← Back

Vanna Malar Thannai Kandu Song Lyrics

Singers : T. A. Mothi and P. Leela Music by : G. Govindarajulu Naidu Female : Ho…oo… Ho oo oo oo oo baalu… Male : Ho…oo… Ho oo oo oo oo leelaa… Female : Vanna malar thannai kandu Innisai pan paadi kondu Thannai marandhae pon vandu Enna solludhu… Vanna malar thannai kandu vandu Male : Kanni undhan kannai kandu Than inam endrae marundu Than nilai marandhae vandu Isai paadudhu..heyy Kanni undhan kannai kandu vandu Female : Kaana vaedan polae vandhu Kanni vaikka paarkkureer Kaana vaedan polae vandhu Kanni vaikkap paarkkureer Male : Maanena marundodum Pen maanae Maanena marundodum Pen maanae Unnai naan vidaenae Female : Maanidhuvum allavae poo maanae Mayangaadhae veenae Maanidhuvum allavae poo maanae Male : Kovai idhazh thannai kandu Aaval meeri vandhae Kovai idhazh thannai kandu Aaval meeri vandhae Female : Kothi thinna pittham Kondadhaeno kili polavae Kothi thinna pittham Kondadhaeno kili polavae Male : Konji konji paesi endhan Nenjinai kavarndha inba Vanjiyai mei kaadhal thandha Vanna kiliyae Konji konji paesum kiliyae Female : Muzhu madhiyum mugilum Pol naam vilaiyaaduvom Muzhu madhiyum mugilum Pol naam vilaiyaaduvom Male : Vizhi maniyum imaiyum polae Uravaaduvom Vizhi maniyum imaiyum polae Uravaaduvom Female : Aaruyirae…ae…ae… Male : Aaramudhae…ae…ae… Male : Aaramudhenavae kaadhal Inbam kaanuvom Aaramudhenavae kaadhal Inbam kaanuvom Female : Anbil inaindhondraai Vaazhuvom Both : Naamae anbil inaindhondraai Vaazhuvom Both : Vanna malar thannai kandu Innisai pan paadi kondu Thannai marandhae pon vandu Kaadhal paesudhu Vanna malar thannai kandu vandu
பாடகர்கள் : டி. ஏ. மோத்தி மற்றும் பி. லீலா இசையமைப்பாளர் : ஜி. கோவிந்தராஜுலு நாய்டு பெண் : ஹோ…….ஓ… ஹோ ஓ ஓ ஓ ஓ…பாலு… ஆண் : ஹோ…ஓ… ஹோ ஓ ஓ ஓ ஓ…….லீலா….. பெண் : வண்ண மலர் தன்னைக் கண்டு இன்னிசைப் பண் பாடிக் கொண்டு தன்னை மறந்தே பொன் வண்டு என்ன சொல்லுது… வண்ண மலர் தன்னைக் கண்டு வண்டு ஆண் : கன்னி உந்தன் கண்ணைக் கண்டு தன் இனம் என்றே மருண்டு தன் நிலை மறந்தே வண்டு இசை பாடுது….ஹேய் கன்னி உந்தன் கண்ணைக் கண்டு வண்டு பெண் : கான வேடன் போலே வந்து கண்ணி வைக்கப் பார்க்குறீர் கான வேடன் போலே வந்து கண்ணி வைக்கப் பார்க்குறீர் ஆண் : மானென மருண்டோடும் பெண் மானே மானென மருண்டோடும் பெண் மானே உன்னை நான் விடேனே பெண் : மானிதுவும் அல்லவே பூ மானே மயங்காதே வீணே மானிதுவும் அல்லவே பூ மானே ஆண் : கோவை இதழ் தன்னைக் கண்டு ஆவல் மீறி வந்தே கோவை இதழ் தன்னைக் கண்டு ஆவல் மீறி வந்தே பெண் : கொத்தித் தின்னப் பித்தம் கொண்டதேனோ கிளி போலவே கொத்தித் தின்னப் பித்தம் கொண்டதேனோ கிளி போலவே ஆண் : கொஞ்சிக் கொஞ்சிப் பேசி எந்தன் நெஞ்சினைக் கவர்ந்த இன்ப வஞ்சியை மெய்க் காதல் தந்த வண்ணக் கிளியே கொஞ்சிக் கொஞ்சிப் பேசும் கிளியே பெண் : முழு மதியும் முகிலும் போல் நாம் விளையாடுவோம் முழு மதியும் முகிலும் போல் நாம் விளையாடுவோம் ஆண் : விழி மணியும் இமையும் போலே உறவாடுவோம் விழி மணியும் இமையும் போலே உறவாடுவோம் பெண் : ஆருயிரே…ஏ…ஏ… பெண் : ஆரமுதே…ஏ…ஏ… ஆண் : ஆரமுதெனவே காதல் இன்பம் காணுவோம் ஆரமுதெனவே காதல் இன்பம் காணுவோம் பெண் : அன்பில் இணைந்தொன்றாய் வாழுவோம் இருவர் : நாமே அன்பில் இணைந்தொன்றாய் வாழுவோம் இருவர் : வண்ணமலர் தன்னைக் கண்டு இன்னிசைப் பண் பாடிக் கொண்டு தன்னை மறந்தே பொன் வண்டு காதல் பேசுது வண்ண மலர் தன்னைக் கண்டு வண்டு