← Back

Neethane Enthan Song Lyrics

Singer : S.P. Balasubrahmanyam Music by : Ilayaraja Male : {Nee thaanae endhan ponvasantham Pudhu raaja vaazhkai naalai un sontham} (2) Male : Aahaa..nee thaanae endhan ponvasantham Pudhu raaja vaazhkai naalai un sontham En vaasal hey varaverkum anneram Un sorgam hey arangerum kannoram Male : Nee thaanae endhan ponvasantham Pudhu raaja vaazhkai naalai un sontham Male : Paadhai muzhuthum.. kodi malargal Paadi varumae.. theva kuyilgal Un aadai hey midhakindra paalaadai Un kaalai hey kulipaattum neerodai Male : Veyil naalum sudumena dhegam kedumena Jannal thiraiyidum megam Siru kaadhal vizhigalil veesum mozhigalil Piraiyum pournami aagum Sandhosham unnodu kaiveesum en..naalum .. Male : Nee thaanae endhan ponvasantham Pudhu raaja vaazhkai naalai un sontham En vaasal hey varaverkum anneram Un sorgam hey arangerum kannoram Male : Eera iravil nooru kanavu Pedhai vizhiyil bhodhai ninaivu Panneeril hey ilandhegam neeraadum Pani pookkal hey unai kandu thenoorum Male : Nee aadai anigalan soodum Araigalil rojaa malligai vaasam Muga vervai thuliyathu pogum varaiyilum Thendral kavarigal veesum Nenjoram thallaadum muthaaram… ennaalum Male : Nee thaanae endhan ponvasantham Puthu raaja vaazhkkai naalai un sontham En vaasal hey varaverkum anneram Un sorgam hey arangerum kannoram Male : Mmmm..mmmm..mmmmm Mmmm..aahaa..mmmmmm……….
பாடகர் : எஸ்.பி. பாலசுப்ரமணியம் இசையமைப்பாளர் : இளையராஜா ஆண் : { நீதானே எந்தன் பொன்வசந்தம் புது ராஜ வாழ்க்கை நாளை உன் சொந்தம் } (2) ஆண் : ஆஹா நீதானே எந்தன் பொன்வசந்தம் புது ராஜ வாழ்க்கை நாளை உன் சொந்தம் என் வாசல் ஹே வரவேற்கும் அந்நேரம் உன் சொர்க்கம் ஹே அரங்கேறும் கண்ணோரம் ஆண் : நீதானே எந்தன் பொன்வசந்தம் புது ராஜ வாழ்க்கை நாளை உன் சொந்தம் ஆண் : பாதை முழுதும் கோடி மலர்கள் பாடி வருமே தேவக் குயில்கள் உன் ஆடை ஹே மிதக்கின்ற பாலாடை உன் காலை ஹே குளிப்பாட்டும் நீரோடை ஆண் : வெயில் நாளும் சுடுமென தேகம் கெடுமென ஜன்னல் திரையிடும் மேகம் சிறு காதல் விழிகளில் வீசும் மொழிகளில் பிறையும் பௌர்ணமி ஆகும் சந்தோஷம் உன்னோடு கைவீசும் எந்நாளும் ஆண் : நீதானே எந்தன் பொன்வசந்தம் புது ராஜ வாழ்க்கை நாளை உன் சொந்தம் என் வாசல் ஹே வரவேற்கும் அந்நேரம் உன் சொர்க்கம் ஹே அரங்கேறும் கண்ணோரம் ஆண் : ஈர இரவில் நூறு கனவு பேதை விழியில் போதை நினைவு பன்னீரில் ஹே இளந்தேகம் நீராடும் பனிப்பூக்கள் ஹே உனைக்கண்டு தேனூறும் ஆண் : நீ ஆடை அணிகலன் சூடும் அறைகளில் ரோஜா மல்லிகை வாசம் முக வேர்வைத் துளியது போகும் வரையிலும் தென்றல் கவரிகள் வீசும் நெஞ்சோரம் தள்ளாடும் முத்தாரம் எந்நாளும் ஆண் : நீதானே எந்தன் பொன்வசந்தம் புது ராஜ வாழ்க்கை நாளை உன் சொந்தம் என் வாசல் ஹே வரவேற்கும் அந்நேரம் உன் சொர்க்கம் ஹே அரங்கேறும் கண்ணோரம் ஆண் : ம்ம்ம்ம்ம் ம்ம்ம்ம் ம்ம்ம்ம் ம்ம்ம்ம் ஆஹா ம்ம்ம்ம்ம்