← Back

Naan Vaazha Kuruthu Song Lyrics

Singer : S. Janaki Music by : Ilayaraja Female : Naan vaazha kuruththazhagae Vaatti vachcha ponnazhagae En maalai kazhuththazhagae maththiyaana poovazhagae Thaali nee mudikka thavamaa thavamirunthaen Ola kodukkaamalae oththa vazhi poneegalae Female : Kodi thuni uduththu koottaththilae ninneenganaa Kodi janam mayangum koodalooru kannu padum Javuli kada adachchu jaadhi sanam vaayadachchu Thaniyaa poreegalae en aasaiyulla ennavarae Aiyyaa mannavarae Female : Sirichcha mugaththazhagum sevantha odhattazhagum Mayakkum kannazhagum vaaraatha sollazhagum Ulla en mannavarae uththamarae nallavarae Ukkaarntha edaththulaeyae usura maranthavarae Aiyyaa mannavarae Female : Kunguma pottu vachchaa kurukurunnu paappeegalae Manjathaan naan kulichchaa naathiriyaa nippeegalae Malliyappoo naan mudichchaa mayangi muzhippeegalae Ennaannu pottu vaippaen Eppadiththaan poo mudippaen neenga pona pinnaalae Female : Yaezhu ooru pannaiyilum unga polae aalaethu Intha mugam paakkaamae naaniruntha naalaethu Thoongaa velakku vachchu thunaikku irunthavarae Thaengaa odachchathu polae sillaa parantheegalae
பாடகி : எஸ். ஜானகி இசையமைப்பாளர் : இளையராஜா பெண் : நான் வாழக் குருத்தழகே வாட்டி வச்ச பொன்னழகே என் மாலை கழுத்தழகே மத்தியான பூவழகே தாலி நீ முடிக்க தவமா தவமிருந்தேன் ஓல கொடுக்காமலே ஒத்த வழி போனீகளே.. பெண் : கோடி துணி உடுத்தி கூட்டத்திலே நின்னீங்கனா கோடி ஜனம் மயங்கும் கூடலூரு கண்ணு படும் ஜவுளி கட அடச்சு ஜாதி சனம் வாயடச்சு தனியா போறீகளே என் ஆசையுள்ள என்னவரே ஐயா மன்னவரே….. பெண் : சிரிச்ச முகத்தழகும் செவந்த ஓதட்டழகும் மயக்கும் கண்ணழகும் வாராத சொல்லழகும் உள்ள என் மன்னவரே உத்தமரே நல்லவரே உக்கார்ந்த எடத்துலேயே உசுர மறந்தவரே ஐயா மன்னவரே….. பெண் : குங்கும பொட்டு வச்சா குறுகுறுன்னு பாப்பீகளே மஞ்சதான் நான் குளிச்சா மாதிரியா நிப்பீகளே மல்லியப்பூ நான் முடிச்சா மயங்கி முழிப்பீகளே என்னான்னு பொட்டு வைப்பேன் எப்படித்தான் பூ முடிப்பேன் நீங்க போன பின்னாலே…. பெண் : ஏழு ஊரு பண்ணையிலும் உங்க போலே ஆளேது இந்த முகம் பாக்காமே நானிருந்த நாளேது தூங்கா வெளக்கு வச்சு துணைக்கு இருந்தவரே தேங்கா ஒடச்சது போலே சில்லாப் பறந்தீகளே