← Back

Ezhuthukiral Song Lyrics

Singer : Malaysia Vasudevan Music by : M. S. Vishwanathan Male : Ezhudhugiraal oru pudhu kavidhai Vanna iru vizhiyaal indha poongodhai Ezhudhugiraal oru pudhu kavidhai Vanna iru vizhiyaal indha poongodhai Idhai vida ilakkiyam kidaiyaadhu Ilakkana varambugal idharkkaedhu Idhai vida ilakkiyam kidaiyaadhu Ilakkana varambugal idharkkaedhu Male : Ezhudhugiraal oru pudhu kavidhai Vanna iru vizhiyaal indha poongodhai Male : Vaazhai madal pola udal azhagum Thangam vaartha chimizh pola udhadazhagum Vaazhai madal pola udal azhagum Thangam vaartha chimizh pola udhadazhagum Thanjai koyil radham pola nadai azhagum Vandhu kulavum vaelaiyil manam kavarum Kattazhagu pettagamum kan niraindha sithiram Kaala kaalam ingu enakkaaga Male : Ezhudhugiraal oru pudhu kavidhai Vanna iru vizhiyaal indha poongodhai Male : Vaanam valaikkaadha kadar karaiyo Idhu vandu thulaikkaadha pazha kulaiyo Vaanam valaikkaadha kadar karaiyo Idhu vandu thulaikkaadha pazha kulaiyo Innum vaasal thirakkaadha aranmanaiyo Kannan vandhu thuyilaadha aalilaiyo Putham pudhu puthagamo Punnagaikkum rathinamo Dheva dhevi ival enakkaaga Male : Ezhudhugiraal oru pudhu kavidhai Vanna iru vizhiyaal indha poongodhai Male : Pesum mani vaarthai thamizh chuvaiyo Pudhir podum vizhi jaadai vidu kadhaiyo Pesum mani vaarthai thamizh chuvaiyo Pudhir podum vizhi jaadai vidu kadhaiyo Nenjil aasai alai paayum pudhu punalo Oru aadai sumbaadum madhu kudamo Panjanaiyil kai anaikka paiya paiya mei anaikka Thaavi thaavi varum kalai maano Male : Ezhudhugiraal oru pudhu kavidhai Vanna iru vizhiyaal indha poongodhai Idhai vida ilakkiyam kidaiyaadhu Ilakkana varambugal idharkkaedhu Male : Ezhudhugiraal oru pudhu kavidhai Vanna iru vizhiyaal indha poongodhai
பாடகர் : மலேசியா வாசுதேவன் இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் ஆண் : எழுதுகிறாள் ஒரு புதுக்கவிதை வண்ண இரு விழியால் இந்த பூங்கோதை எழுதுகிறாள் ஒரு புதுக்கவிதை வண்ண இரு விழியால் இந்த பூங்கோதை இதைவிட இலக்கியம் கிடையாது இலக்கண வரம்புகள் இதற்கேது இதைவிட இலக்கியம் கிடையாது இலக்கண வரம்புகள் இதற்கேது ஆண் : எழுதுகிறாள் ஒரு புதுக்கவிதை வண்ண இரு விழியால் இந்த பூங்கோதை ஆண் : வாழை மடல் போல உடல் அழகும் தங்கம் வார்த்த சிமிழ் போல உதடழகும் வாழை மடல் போல உடல் அழகும் தங்கம் வார்த்த சிமிழ் போல உதடழகும் தஞ்சை கோயில் ரதம் போல நடை அழகும் வந்து குலவும் வேளையில் மனம் கவரும் கட்டழகு பெட்டகமோ கண் நிறைந்த சித்திரமோ கால காலம் இங்கு எனக்காக ஆண் : எழுதுகிறாள் ஒரு புதுக்கவிதை வண்ண இரு விழியால் இந்த பூங்கோதை ஆண் : வானம் வளைக்காத கடற்கரையோ இது வண்டு துளைக்காத பழக்குலையோ வானம் வளைக்காத கடற்கரையோ இது வண்டு துளைக்காத பழக்குலையோ இன்னும் வாசல் திறக்காத அரண்மனையோ கண்ணன் வந்து துயிலாத ஆழிலையோ புத்தம் புது புத்தகமோ புன்னகைக்கும் ரத்தினமோ தேவ தேவி இவள் எனக்காக ஆண் : எழுதுகிறாள் ஒரு புதுக்கவிதை வண்ண இரு விழியால் இந்த பூங்கோதை ஆண் : பேசும் மணி வார்த்தை தமிழ்ச் சுவையோ புதிர் போடும் விழி ஜாடை விடுகதையோ பேசும் மணி வார்த்தை தமிழ்ச் சுவையோ புதிர் போடும் விழி ஜாடை விடுகதையோ நெஞ்சில் ஆசை அலை பாயும் புதுப்புனலோ ஒரு ஆடை சுமந்தாடும் மதுக்குடமோ பஞ்சணையில் கை அணைக்க பையப் பைய மெய் அணைக்க தாவி தாவி வரும் கலைமானோ ஆண் : எழுதுகிறாள் ஒரு புதுக்கவிதை வண்ண இரு விழியால் இந்த பூங்கோதை இதைவிட இலக்கியம் கிடையாது இலக்கண வரம்புகள் இதற்கேது ஆண் : எழுதுகிறாள் ஒரு புதுக்கவிதை வண்ண இரு விழியால் இந்த பூங்கோதை