← Back

Saama Kodaangi Song Lyrics

Singers : Anitha, Jayamoorthy and Velmurugan Music by : Yuvan Shankar Raja Male : Ye saama kodaangi Udukka pol enna Poluthum ulukkuriyae.. Indha seema muchchudum Neranji ninnalum Sirichae nee enna Kolluriyae… Female : Ye saama kodaangi Udukka pol enna Poluthum ulukkuriyae.. Indha seema muchchudum Neranji ninnalum Sirichae nee enna Kolluriyae… Male : En muthu nava rathinamae Mundhi aninji Ne vanthu nikka pogudhu En kannu avinji Female : Kanavae illadha Karumba.. um pechu Manasa thithippa maathiduchi.. Female : Kodi ruvaya Kodaiyaa thandhalum Odhukki vaippomungaa.. Ettu maadi veedellam Ethukku venaanga Ola.. kottaayae pothummunga Male : Kaadu pooraavum Udhavum sondhandhaan Kalanga maattommunga Vera aalu ullara Thuninuchi vandhaalae Usura thanthaachum kaappomunga Female : Hey kattayila poradhu thaan Indha usuru Itha kanniyamaa vachukittaa Enna thavaru Chorus : Edhaiyum thannulla Marachchi vaikkaatha Kaadaa vaalvomae Naanga naanga… Male : Aasa pattaalum Edhaiyum kekkaama Edukka koodaadhunga.. Veli vesham podaama Nesamaa vaazhnthaalae Edhuvum thannala.. Kai koodungha.. Female : Verae illaama Maramum vaazhadhu Vivaram solvommunga Ventha sorae aanalum Uzhachchi thingaatti Udambil ottaadhu kettukkanga Male : Hey uththamanaa vaazhum vara Illa kavala Nee unna nitham nambum vara Undu ragala Chorus : Vazhiyum maaraama Nadandha thappilla Nimundhu vaazhvomae Oorae sollaa….
பாடகி : அனிதா பாடகா்கள் : ஜெயமூர்த்தி, வேல்முருகன் இசையமைப்பாளா் : யுவன் சங்கர் ராஜா ஆண் : ஏ சாமக் கோடாங்கி உடுக்க போல் என்ன பொழுதும் உலுக்குறியே இந்த சீம முச்சூடும் நிறைஞ்சி நின்னாலும் சிரிச்சே நீ என்ன கொல்லுறியே பெண் : ஏ சாமக் கோடாங்கி உடுக்க போல் என்ன பொழுதும் உலுக்குறியே இந்த சீம முச்சூடும் நிறைஞ்சி நின்னாலும் சிரிச்சே நீ என்ன கொல்லுறியே ஆண் : என் முத்துநவ ரத்தினமே முந்தி அணிஞ்சி நீ வந்து நிக்க போகுது என் கண்ணு அவிஞ்சி பெண் : கனவே இல்லாத கரும்பா உம் பேச்சு மனச தித்திப்பா மாத்திடுச்சி பெண் : கோடி ரூவாய கொடையா தந்தாலும் ஒதுக்கி வைப்போமுங்க எட்டு மாடி வீடெல்லாம் எதுக்கு வேணாங்க ஓல கொட்டாயே போதுமுங்க ஆண் : காடு பூராவும் உதவும் சொந்தந்தான் கலங்கமாட்டோமுங்க வேற ஆளு உள்ளார துணிஞ்சி வந்தாலே உசுர தந்தாச்சும் காப்போமுங்க பெண் : ஹே கட்டையில போறதுதான் இந்த உசுரு இத கண்ணியமா வைச்சுகிட்டா என்ன தவறு குழு : எதையும் தன்னுள்ள மறைச்சி வைக்காத காடா வாழ்வோமே நாங்க நாங்க ஆண் : ஆசைப்பட்டாலும் எதையும் கேட்காம எடுக்க கூடாதுங்க வெளி வேசம் போடாம நெசமா வாழ்ந்தாலே எதுவும் தன்னால கைகூடுங்க பெண் : வேரே இல்லாம மரமும் வாழாது விவரம் சொல்வோமுங்க வெந்த சோறே ஆனாலும் உழைச்சி திங்காட்டி உடம்பில் ஒட்டாது கேட்டுக்குங்க ஆண் : ஹே உத்தமனா வாழும்வரை இல்ல கவல நீ உன்ன நித்தமும் நம்பும் வரை உண்டு ரகல குழு : வழியும் மாறாம நடந்தா தப்பில்ல நிமுந்து வாழ்வோமே ஊரே சொல்ல