← Back

Sirithu Vaazhavendum Song Lyrics

Singer : T.M. Soundararajan Music by : M.S. Viswanathan Male : { Chikku mangu Chikku mangu Chacha paappaa } (2) Chorus : { Chikku mangu Chikku mangu Chacha paappaa } (4) Male : { Sirithu vaazha Vendum pirar sirika Vaazhnthidadhae } (2) Male : { Uzhaithu vaazha Vendum pirar uzhaipil Vaazhnthidadhae } (2) Male : Sirithu vaazha Vendum pirar sirika Vaazhnthidadhae Male : Anbil vaazhum Idhayam thannai deivam Kandaal vanangum Yengae sollu Female : Vanangum Male : Anbil vaazhum Idhayam thannai deivam Kandaal vanangum Male : Aasai illaa Manidhar thammai Thunbam engae nerungum Male : Ponnil inbam Pugazhil inbam endrae Nenjam mayangum Male : Poovai polae Sirikum unnai kandaal Unmai vilangum Male : Sirithu vaazha Vendum pirar sirika Vaazhnthidadhae Male : Mullil roja Malarnthadhaalae Mulluku enna perumai Male : Sippikullae Piranthadhaalae Muthuku enna sirumai Male : Engae nanmai Irundha bodhum yetru Kollum ulagam Male : Angae vandhu Thazhuvi kondu Potrum nalla idhayam Male : Sirithu vaazha Vendum pirar sirika Vaazhnthidadhae Chorus : { Chikku mangu Chikku mangu Chacha paappaa } (2) Male : Vaanil neendhum Nilavil naalai palli Koodam nadakum Female : Palli koodam nadakum Male : Kaatril yeri payanam Sella paadhai angae irukum Female : Paadhai angae irukum Male : Engum vaazhum Mazhalai selvam ondrai Serndhu padikum Male : Illai jaadhi madhamum Illai endrae paadi sirikum Male : Sirithu vaazha Vendum pirar sirika Vaazhnthidadhae Chorus : { Chikku mangu Chikku mangu Chacha paappaa } (10)
பாடகர் : டி.எம். சௌந்தரராஜன் இசையமைப்பாளர் : எம்.எஸ். விஸ்வநாதன் ஆண் : { சிக்கு மங்கு சிக்கு மங்கு சச்ச பாப்பா } (2) குழு : { சிக்கு மங்கு சிக்கு மங்கு சச்ச பாப்பா } (4) ஆண் : { சிரித்து வாழ வேண்டும் பிறர் சிரிக்க வாழ்ந்திடாதே } (2) ஆண் : { உழைத்து வாழ வேண்டும் பிறர் உழைப்பில் வாழ்ந்திடாதே } (2) ஆண் : சிரித்து வாழ வேண்டும் பிறர் சிரிக்க வாழ்ந்திடாதே ஆண் : அன்பில் வாழும் இதயம் தன்னை தெய்வம் கண்டால் வணங்கும் எங்கே சொல்லு பெண் : வணங்கும் ஆண் : அன்பில் வாழும் இதயம் தன்னை தெய்வம் கண்டால் வணங்கும் ஆண் : ஆசை இல்லா மனிதர் தம்மை துன்பம் எங்கே நெருங்கும் ஆண் : பொன்னில் இன்பம் புகழில் இன்பம் என்றே நெஞ்சம் மயங்கும் ஆண் : பூவைப் போலே சிரிக்கும் உன்னைக் கண்டால் உண்மை விளங்கும் ஆண் : சிரித்து வாழ வேண்டும் பிறர் சிரிக்க வாழ்ந்திடாதே ஆண் : முள்ளில் ரோஜா மலர்ந்ததாலே முள்ளுக்கு என்ன பெருமை ஆண் : சிப்பிக்குள்ளே பிறந்ததாலே முத்துக்கு என்ன சிறுமை ஆண் : எங்கே நன்மை இருந்த போதும் ஏற்றுக் கொள்ளும் உலகம் ஆண் : அங்கே வந்து தழுவிக் கொண்டு போற்றும் நல்ல இதயம் ஆண் : சிரித்து வாழ வேண்டும் பிறர் சிரிக்க வாழ்ந்திடாதே குழு : { சிக்கு மங்கு சிக்கு மங்கு சச்ச பாப்பா } (2) ஆண் : வானில் நீந்தும் நிலவில் நாளை பள்ளிக் கூடம் நடக்கும் பெண் : பள்ளிக் கூடம் நடக்கும் ஆண் : காற்றில் ஏறி பயணம் செல்ல பாதை அங்கே இருக்கும் பெண் : பாதை அங்கே இருக்கும் ஆண் : எங்கும் வாழும் மழலைச் செல்வம் ஒன்றாய் சேர்ந்து படிக்கும் ஆண் : இல்லை ஜாதி மதமும் இல்லை என்றே பாடிச் சிரிக்கும் ஆண் : சிரித்து வாழ வேண்டும் பிறர் சிரிக்க வாழ்ந்திடாதே குழு : { சிக்கு மங்கு சிக்கு மங்கு சச்ச பாப்பா } (10)