvum illai Female : Oru neerodai meenuku karai mel aasai vandhadhu Ini yennenna nerndhidumo … oo Male : Vaanum mannum katti kondadhae Female : Mannil neelam otti kondadhae
பாடகி : கே.எஸ். சித்ரா பாடகா் : ஹரிஹரன் இசையமைப்பாளா் : பரத்வாஜ் ஆண் : { வானும் மண்ணும் கட்டிக் கொண்டதே மண்ணில் நீலம் ஒட்டிக் கொண்டதே பெண் : ஒரு மூங்கில் காடெறிய சிறு பொறி ஒன்று போதும் அந்த பொறி இன்று தோன்றியதே ஆண் : காதல் இடம் பார்ப்பதில்லை அது இனம் பார்ப்பதில்லை அது பொசுக்கென்று பூத்திடுதே பெண் : ஒரு நீரோடை மீனுக்கு கரை மேல் ஆசை வந்தது இனி என்னென்ன நேர்ந்திடுமோ } (2) ஆண் : நியாயமா இது பாவமா என்று சொல்ல யாரும் இங்கு இல்லை பெண் : மௌனமே மொழியானதால் அட பாஷை என்பதொரு தொல்லை அடுத்தொன்று தோன்றவில்லை ஆண் : ஆ ஆ… வெண்ணிலா நீராற்றிலே என்றும் வீழ்ந்து பார்த்தவர்கள் இல்லை பெண் : வெண்ணிலா தங்க சேற்றிலே இன்று வீழ்ந்து போனதொரு தொல்லை இலக்கணம் பார்க்கவில்லை ஆண் : பிறக்கும் மொட்டுகள் தேதி பார்ப்பதுவும் இல்லை பெண் : ஆ ஆ உறவு மாறலாம் உந்தன் கையில் அது இல்லை ஆண் : ஒரு நீரோடை மீனுக்கு கரை மேல் ஆசை வந்தது இனி என்னென்ன நேர்ந்திடுமோ பெண் : எவ்விடம் மழை தூவலாம் என்று மேகம் யோசிப்பது உண்டோ ஜாதகம் சுப யோகங்கள் கண்டு காதல் கூடுவது உண்டோ உணர்ச்சிக்கு பாதை உண்டோ ஆண் : விதியினும் காதல் வலியது இதில் வேறு வாதம் ஒன்று உண்டோ காதலின் திசை ஆயிரம் அது கண்டு சொன்னவர்கள் உண்டோ கனவுக்கு வேலியுண்டோ பெண் : காலம் சொல்லுவதை காதல் கேட்பதுவும் இல்லை ஆண் : ஆ ஆ ….ஆசை என்ற நதி அணையில் நிற்பதுவும் இல்லை பெண் : ஒரு நீரோடை மீனுக்கு கரை மேல் ஆசை வந்தது இனி என்னென்ன நேர்ந்திடுமோ ஆண் : வானும் மண்ணும் கட்டிக் கொண்டதே பெண் : மண்ணில் நீலம் ஒட்டிக் கொண்டதே