← Back

Kangalal Naan Varainthen Song Lyrics

Singers : P. Susheela and K. J. Yesudas Music by : V. Kumar Lyrics by : Vaali Male : Kangalaal naan varainthaen Anbenum orr kavithai Thaen malar marappathundo Thendralae un ninaivai Male : Kangalaal naan varainthaen Anbenum orr kavithai Thaen malar marappathundo Thendralae un ninaivai Male : Margazhi maadham endraal Aa…aa….aa….aah…aa… Porvai pol naanirukka Chiththirai maatham endraal Vaadai pol neeyirukka Male : Naan soodum maalaigal nee konda kaigal Nei konda dheepangal mai konda kangal Poovum pottum mevum penmai Poovai polae naalum menmai Male : Kangalaal naan varainthaen Anbenum orr kavithai Thaen malar marappathundo Thendralae un ninaivai Male : Un Nalam ninaippathellaam En nalam naanariyaen Unnai naan vaazha vaikka Ennaiyae naan koduppaen Male : Sonthangal panthangal undaana pinbu Memmelum valargindra nilavaagum anbu Unnai paadum enthan ullam Endrum pongum gangai vellaam Female : Kangalaal naan varainthaen Anbenum orr kavithai Thaen malar marappathundo Thendralae un ninaivai Female : Kaalangal kaniyum varai Kanni naan kaaththirupen Kannanin varavukendrae Kann malar pooththiruppaen Female : Kalyaana vaibogam oorkolam yaavum Nan naalil unnodu naan kaana vendum Ennam ellaam kannil minna Sollil solla michcham enna Male : Kangalaal naan varainthaen Anbenum orr kavithai Female : Thaen malar marappathundo Thendralae un ninaivai Male : Kangalaal naan varainthaen Anbenum orr kavithai Female : Kangalaal naan varainthaen Anbenum orr kavithai
பாடகர்கள் : பி. சுசீலா மற்றும் கே. ஜே. யேசுதாஸ் இசையமைப்பாளர் : வி. குமார் பாடலாசிரியர் : வாலி ஆண் : கண்களால் நான் வரைந்தேன் அன்பெனும் ஓர் கவிதை தேன் மலர் மறப்பதுண்டோ தென்றலே உன் நினைவை… ஆண் : கண்களால் நான் வரைந்தேன் அன்பெனும் ஓர் கவிதை தேன் மலர் மறப்பதுண்டோ தென்றலே உன் நினைவை… ஆண் : மார்கழி மாதம் என்றால் ஆ….ஆ….ஆ…..ஆஹ்…ஆ…. போர்வை போல் நானிருக்க சித்திரை மாதம் என்றால் வாடை போல் நீயிருக்க ஆண் : நான் சூடும் மாலைகள் நீ கொண்ட கைகள் நெய் கொண்ட தீபங்கள் மை கொண்ட கண்கள் பூவும் பொட்டும் மேவும் பெண்மை பூவைப் போலே நாளும் மென்மை…… ஆண் : கண்களால் நான் வரைந்தேன் அன்பெனும் ஓர் கவிதை தேன் மலர் மறப்பதுண்டோ தென்றலே உன் நினைவை… ஆண் : உன் நலம் நினைப்பதெல்லாம் என் நலம் நானறியேன் உன்னை நான் வாழ வைக்க என்னையே நான் கொடுப்பேன் ஆண் : சொந்தங்கள் பந்தங்கள் உண்டான பின்பு மென்மேலும் வளர்கின்ற நிலவாகும் அன்பு உன்னைப் பாடும் எந்தன் உள்ளம் என்றும் பொங்கும் கங்கை வெள்ளம்…. பெண் : கண்களால் நான் வரைந்தேன் அன்பெனும் ஓர் கவிதை தேன் மலர் மறப்பதுண்டோ தென்றலே உன் நினைவை… பெண் : காலங்கள் கனியும் வரை கன்னி நான் காத்திருப்பேன் கண்ணனின் வரவுக்கென்றே கண் மலர் பூத்திருப்பேன் பெண் : கல்யாண வைபோகம் ஊர்கோலம் யாவும் நன் நாளில் உன்னோடு நான் காண வேண்டும் எண்ணம் எல்லாம் கண்ணில் மின்ன சொல்லில் சொல்ல மிச்சம் என்ன…….. ஆண் : கண்களால் நான் வரைந்தேன் அன்பெனும் ஓர் கவிதை பெண் : தேன் மலர் மறப்பதுண்டோ தென்றலே உன் நினைவை… ஆண் : கண்களால் நான் வரைந்தேன் அன்பெனும் ஓர் கவிதை பெண் : கண்களால் நான் வரைந்தேன் அன்பெனும் ஓர் கவிதை