← Back

Sir Ungalathan Sir Song Lyrics

Singer : T. M. Soundarajan Music by : M. S. Viswanathan Lyrics by : Kannadasan Male : Sir ungalaththaan sir Ungal uththaravindri ullae vanthaen Mannikkanum sir Naan ungalai polae padichchavan illai Sinthikkanum sir…. Male : Sir ungalaththaan sir….. Male : Ada ennanga saami kuzhappam Adha sollunga saami enakkum Ada ennanga saami kuzhappam Adha sollunga saami enakkum Male : Ellaam irukkuthu vasathi Idhil eppadi vanthathu asathi Ellaam irukkuthu vasathi Idhil eppadi vanthathu asathi Adhu kidakkuthu kazhutha vittu thallunga Nadakkira vazhiya melae paarunga Male : Sir ungalaththaan sir….. Ungal uththaravindri ullae vanthaen Mannikkanum sir Naan ungalai polae padichchavan illai Sinthikkanum sir…. Male : Paanai pidiththaval baakkiyamthaanga Padipadiyaaga osanthu vantheenga Paanai pidiththaval baakkiyamthaanga Padipadiyaaga osanthu vantheenga Avanga nerunga nenachchaalum samayaththilae Neenga etta mudiyaatha imayaththilae Etta mudiyaatha imayaththilae Male : Neenga kotti kuvichchaalum Satti nirrainjaalum Otti uravaada venaamaa Peththa magal kooda mattu mariyaathai Vittu pesum nilai varalaamaa Mariyaathai vittu pesum nilai varalaamaa Male : Pasiyum irunthuchchu rusiyum irunthuchchu Pasiyum irunthuchchu rusiyum irunthuchchu Paduttha neraththil thookam vanthuchchu Pasiyum irunthuchchu rusiyum irunthuchchu Paduttha neraththil thookam vanthuchchu Male : Padhavi vanthuchchu kaasu panamum vanthuchchu Padhavi vanthuchchu kaasu panamum vanthuchchu Pasiyum thookamum paranthiduchchu Pasiyum thookamum paranthiduchchu Male : Kaaichcha maramthaanga kalladi vaangum Nalla manamthaanga solladi vaangum Kaaichcha maramthaanga kalladi vaangum Nalla manamthaanga solladi vaangum Male : Pattaa theriyum suttaa theriyum Muttaal vaazhkkai melunnu puriyum Muttaal vaazhkkai melunnu puriyum
பாடகர் : டி. எம் சௌந்தரராஜன் இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் பாடலாசிரியர் : கண்ணதாசன் ஆண் : சார் உங்களத்தான் சார் உங்கள் உத்தரவின்றி உள்ளே வந்தேன் மன்னிக்கணும் சார் நான் உங்களைப் போலே படிச்சவன் இல்லை சிந்திக்கணும் சார்….. ஆண் : சார் உங்களத்தான் சார் ஆண் : அட என்னங்க சாமி குழப்பம் அத சொல்லுங்க சாமி எனக்கும் அட என்னங்க சாமி குழப்பம் அத சொல்லுங்க சாமி எனக்கும் ஆண் : எல்லாம் இருக்குது வசதி இதில் எப்படி வந்தது அசதி எல்லாம் இருக்குது வசதி இதில் எப்படி வந்தது அசதி அது கிடக்குது கழுத விட்டுத் தள்ளுங்க நடக்கிற வழிய மேலே பாருங்க ஆண் : சார் உங்களத்தான் சார் உங்கள் உத்தரவின்றி உள்ளே வந்தேன் மன்னிக்கணும் சார் நான் உங்களைப் போலே படிச்சவன் இல்லை சிந்திக்கணும் சார்….. ஆண் : பானைப் பிடித்தவள் பாக்கியம்தாங்க படிப்படியாக ஒசந்து வந்தீங்க பானைப் பிடித்தவள் பாக்கியம்தாங்க படிப்படியாக ஒசந்து வந்தீங்க அவங்க நெருங்க நெனச்சாலும் சமயத்திலே நீங்க எட்ட முடியாத இமயத்திலே எட்ட முடியாத இமயத்திலே ஆண் : நீங்க கொட்டி குவிச்சாலும் சட்டி நிறைஞ்சாலும் ஒட்டி உறவாட வேணாமா ஒட்டி உறவாட வேணாமா ஆண் : நீங்க கொட்டி குவிச்சாலும் சட்டி நிறைஞ்சாலும் ஒட்டி உறவாட வேணாமா பெத்த மகள் கூட மட்டு மரியாதை விட்டு பேசும் நிலை வரலாமா மரியாதை விட்டு பேசும் நிலை வரலாமா ஆண் : பசியும் இருந்துச்சு ருசியும் இருந்துச்சு பசியும் இருந்துச்சு ருசியும் இருந்துச்சு படுத்த நேரத்தில் தூக்கம் வந்துச்சு பசியும் இருந்துச்சு ருசியும் இருந்துச்சு படுத்த நேரத்தில் தூக்கம் வந்துச்சு ஆண் : பதவி வந்துச்சு காசு பணமும் வந்துச்சு பதவி வந்துச்சு காசு பணமும் வந்துச்சு பசியும் தூக்கமும் பறந்திடுச்சு பசியும் தூக்கமும் பறந்திடுச்சு ஆண் : காய்ச்ச மரம்தாங்க கல்லடி வாங்கும் நல்ல மனம்தாங்க சொல்லடி வாங்கும் காய்ச்ச மரம்தாங்க கல்லடி வாங்கும் நல்ல மனம்தாங்க சொல்லடி வாங்கும் ஆண் : பட்டா தெரியும் சுட்டா தெரியும் முட்டாள் வாழ்க்கை மேலுன்னு புரியும் முட்டாள் வாழ்க்கை மேலுன்னு புரியும்