← Back

Sindhanai Sei Manamae Song Lyrics

Singer : T. M. Soundararajan Music by : G. Ramanathan Male : Aayar kalaigal aruvathunaanginaiyum Mmm…mm…mm… Eeya unarvikkum em annai – Thooya urppalingu polval En ullathin ullae Iruppalingu vara thidar Male : Sindhanai sei manamae… Sindhanai sei manamae dhinamae…ae Male : Sindhanai sei manamae Seidhaal theevinai agandridumae Sivagaami maganai shanmuganai Male : Sindhanai sei manamae Seidhaal theevinai agandridumae Sivagaami maganai shanmuganai Sindhanai sei manamae… manamae… ae…ae Male : Senthamizhkkarul nyaana Dhesiga mei nyaana dhesiganai… Aa…aa…aa….aa….aa….aa….aaa…a.a…..aa… Haaa….aaa….aa….aaa….aa…aa… Male : Senthamizhkkarul nyaana Dhesiganai…sendhil Kandhanai vaanavar kaavalanai guhanai Male : Sindhanai sei manamae Seidhaal theevinai agandridumae Sivagaami maganai shanmuganai Sindhanai sei manamae… manamae… ae…ae Male : Santhadham moovaasai Saghadhiyil uzhandranai… Eee…ee…ee….ee….ee…. Male : Santhadham moovaasai Saghadhiyil uzhandranai Samarasa sanmaargha Neri thanai marandhanai Samarasa sanmaargha Neri thanai marandhanai Andhagan varum podhu Avaniyil yaar thunai Andhagan varum podhu Avaniyil yaar thunai Aadhalinaal indrae Arumarai paraviya saravana bhava guhanai Male : Sindhanai sei manamae Seidhaal theevinai agandridumae Sivagaami maganai shanmuganai Sindhanai sei manamae… manamae… ae…ae Male : Vadivelum mayilum thunai Vadivelum mayilum thunai Sol valamaar senthamilaal Sandhamum kandhanai paada Vadivelum mayilum thunai Male : Natarajan arul baalan Naan marai thozhum seelan Natarajan arul baalan Naan marai thozhum seelan Thadam maevum pozhil soozhulum Thanigai vaazhum parama gyaana gurubaran Male : Vadivelum mayilum thunai Sol valamaar senthamilaal Sandhamum kandhanai paada Vadivelum mayilum thunai Male : Thamizh maalai thanai chooduvaan Thamizh maalai thanai chooduvaan Kondrai thalir maalai malar maalai Japa maalaiyudan Sandha thamizh maalai thanai chooduvaan Kondrai thalir maalai malar maalai Japa maalaiyudan Sandha thamizh maalai thanai chooduvaan Male : Thaaba migu veppu vaadhamidu Pitha maana pini moithu udambodu Male : Thaaba mighu veppu vaadhamidu Pitta maana pini moithu udambodu Saarum uyir thunba saagaramuzhandru Saadhanai izhandhu varundhaa mun Saarum uyir thunba saagaramuzhandru Saadhanai izhandhu varundhaa mun Thaalaiyalithida venumena thudhi Paadarunaigiri naadhanazhaithida Dhayavudan isaindhu arul mazhai pozhindhu Male : Muthaitharu pathi thirunaghaiyena Mudhaladi udaitha thazhaitha karunaiyai Ninaindhu ninaindhu kavi malar thodutha Male : Thamizh maalai thanai chooduvaan Kondrai thalir maalai malar maalai Japa maalaiyudan Sandha thamizh maalai thanai chooduvaan Male : Sattrae sarindha kuzhalae Thuvala tharala vadam Thuttrae asaiya kuzhaiyoosalaada… Aa… aa… Male : Sattrae sarindha kuzhalae Thuvala tharala vadam Thuttrae asaiya kuzhaiyoosalaada… Aa… aa… Thuvar kol seivaai Nattrae nozhugha nadana singaara nadaiyazhaghin Pottraerirukka thalai alangaaram purappattadhae Thalai alangaaram purappattadhae Thalai alangaaram purappattadhae
