← Back

Angum Ingum Song Lyrics

Singer : L. R. Eswari Music by : M. S. Vishwanathan Lyrics by : Kannadasan Female : Angum ingum onnu rendu Chinna chinna porul undu Paarththaal theriyaathu Entha pakkam ennavendru Sonna pinbu thedungal Idhuthaan vilaiyaattu…. Chorus : Angum ingum onnu rendu Chinna chinna porul undu Paarththaal theriyaathu Entha pakkam ennavendru Sonna pinbu thedungal Idhuthaan vilaiyaattu…. Female : Kaakkaiyin niramum sevalin niramum Kalanthathu onnu irukku Veettukku thevai aduppukku thevai Jappan desaththu sarakku…. Female : Coat-um soottum pottavar oruvar Paiyiniyilae adhu kidakku Koduppaar kelu illaiyindraal Nee eduththu kondavarai madakku Chorus : ……………. Female : Angum ingum onnu rendu Chinna chinna porul undu Paarthaal theriyaathu Chorus : Entha pakkam ennavendrum Sonna pinpu thedungal Idhuthaan vilaiyaattu….. Female : Maamiyin kaiyil irukkum athanaal Manakkum samaiyalum seivaal Mama muthugil maththalam pottu Raagam paadi selvaal Female : Thennaiyin arugil valarnthulla sediyin Adiyinilae athu irukku Deviyin senkol sottrinil mithakkum Thedungal udanae kidaikkum Chorus : ……………. Female : Angum ingum onnu rendu Chinna chinna porul undu Paarthaal theriyaathu Female : Kaiyalaviruppathu udhavikku varuvathu Kalvanaiyum adhu thiruththam Vellaiyar kaalaththil naattukku vanthathu Velaiyum villaiyum madangum Female : Achcham kondavar anumathi kettaal Arasin licence kidaikkum Aiyaa paavam kalviyin naayagan Paiyinilaa adhu irukkum Chorus : …………….
பாடகி : எல். ஆர். ஈஸ்வரி இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் பாடலாசிரியர் : கண்ணதாசன் பெண் : அங்கும் இங்கும் ஒன்னு ரெண்டு சின்னச் சின்னப் பொருள் உண்டு பார்த்தால் தெரியாது எந்தப் பக்கம் என்னவென்று சொன்ன பின்பு தேடுங்கள் இதுதான் விளையாட்டு…….. குழு : அங்கும் இங்கும் ஒன்னு ரெண்டு சின்னச் சின்னப் பொருள் உண்டு பார்த்தால் தெரியாது எந்தப் பக்கம் என்னவென்று சொன்ன பின்பு தேடுங்கள் இதுதான் விளையாட்டு…….. பெண் : காக்கையின் நிறமும் சேவலின் நிறமும் கலந்தது ஒண்ணு இருக்கு வீட்டுக்குத் தேவை அடுப்புக்குத் தேவை ஜப்பான் தேசத்து சரக்கு……… பெண் : கோட்டும் சூட்டும் போட்டவர் ஒருவர் பையினிலே அது கிடக்கு கொடுப்பார் கேளு இல்லையென்றால் நீ எடுத்துக் கொண்டவரை மடக்கு குழு : ………………… பெண் : அங்கும் இங்கும் ஒன்னு ரெண்டு சின்னச் சின்னப் பொருள் உண்டு பார்த்தால் தெரியாது குழு : எந்தப் பக்கம் என்னவென்று சொன்ன பின்பு தேடுங்கள் இதுதான் விளையாட்டு…….. பெண் : மாமியின் கையில் இருக்கும் அதனால் மணக்கும் சமையலும் செய்வாள் மாமா முதுகில் மத்தளம் போட்டு ராகம் பாடிச் செல்வாள் பெண் : தென்னையின் அருகில் வளர்ந்துள்ள செடியின் அடியினிலே அது இருக்கு தேவியின் செங்கோல் சோற்றினில் மிதக்கும் தேடுங்கள் உடனே கிடைக்கும் குழு : ………………… பெண் : அங்கும் இங்கும் ஒன்னு ரெண்டு சின்னச் சின்னப் பொருள் உண்டு பார்த்தால் தெரியாது பெண் : கையளவிருப்பது உதவிக்கு வருவது கள்வனையும் அது திருத்தும் வெள்ளையர் காலத்தில் நாட்டுக்கு வந்தது வேலையும் வில்லையும் மடக்கும் பெண் : அச்சம் கொண்டவர் அனுமதி கேட்டால் அரசின் லைசன்ஸ் கிடைக்கும் ஐயா பாவம் கல்வியின் நாயகன் பையினிலா அது இருக்கும்……. குழு : …………………