← Back

En Peyare Enakku Marandhu Song Lyrics

Singers : S. P. Balasubrahmanyam and Vani Jayaram Music by : M. S. Vishwanathan Male : Anaamikka anaamikka anaamikka Female : En peyarae enakku maranthu pona Indha vanantharathil ennai peyar solli Azhaithathu yaar neeya… neeya Female : Ennai oru minnal keettru Endrallava ninaithirunthen Nee eppadi adhil niranthira paai mudainthai Chorus : ……………………. Male : Enadhu yaathiraiyil ella manidhargalum Ellai karkalaai irukka Nee mattum enakku paadhai aaginaai eppadi Female : Paruva kaalangalaal pusttikkadha En thottam Un paarvaigalaal pushtithathae Male : Thee vizhunthaalum urugaadha en nenju Oru poo vizhundha podhu urugiyadhae Chorus : ………………………….. Female : Indha kaadhal megam thaan Manamennum erimalaiyil Mazhai sindhi mazhai sindhi adhil Ullaasa vanangalai urpathi seiyum Male : Idhaya rojaa sediyil Indha ottrai poo poothu vitaal Aththanai mutkalum udhirnthu pogindrana Female : Vaalibam yenthi paarkkum Thiruvodum idhu thaan Male : Vaalibam soodi paarkkum Kreedamum idhu than Chorus : ………………………….. Male : Mudhalil sapthangalukku Artham sariyaai vilagavillai Female : Ippodho maunathirukkum kooda Urai ezhudha mudigirathu Male : En kangal unnidam kaadhal pitchai Ketkkum amudha surabigal Amudha surabhigal pattini kidakalaama Un paarvaiyai pichaiyidu hmmm pichaiyidu Chorus : …………………………..
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமண்யம் மற்றும் வாணி ஜெயராம் இசை அமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் ஆண் : அனாமிகா அனாமிகா அனாமிகா பெண் : என் பெயரே எனக்கு மறந்து போன வனாந்தரத்தில் என்னை பெயர் சொல்லி அழைத்தது யார் நீயா நீயா…. பெண் : என்னை ஒரு மின்னல் கீற்று என்றல்லவா நினைத்திருந்தேன் நீ எப்படி அதில் நிரந்தரப் பாய் முடைந்தாய் குழு : லாலாலலலலலலலால்ல்லா…. ஆண் : எனது யாத்ரையில் எல்லா மனிதர்களும் எல்லை கற்களாய் இருக்க நீ மட்டும் எனக்கு பாதை ஆகினாய் எப்படி பெண் : பருவ காலங்களால் புஷ்ட்டிக்காத என் தோட்டங்கள் உன் பார்வைகளால் புஷ்ட்டித்ததே… ஆண் : தீ விழுந்தாலும் உருகாத என் நெஞ்சு ஒரு பூ விழுந்த போது உருகியதே குழு : லாலாலலலலலலலால்ல்லா..ஆஆஆஆ.. பெண் : இந்த காதல் மேகம்தான் மனமென்னும் எரிமலையை மழை சிந்தி மழை சிந்தி அதில் உல்லாச வனங்களை உற்பத்தி செய்யும் ஆண் : இதய ரோஜாச் செடியில் இந்த ஒற்றைப் பூ பூத்துவிட்டால் அத்தனை முட்களும் உதிர்ந்து போகின்றன பெண் : வாலிபம் ஏந்தி பார்க்கும் திருவோடும் இதுதான் ஆண் : வாலிபம் சூடி பார்க்கும் கிரீடமும் இதுதான் குழு : லாலாலலல லலலலால்ல்லா…….லாலாலாலா ஆண் : முதலில் சப்தங்களுக்கு அர்த்தம் சரியாய் விலகவில்லை பெண் : இப்போதோ மௌனத்திற்கும் கூட உரை எழுத முடிகிறது ஆண் : என் கண்கள் உன்னிடம் காதல் பிச்சை கேட்கும் அமுதசுரபிகள் அமுதசுரபிகள் பட்டினி கிடக்கலாமா உன் பார்வையை பிச்சையிடு…பிச்சையிடு குழு : லாலாலலலலலலலால்ல்லா..