← Back

Podhum Podhum Song Lyrics

Singers : Pradeep Kumar and Aditi Bhavaraju Music by : M. M. Keeravaani Lyrics by : Vivek Female : Podhum podhum kalavu paarvai Poovai modhum unadhu kann jadai Kaatril aadum mm..mm..azhagu thogai Unnai serummm..unadhu kaipaavai Male : Yaar pullai veithu kortha Azhagin kolam Kann kondu paartha bodhu Uraindhen naanum Male : En kaiyoda poovaaga nee Un kaadhodu yaazhaga naan En kannodu vaanaga nee Un nenjodu thaenaaga naan Female : Podhum podhum kalavu paarvai Poovai modhum unadhu kann jadai Humming : …………… Male : Sindhanaiyil mutti kondu Nenjam ellam nee aanaai Vetkam sindhi udhari kondu Innum tharamal yen ponaai Female : Un arugil naan serum thaenkaalam Vaazhndhidum naal varai neeladho Unnai enni thodaatha vaan megam Idai ena mazhaiyaaga pozhiyaadhoo Male : En kaiyoda poovaaga nee Female : Un kaadhodu yaazhaga naan Male : En kannodu vaanaga nee Un nenjodu thaenaaga naan Female : Unnidathil sikki kondu Inbam ellaam naan kaangiren Undhan perai ulari kondu Inba kanavil naan poven Male : Punnagaiyil unnodu pala kaalam Vaazhnthida aasaiyum varum neram En arugil un kaalgal nadai podum Uyir varai udan varathaano Female : En kaiyoda poovaaga nee Male : Un kaadhodu yaazhaga naan Female : En kannodu vaanaga nee Male : Un nenjodu thaenaaga naan Female : Podhum podhum kalavu paarvai Poovai modhum mm mm ..unadhu kann jadai
பாடகர்கள் : பிரதீப் குமார் மற்றும் அதிதி பாவராஜு இசை அமைப்பாளர் : எம். எம். கீரவாணி பாடல் ஆசிரியர் : விவேக் பெண் : போதும் போதும் கலவு பார்வை பூவை மோதும் உனது கண்ஜாடை காற்றில் ஆடும் அழகு தோகை உன்னை சேரும் உனது கைப்பாவை ஆண் : யார் புள்ளை வைத்து கோர்த்த அழகின் கோலம் கண் கொண்டு பார்தத போது உறைந்தேன் நானும் ஆண் : என் கையோடு பூவாக நீ உன் காதோடு யாழாக நான் உன் கண்ணோடு வானாக நீ உன் நெஞ்சோடு தேனாக நான் பெண் : போதும் போதும் கலவு பார்வை பூவை மோதும் உனது கண்ஜாடை முனகல் : …………….. ஆண் : சிந்தனையில் முட்டிக்கொண்டு நெஞ்சமெல்லாம் நீ ஆனாய் வெட்கம் சிந்தி உதறிக் கொண்டு இன்னும் தராமல் ஏன் போனாய் பெண் : உன் அருகில் நான் சேரும் தேன்காலம் வாழ்ந்திடும் நாள் வரை நீளாதோ உன்னை எண்ணி தொடாத வான்மேகம் இடியென மழையாக பொழியாதோ ஆண் : என் கையோடு பூவாக நீ பெண் : உன் காதோடு யாழாக நான் ஆண் : உன் கண்ணோடு வானாக நீ உன் நெஞ்சோடு தேனாக நான் பெண் : உன்னிடத்தில் சிக்கிக் கொண்டு இன்பமெல்லாம் நான் காண்கிறேன் உந்தன் பேரை உளறிக்கொண்டு அந்தக் கனாவில் நான் போவேன் ஆண் : புன்னகை உன்னோடு பல காலம் வாழ்ந்திட ஆசையும் வரும் நேரம் என் அருகில் உன் கால்கள் நடைபோடும் உயிர் வரை உடன் வரத்தானோ பெண் : என் கையோடு பூவாக நீ ஆண் : உன் காதோடு யாழாக நான் பெண் : உன் கண்ணோடு வானாக நீ ஆண் : உன் நெஞ்சோடு தேனாக நான் பெண் : போதும் போதும் கலவு பார்வை பூவை மோதும்..ம்ம்ம் உனது கண்ஜாடை