← Back

Gangai Aatril Song Lyrics

Singer : P. Susheela Music by : Ilayaraja Female : Gangai aatril nindru kondu Neerai thedum pen maan ival Kannai moodi kaatchi thedi Innum engae selvaal ival Thannaiyae dhaan nambaadhu Povadhum yen pedhai maadhu Female : Gangai aatril nindru kondu Neerai thedum pen maan ival Female : Poi polavae Vesham mei pottadhu Andha meiyae poiyaai kondaal Orr aayiram Saatchi yaar koorinum Avai ellaam vesham endraal Female : Than kann seidha maayam Penn mel enna paavam Than nenjodu theeraadhu sogam Ipporaattam eppodhu theerum ini Female : Gangai aatril nindru kondu Neerai thedum pen maan ival Female : Poi maanaiyae Andru mei maan ena Andha seethai pedhai aanaal Mei maanaiyae Indru poi maan ena Indha kodhai pedhai aanaal Female : Poi nambikkai angae Veen sandhegam ingae Kan ovvondrum vevveru paarvai Endraalum yemaatram ondraanathu Female : Gangai aatril nindru kondu Neerai thedum pen maan ival Kannai moodi kaatchi thedi Innum engae selvaal ival Thannaiyae dhaan nambaadhu Povadhum yen pedhai maadhu Female : Gangai aatril nindru kondu Neerai thedum pen maan ival
பாடகி : பி. சுஷீலா இசை அமைப்பாளர் : இளையராஜா பெண் : கங்கை ஆற்றில் நின்று கொண்டு நீரைத் தேடும் பெண்மான் இவள் கண்ணை மூடி காட்சி தேடி இன்னும் எங்கே செல்வாள் இவள் தன்னையே தான் நம்பாது போவதும் ஏன் பேதை மாது பெண் : கங்கை ஆற்றில் நின்று கொண்டு நீரைத் தேடும் பெண்மான் இவள் பெண் : பொய் போலவே வேஷம் மெய் போட்டது அந்த மெய்யே பொய்யாய்க் கொண்டாள் ஓர் ஆயிரம் சாட்சி யார் கூறினும் அவை எல்லாம் வேஷம் என்றாள் பெண் : தன் கண் செய்த மாயம் பெண்மேல் என்ன பாவம் தன் நெஞ்சோடு தீராத சோகம் இப்போராட்டம் எப்போது தீரும் இனி பெண் : கங்கை ஆற்றில் நின்று கொண்டு நீரைத் தேடும் பெண்மான் இவள் பெண் : பொய் மானையே அன்று மெய் மான் என அந்த சீதை பேதை ஆனாள் மெய் மானையே இன்று பொய் மானென இந்த கோதை பேதை ஆனாள் பெண் : பொய் நம்பிக்கை அங்கே வீண் சந்தேகம் இங்கே கண் ஒவ்வொன்றும் வெவ்வேறு பார்வை என்றாலும் ஏமாற்றம் ஒன்றானது பெண் : கங்கை ஆற்றில் நின்று கொண்டு நீரைத் தேடும் பெண்மான் இவள் கண்ணை மூடி காட்சி தேடி இன்னும் எங்கே செல்வாள் இவள் தன்னையே தான் நம்பாது போவதும் ஏன் பேதை மாது பெண் : கங்கை ஆற்றில் நின்று கொண்டு நீரைத் தேடும் பெண்மான் இவள்