பாடகர் : டி. எம். சௌந்தரராஜன் இசையமைப்பாளர் : ஜி. ராமநாதன் ஆண் : ஆயர் கலைகள் அறுவத்தினான்கினையும் ம்ம்ம்….ம்ம்….ம்ம்…. ஏய உணர்விற்கும் எம் அன்னை தூய உற்ப்பளிங்கு போல்வாள் என் உள்ளத்தின் உள்ளே..ஏ… இருப்பள்ளிங்கு வார திடர்…ஆஅ.. ஆண் : சிந்தனை செய் மனமே… சிந்தனை செய் மனமே தினமே….ஏ… ஆண் : சிந்தனை செய் மனமே செய்தால் தீவினை அகன்றிடுமே சிவகாமி மகனை சண்முகனை ஆண் : சிந்தனை செய் மனமே செய்தால் தீவினை அகன்றிடுமே சிவகாமி மகனை சண்முகனை சிந்தனை செய் மனமே….. மனமே…..ஏ… ஆண் : செந்தமிழ்க் கருள் ஞான தேசிகனை மெய் ஞான தேசிகனை… ஆ…ஆ…ஆ…ஆ…ஆ…ஆ…ஆ…ஆ… ஆ…ஆ…ஆ…ஆ…ஆ…ஆ…ஆ…ஆ… ஆண் : செந்தமிழ்க் கருள் ஞான தேசிகனை….. செந்தில் கந்தனை வானவர் காவலனை குகனை ஆண் : சிந்தனை செய் மனமே செய்தால் தீவினை அகன்றிடுமே சிவகாமி மகனை சண்முகனை சிந்தனை செய் மனமே….. மனமே…ஏ… ஆண் : சந்ததம் மூவாசை சகதியில் உழன்றனை… ஈ……ஈ…..ஈ…..ஈ……ஈ……. ஆண் : சந்ததம் மூவாசை சகதியில் உழன்றனை சமரச சன்மார்க்க நெறி தனை மறந்தனை சமரச சன்மார்க்க நெறி தனை மறந்தனை ஆண் : அந்தகன் வரும் போது அவனியில் யார் துணை அந்தகன் வரும் போது அவனியில் யார் துணை ஆதலினால் இன்றே அருமறை பரவிய சரவண பவ குகனை ஆண் : சிந்தனை செய் மனமே செய்தால் தீவினை அகன்றிடுமே சிவகாமி மகனை சண்முகனை சிந்தனை செய் மனமே….. மனமே……ஏ… ஆண் : வடிவேலும் மயிலும் துணை… வடிவேலும் மயிலும் துணை சொல் வளமார் செந்தமிழால் சந்ததமும் கந்தனைப் பாட வடிவேலும் மயிலும் துணை… ஆண் : நடராஜன் அருள் பாலன் நான் மறை தொழும் சீலன் நடராஜன் அருள் பாலன் நான் மறை தொழும் சீலன் தடம் மேவும் பொழில் சூழும் தணிகை வாழும் பரமஞான குருபரன் ஆண் : வடிவேலும் மயிலும் துணை சொல் வளமார் செந்தமிழால் சந்ததமும் கந்தனைப் பாட வடிவேலும் மயிலும் துணை… ஆண் : தமிழ் மாலை தனைச் சூடுவான் தமிழ் மாலை தனைச் சூடுவான் கொன்றைத் தளிர் மாலை மலர் மாலை ஜப மாலையுடன் சந்தத் தமிழ் மாலை தனைச் சூடுவான் கொன்றைத் தளிர் மாலை மலர் மாலை ஜப மாலையுடன் சந்தத் தமிழ் மாலை தனைச் சூடுவான் ஆண் : தாப மிகு வெப்பு வாதமொடு பித்த மான பிணி மொய்த்து உடம்போடு ஆண் : தாப மிகு வெப்பு வாதமொடு பித்த மான பிணி மொய்த்து உடம்போடு சாரும் உயிர் துன்ப சாகரமுழன்று சாதனை இழந்து வருந்தா முன் சாரும் உயிர் துன்ப சாகரமுழன்று சாதனை இழந்து வருந்தா முன் தாளையளித்திட வேணுமெனத் துதி பாடருணைகிரி நாதனழைத்திட தயவுடன் இசைந்து அருள் மழை பொழிந்து ஆண் : முத்தைத்தரு பத்தித் திருநகையென முதலடி உதைத்த தழைத்த கருணையை நினைந்து நினைந்து கவி மலர் தொடுத்த ஆண் : தமிழ் மாலை தனைச் சூடுவான் கொன்றைத் தளிர் மாலை மலர் மாலை ஜப மாலையுடன் சந்தத் தமிழ் மாலை தனைச் சூடுவான் ஆண் : சற்றே சரிந்த குழலே துவளத் தரள வடம் துற்றே அசைய குழையூசலாட… .. ஆ… ஆ…ஆஅ…. ஆண் : சற்றே சரிந்த குழலே துவளத் தரள வடம் துற்றே அசைய குழையூசலாட……. ஆ… ஆ…ஆஅ…. துவர் கொள் செவ்வாய் நற்றேனொழுக நடன சிங்கார நடையழகின் பொற்றேரிருக்க தலையலங்காரம் புறப்பட்டதே தலையலங்காரம் புறப்பட்டதே… தலையலங்காரம் புறப்பட்டதே…