← Back

Yedho Oru Ragam Song Lyrics

Singers : P. Susheela and P. Jayachandran Music by : V. S. Narasimhan Lyrics by : Vairamuthu Male : Yaedho oru raagam yaeno adhil sogam Santham vanthathu adhil yaedho sontham vanthathu Un paadal ennai vendrathu Uyirodu ullam sendrathu Kaanamal thalli nindru thaththalikkum aavi Vaaraayo enthan devi Male : Yaedho oru raagam yaeno adhil sogam Female : Aaa…..aaa….aa….aa….aa….aa…aa….aa Kannaa en mel pizhaiyae illai Siraiyai murikka sirakillai Kannil innum kanneer illai Velichcham irunthum pagalillai Adainthaen unnai idhuvey pothum Iniyun raagam ivalin vedham Male : Yaezhai kelaatha poobhaalam indru ketkindratho Paalaivanamengum paalodai vanthu paaigindratho Kanavaa nanavaa needhaanaa neeyaethaanaa Male : Yaedho oru raagam yaeno adhil sogam Female : Unnai enni paadumpothu Neruppai sudum en perumoochchu Kannaa unnai kannaal kandaen Sarugo meendum thaliraachchu Idhayam engum inbam kollai Ini en vaazhvil iravey illai Male : Kadalilae saerntha Aarondru meendu varugindrathu Sonna sol indru maaraamal Theenda varugindrathu Thuyarai eriththaen en vaazhvil sogam yaedhu Female : Yaedho oru raagam yaedho adhil mogam Santham vanththu adhil yaedho sonthaam vanthathu Un paadal ennai vendrathu Uyirodu ullam sendrathu Kaanaamal thalli nendru thaththalikkum aavi Ododi vanthaal devi Female : Yaedho oru raagam yaedho adhil mogam….
பாடகர்கள் : பி. சுஷீலா மற்றும் பி. ஜெயச்சந்திரன் இசையமைப்பாளர் : வி. எஸ். நரசிம்மன் பாடலாசிரியர் : வைரமுத்து ஆண் : ஏதோ ஒரு ராகம் ஏனோ அதில் சோகம் சந்தம் வந்தது அதில் ஏதோ சொந்தம் வந்தது உன் பாடல் என்னை வென்றது உயிரோடு உள்ளம் சென்றது காணாமல் தள்ளி நின்று தத்தளிக்கும் ஆவி வாராயோ எந்தன் தேவி ஆண் : ஏதோ ஒரு ராகம் ஏனோ அதில் சோகம் பெண் : ஆஆ…..ஆஆ…..ஆ….ஆ….ஆ…ஆ….ஆ….ஆஆ.. கண்ணா என் மேல் பிழையே இல்லை சிறையை முறிக்க சிறகில்லை கண்ணில் இன்னும் கண்ணீர் இல்லை வெளிச்சம் இருந்தும் பகலில்லை அடைந்தேன் உன்னை இதுவே போதும் இனியுன் ராகம் இவளின் வேதம் ஆண் : ஏழை கேளாத பூபாளம் இன்று கேட்கின்றதோ பாலைவனமெங்கும் பாலோடை வந்து பாய்கின்றதோ கனவா நனவா நீதானா நீயேதானா ஆண் : ஏதோ ஒரு ராகம் ஏனோ அதில் சோகம் பெண் : உன்னை எண்ணி பாடும்போது நெருப்பை சுடும் என் பெருமூச்சு கண்ணா உன்னை கண்ணால் கண்டேன் சருகோ மீண்டும் தளிராச்சு இதயம் எங்கும் இன்பம் கொள்ளை இனி என் வாழ்வில் இரவே இல்லை ஆண் : கடலிலே சேர்ந்த ஆறொன்று மீண்டு வருகின்றது சொன்ன சொல் இன்று மாறாமல் தீண்ட வருகின்றது துயரை எரித்தேன் என் வாழ்வில் சோகம் ஏது பெண் : ஏதோ ஒரு ராகம் ஏதோ அதில் மோகம் சந்தம் வந்தது அதில் ஏதோ சொந்தம் வந்தது உன் பாடல் என்னை வென்றது உயிரோடு உள்ளம் சென்றது காணாமல் தள்ளி நின்று தத்தளிக்கும் ஆவி ஓடோடி வந்தாள் தேவி பெண் : ஏதோ ஒரு ராகம் ஏதோ அதில் மோகம்….