← Back

Pengalukkendroru Perumai Song Lyrics

Singers : S. P. Balasubrahmanyam and B. Sasirekha Music by : Shankar Ganesh Female : Pengalukkendru oru perumai undu Theriyaadhoo kanna Iru kangalil ondru pen kulam endru Puriyaadhoo kanna Kangalil ondru penn kulam endru Puriyaadhoo kanna…puriyaadhoo kanna Male : Engalukkendru oru kaaviyam undu Theriyaadhoo kannae Naangal maalaiyittaal thaan madhippu undu Puriyaadhoo kannae Female : Engal menagai pinnaal Vishwamithrar ponadhu Ethanai kevalamoo Male : Ungal samyukthai mattum Kudhirai yeri parandhu Ponadhu naanayamoo Female : Unga kovalan engal maadhavi Kaalil vizhundhadhu enna nadagamoo Male : Oru pavalan pinnae amaravathi Paadi thirinthathu kaaviyamoo..hoi Paadi thirinthathu kaaviyamoo…ahei Female : Enga mangamma Annaalil madhurai nagaril Singam pol aandathai ketkalaiyoo Male : Andha madhuraiyai aanda alliyai Adakka arjunan vandhadhai paarkalaiyoo Aaa…aa Female : Harichandran enbavan sondha manaiviyai Sandhaiyil vilai pesalaiyoo Male : Unga nallathangaalum Pettra kuzhandhaiyai Kinattril thooki veesalaiyoo Kinattril thooki veesalaiyoo Male : Haei haei Engalukkendru oru kaaviyam undu Theriyaadhoo kannae Female : Aan kuzhandhai endru Pirandha podhum Amma enbadhu engalai thaan Male : Andha kuzhandhai kooda Initial poda Nambhi iruppadhu engalai thaan Female : Indru indhiya naattai Aala piranthathu Valaiyal potta kaigal aiyaa Male : Andha mangaiyin kaigalil valaiyal Maatti vittadhum aadavan kaigal amma Haan aadavan kaigal amma Male : Bruhh bruhh Female : Pengalukkendru oru perumai undu Theriyaadhoo kanna Male : Naangal maalaiyittaal thaan madhippu undu Puriyaadhoo kannae…puriyaadhoo kannae…
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமண்யம் மற்றும் பி. எஸ். சசிரேகா இசை அமைப்பாளர் : ஷங்கர் கணேஷ் பெண் : பெண்களுக்கென்றொரு பெருமை உண்டு தெரியாதோ கண்ணா இரு கண்களில் ஒன்று பெண் குலம் என்று புரியாதோ கண்ணா கண்களில் ஒன்று பெண் குலம் என்று புரியாதோ கண்ணா ஆண் : எங்களுக்கென்றொரு காவியம் உண்டு தெரியாதோ கண்ணே நாங்கள் மாலையிட்டால்தான் மதிப்பு உண்டு புரியாதோ கண்ணே புரியாதோ கண்ணே………… பெண் : எங்கள் மேனகை பின்னால் விசுவாமித்திரர் போனது எத்தனை கேவலமோ ஆண் : உங்கள் சம்யுக்தை மட்டும் குதிரை ஏறி பறந்து போனது நாணயமோ பெண் : உங்க கோவலன் எங்கள் மாதவி காலில் விழுந்தது என்ன நாடகமோ ஆண் : ஒரு பாவலன் பின்னே அமராவதி பாடி திரிந்தது காவியமோ …ஹோய் பாடி திரிந்தது காவியமோ…ஹேய் பெண் : எங்க மங்கம்மா அந்நாளில் மதுரை நகரில் சிங்கம்போல் ஆண்டதை கேட்கலையோ ஆண் : அந்த மதுரையை ஆண்ட அல்லியை அடக்க அர்ஜுனன் வந்ததை பார்க்கலையோ ஆ … பெண் : ஹரிச்சந்திரன் என்பவன் சொந்த மனைவியை சந்தையில் விலை பேசல்லையோ ஆண் : உங்க நல்லதங்காளும் பெற்ற குழந்தையை கிணற்றில் தூக்கி வீசல்லையோ கிணற்றில் தூக்கி வீசல்லையோ ஆண் : ஹேய் ஹேய் எங்களுக்கென்றொரு காவியம் உண்டு தெரியாதோ கண்ணே பெண் : ஆண் குழந்தை என்று பிறந்தபோதும் அம்மா என்பது எங்களைத்தான் ஆண் : அந்த குழந்தைக்கூட இனிஷியல் போட நம்பி இருப்பது எங்களைத்தான் பெண் : இன்று இந்திய நாட்டை ஆளப்பிறந்தது வளையல் போட்ட கைகளைய்யா ஆண் : அந்த மங்கையின் கைகளில் வளையல் மாட்டி விட்டதும் ஆடவன் கைகளம்மா ஆடவன் கைகளம்மா…………. பெண் : பெண்களுக்கென்றொரு பெருமை உண்டு தெரியாதோ கண்ணா ஆண் : நாங்கள் மாலையிட்டால்தான் மதிப்பு உண்டு புரியாதோ கண்ணே புரியாதோ கண்ணே…………