← Back

Kaavalukku Vel Undu Song Lyrics

Singer : Seerkazhi Govindarajan Music by : Kunnakudi Vaidyanathan Lyrics by : Kannadasan Male : Kaavalukku velundu Aadalukku mayilundu Kovilukku porulennadaa Kumaraa neeyirukkum idamthaanadaa Male : Kaavalukku velundu Aadalukku mayilundu Kovilukku porulennadaa Kumaraa neeyirukkum idamthaanadaa Male : Nathigalilum malargalilum Nadanthu varum thendralilum Un mugam kandaenadaa Un mugam kandaenadaa Engum shanmugam nindraanadaa Male : Om muruga endravudan Uruguthadaa ullamellaam Oru ganam sonnaenadaa Angae saravanan vanthaanadaa Male : Kaavalukku velundu Aadalukku mayilundu Kovilukku porulennadaa Kumaraa neeyirukkum idamthaanadaa Male : Deivayaanai thedi vanthaalae Vizhi vandodu Kanthanunnai kaana vanthaalo Deivayaanai thedi vanthaalae Vizhi vandodu Kanthanunnai kaana vanthaalo Arul kannodu Bakthanennai paarkka vanthaalo Male : Oru magal azhagiya thirumagal Valli vanthaalo Kuramagal varuvathil mudhalmagal Kobam kondaalae Male : Oru magal azhagiya thirumagal Valli vanthaalo Kuramagal varuvathil mudhalmagal Kobam kondaalae Male : Irandukkum idaiyilae mirandathu yaenadaa Sodhanai enakku Vaiththaayae Iru pennaalae vedhanai unakku vaiththaayae En munnalae naadagam nadakka vaiththaayae Male : Aaru karthigai pengalidam Valarththaai muruga thaalaelo Aaru karthigai pengalidam Valarththaai muruga thaalaelo Azhagiya thamarai malargalilae Thavazhnthaai kumara thaalaelo Thaalaelo nee thaalaelo Thaalaelo nee thaalaelo Male : Aaduvathum thottiladaa Anbu magan kattiladaa Aaduvathum thottiladaa Anbu magan kattiladaa Paaduvathu valli alladaa En kanthaiyaa yaezhaiyudan palli kolladaa Male : Thirupaatham naan thaanga thaalaelo Intha puviyaavum nee thaanga thaalaelo Kanthaiyyaa velaiyaa thaalaelo En thangaiyaa murugaiyaa thaalaelo Nee thaalaelo….nee thaalaelo…..
பாடகர் : சீர்காழி கோவிந்தராஜன் இசையமைப்பாளர் : குன்னக்குடி வைத்தியநாதன் பாடலாசிரியர் : கண்ணதாசன் ஆண் : காவலுக்கு வேலுண்டு ஆடலுக்கு மயிலுண்டு கோவிலுக்கு பொருளென்னடா குமரா நீயிருக்கும் இடம் தானடா ஆண் : காவலுக்கு வேலுண்டு ஆடலுக்கு மயிலுண்டு கோவிலுக்கு பொருளென்னடா குமரா நீயிருக்கும் இடம் தானடா ஆண் : நதிகளிலும் மலர்களிலும் நடந்துவரும் தென்றலிலும் உன் முகம் கண்டேனடா உன் முகம் கண்டேனடா எங்கும் சண்முகம் நின்றானடா ஆண் : ஓம் முருகா என்றவுடன் உருகுதடா உள்ளமெல்லாம் ஒரு கணம் சொன்னேனடா அங்கே சரவணன் வந்தானடா ஆண் : காவலுக்கு வேலுண்டு ஆடலுக்கு மயிலுண்டு கோவிலுக்கு பொருளென்னடா குமரா நீயிருக்கும் இடம் தானடா ஆண் : தெய்வயானை தேடி வந்தாளே விழி வண்டோடு கந்தனுன்னைக் காண வந்தாளோ தெய்வயானை தேடி வந்தாளே விழி வண்டோடு கந்தனுன்னைக் காண வந்தாளோ அருள் கண்ணோடு பக்தனென்னைப் பார்க்க வந்தாளோ ஆண் : ஒரு மகள் அழகிய திருமகள் வள்ளி வந்தாளே குறமகள் வருவதில் முதல்மகள் கோபம் கொண்டாளே ஆண் : ஒரு மகள் அழகிய திருமகள் வள்ளி வந்தாளே குறமகள் வருவதில் முதல்மகள் கோபம் கொண்டாளே ஆண் : இரண்டுக்கும் இடையிலே மிரண்டது ஏனடா சோதனை எனக்கு வைத்தாயே இரு பெண்ணாலே வேதனை உனக்கு வைத்தாயே என் முன்னாலே நாடகம் நடக்க வைத்தாயே ஆண் : ஆறு கார்த்திகைப் பெண்களிடம் வளர்ந்தாய் முருகா தாலேலோ ஆறு கார்த்திகைப் பெண்களிடம் வளர்ந்தாய் முருகா தாலேலோ அழகிய தாமரை மலர்களிலே தவழ்ந்தாய் குமரா தாலேலோ தாலேலோ நீ தாலேலோ தாலேலோ நீ தாலேலோ ஆண் : ஆடுவதும் தொட்டிலடா அன்பு மகன் கட்டிலடா ஆடுவதும் தொட்டிலடா அன்பு மகன் கட்டிலடா பாடுவது வள்ளி அல்லடா என் கந்தையா ஏழையுடன் பள்ளி கொள்ளடா ஆண் : திருப்பாதம் நான் தாங்கத் தாலேலோ இந்தப் புவியாவும் நீ தாங்கத் தாலேலோ கந்தைய்யா வேலையா தாலேலோ என் தங்கையா முருகையா தாலேலோ நீ தாலேலோ……நீ தாலேலோ……